தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

அறுவடை

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ

28.9.2018)
அனைத்துப்பையிலும்
அதுதான் இருக்கிறது
அதற்காகத்தான்
உயிர்வளி நுழைந்து
திரும்புகிறது

அதுவே முதன்மையெனில்
அதுமட்டும் எப்படி
சாத்தியம்?

விழுந்து
விழிதிறக்காமல்
சிரித்துச்செழிக்காமல்
ஆயுதம் இருந்தும்
ஆவதென்ன?

விளைச்சலுக்கு
விழுக்காடு குறைவுதான்
அதற்காக
என்பதிலே
இருக்கிறது…….

பொருள்படப் பொழுதை
இழப்பதை விடுத்து
சாக்குப்பையோடு அழைவதில்
பொருளில்லை

எனினும்
அதற்கான அலைச்சலில்
பெருவிழுக்காடு
சுவாசித்துக்கொண்டிருக்கிறது

சுவாசம்
விலங்கிற்கும்
தாவரங்களுக்கும் பொதுவானது

அதுவா இலக்கு?
அதுவா பயணம்?

எச்சத்தால் பேசப்படும்
ஒரு
பேச்சுக்காகவே
ஐம்புலன்களளும் சுவாசமும்.

Series Navigationடாக்டர் அப்துல் கலாம் 87தொடுவானம் 224. கமிஷன்

Leave a Comment

Archives