இன்று காலையிலேயே வீட்டிலிருந்த அனைவரையும் குறை கூற ஆரம்பித்துவிட்டாள் பாரதி .
அதை அங்கே வைத்தது யார், இது ஏன் இங்கே இருக்கிறது என கேள்வியும் எரிச்சலுமாய் வந்தாள். அவள் கணவன் முதல் பேரன் பேத்தி வரை இப்போதெல்லாம் இந்த பாட்டு வழக்கமாகிவிட்டது.
மருமகள் மித்ரா மனதில் தான் கோப அலை “ஒண்ணு எந்திரிச்சு தானே செய்யணும், இல்ல அவங்கவங்க வேலைய அவங்கவங்களே பாத்துப்பாங்கண்னு அமைதியா இருக்கணும், சே”….
அதை தன் கணவன் வருணிடம் கிண்டலாக கொட்டினாள்
“உங்க அம்மா கண்ண மூடிக்கிட்டா உலகமே இருண்டுடுமா? நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே னு பாடாதது தான் குறை” நக்கலாய் சிரித்தாள்.
வருண் நல்ல humor sense கொண்டவன் தான் , தன் அம்மாவை பற்றியதாக இருந்ததால் சிரிப்பும் இல்லை, மித்ரா சொன்னது உண்மையாக இருந்ததால் மனைவி மீது கோபப்படவும் முடியவில்லை.
மெதுவாகவே கேட்டான் “உனக்கு அம்மாவை பிடிக்கலையா மித்ரா? “
எதிர்ப்பாராத இந்த கேள்வியில் அதிர்ந்தாள் மித்ரா.
எப்படி பிடிக்காமல் போகும், பாரதி அத்தை இப்போ கொஞ்ச நாளா தானே இப்படி….. இதுக்கு முன்னால எல்லோரிடமும் அன்பை பொழிஞ்சவங்களாச்சே…. வருண்-மித்ரா திருமணம் ஆன புதிதிலும் சரி , அடுத்தடுத்த வருடங்களில் மித்ரா பிள்ளைகள் பெற்ற போதும் சரி உள்ளங்கையில் வைத்து தாங்கியவள் பாரதி.
மித்ராவின் கண்கள் கலங்கின. இது வருண் எதிர்ப்பார்த்தது தான். உடனே சொன்னான் “மித்ரா, எனக்கு உன் நிலை புரியுது…
அறுவை சிகிச்சைக்கு அப்புறமா அம்மா கொஞ்சம் தளர்ந்துட்டாங்க முடங்கிட்டாங்க, அதோட விளைவா இருக்கலாம் ,வயோதிகமா கூட இருக்கலாம். நான் அம்மாவிடம் பேசி புரிய வைக்க முயற்சி பண்றேன்.அவங்க என்னை பெத்தவங்க , அவங்கள பாத்துக்குறது என்னோட கடமை.
மித்ராவின் மனதில் …….”அவ்வளவு இங்கிதமும் கனிவும் கொண்ட பாரதி அத்தையே இப்படி மாறினாள் என்றால், இள வயதில் இந்த சிறு விடயத்தை கூட பொறுத்துக் கொள்ளமுடியாத நானெல்லாம் நாளைக்கு என்னாவேன்?!?”
எண்ணங்கள் தாளாமல் மித்ரா குறுக்கிட்டாள்… நீங்க கடமைபட்டிருக்கீங்க , நான் கடன் பட்டிருக்கேன். நன்றிக்கடன். என்னை பாத்துக்கிட்டவங்கள நான் கவனிச்சுக்குற நேரம் இது. My turn to thank them.
வயதானவர்கள் குழந்தை போல , நாம எதுவும் சொல்ல போய் அவங்கள காயப்படுத்திய கூடாது. நான் பாத்துக்கறேன் , நீங்க கவலை படாதீங்க. என்றாள்
இருவர் கண்களிலும் கண்ணீர், முகத்தில் மலர்ச்சி
“நாம பாத்துக்கலாம் னு சொல்லுடா மித்தூ” என்றான் வருண்.
- இனிய நந்தவனம் – கனடா சிறப்பிதழ் வெளியீடு
- ஊரடங்குப் பூங்கா
- சீதைகளைக் காதலியுங்கள்
- எங்கே பச்சை எரிசக்தி ?
- பகல் கனவு
- விடியாதா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 255 ஆம் இதழ்
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- புரிதல்
- கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி
- தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!
- எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன் “ என்னும் பன்முக ஆளுமை !
- குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)
- குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)
- என்ன தர?
- ஒலிம்பிக் வளையங்களுக்குள் ஒளிந்திருக்கும் வளையங்கள்
- என்னவோ நடக்குது
- கனடா தேர்தல் முடிவுகள் – 2021 – லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
- கோதையர் ஆடிய குளங்கள்