கோயில்களில் கைபேசி

This entry is part 9 of 9 in the series 4 டிசம்பர் 2022

லதா ராமகிருஷ்ணன்

 

இன்று கோயில்களில் அலைபேசி கொண்டுவரலாகாது என்று இடப்பட்டி ருக்கும் உத்தரவு பலரால் கண்டனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகியிருக் கிறது.

 

எங்கே குற்றங்கள் நடக்குமோ அங்கேதான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இந்த உத்தரவுக்குத் தன் பாரபட்ச அரசியல்பார்வையில் வியாக்கியானம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

 

அலைபேசிகள் பயன் படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டிருக்கும் எல்லா இடங் கள், சூழ்நிலைகள் குறித்தும் இவர்கள் இதே ஆணவமான, அரை வேக்காட்டுத்தனமான பார்வையை முன் வைப்பார்களா தெரியவில்லை.

 

இப்படி மற்ற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து யாரும் பேசியிருக்கிறார்களா, பேசமுடியுமா என்றும் தெரிய வில்லை.

 

எந்த மதத்தையும் கேள்விக்குட்படுத்துவது என்ற பெயரில் தரக்குறைவாகப் பழிக்க யாருக்கும் உரிமை யில்லை; அது கண்ணியமான செயலுமல்ல.

 

மேற்கண்ட உத்தரவு அமுலுக்கு வந்துவிட்டதா, அதன்படி கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்லலாகாதா அல்லது பயன்படுத்தலாகாதா, பேசக்கூடாதா படமெடுக்கலாகாதா என்ற விவரங்கள் இன்னும் தெளிவாக வில்லை.

 

இந்தத் தடை நடைமுறையில் சாத்தியமா என்பதும் தெளிவாகவில்லை.

 

கோயில்களை கடற்கரையாகவும், கடைவீதியாகவும், காதலர் பூங்காவாக வும், வம்புமடமாகவும் பெண்களை நோட்டமிடக் கிடைத்த வாய்ப்பாகவும் இன்னும் பலவாகவும் பயன்படுத்தும் மனிதர்கள் உண்டு.

 

எவரொருவருடைய தனிமனித உரிமையும் அது அடுத்த வருக்கு ஊறு விளை விக்காதவரையில்தான் அப்படியி ருக்க முடியும். கோயில்களுக்கு மக்கள் வருவதற்கான முதன்மைக்காரணத்தை ஓரங்கட்டிவிட்டு அவற்றை எல்லோ ருக்குமான பொழுதுபோக்கு மனமகிழ் மன்றமாக மாற்றிவிட இயலாது.

 

பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களிலும் சில அடிப்படை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

 

இன்று பிரதானமான தொலைக்காட்சி சேனல்களாக உள்ள சன், விஜய், ஜீ தமிழ் முதலியவற்றில் ஒளிபரப்பப் படும் அபத்தமோ அபத்த மெகா சீரியல் களிலெல்லாம், கோயில்களில் கடவுளின் திருவுருவச்சிலையின் முன்னி லையில் சக்களத்தியை அல்லது பங்காளியைக் கொலைசெய்வதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கொள்ளையடிக்கக் கூட்டாளிகள் கூடிப் பேசு கிறார்கள். குழந்தைகள் கடத்தப்படுகின்றன. பிரசாதத்தில் விஷம் வைத்து அக்காக்காரி தங்கையை அல்லது அண்ணன்காரன் அண்ணியைக் கொல் கிறார்கள்.

 

இன்னும் எத்தனையோ அக்கிரமங்கள் கோயில்களில் தான் திட்டம் தீட்டப் படுவதாகத் தொடர்ந்த ரீதியில் காட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

 

கோயில்கள் என்றாலே சடங்கு சம்பிரதாயங்கள் மட் டுமே என்பதாக ஒரு மதம் மேம் போக்காய் குறுக்கப்பட்டு விடுவதும், அம்மதத்தின் தத்துவம், ஒருமையுணர்வு போன்ற பலப்பல அம்சங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக் கணிக்கப்படுவதும் தொடர்ந்து இந்த நாடகங்களில் இடம்பெறும் அம்சங்கள்.

 

குடிப்பதையும் புகைபிடிப்பதையும் காட்டிக்கொண்டே குடி குடியைக் கெடுக்கும் போன்ற வாசகங்களை கண்ணுக்குத் தெரியாத அளவு குட்டியாகத் திரையின் அடிப்பகுதியில் மின்னலெனக் காட்டி மறைப்பதைப் போல் இப்போ தெல்லாம் ‘பொறுப்புத்துறப்பு’ என்று ஒரு சிறு பத்தியும் இந்த நாடகங்களின் ஆரம்பத்தில் அவசர அவசரமாகக் காட்டப்படுகிறது.

 

அப்படியெல்லாம் யாரும் பொறுப்பேற்பைத் துறந்துவிட முடியாது.

 

முழுவிழிப்போடு இந்துமதத்தை இந்துக் கடவுளர்களை இழிவுபடுத்துவதற் கென்றே இத்தகைய சித்தரிப்புகள் இந்தத் தொடர்நாடகங்களில் இடம்பெறு கின்றனவா அல்லது ‘ஜாலியாக’ இந்துமதத்தைப் பொழுதுபோக்கு அம்ச மாகக் கையாள்கிறார்களா – தெரியவில்லை.

 

இத்தகைய காட்சிச் சித்திரங்கள் இளம் தலைமுறையி னர் மனதில் எத்தகைய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை உரியவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

எப்படியிருந்தாலும் காட்சி ஊடகங்களில் இடம்பெறும் பொழுதுபோக்கு நிகழ்ச் சிகளில் மதத்தை மேம்போக்காகக் கையாளும், சித்தரிக்கும் போக்கு கண்ட னத்திற்குரி யது.

 

மதத்தை எதிர்ப்பது, கேள்வி கேட்பது என்றால்கூட அதை in all seriousness, in right earnest, கண்ணியமாகச் செய்ய வேண்டும்.

 

அதற்கு ஒரு தார்மீகத் திராணி வேண்டும்.

 

Series Navigationயாருக்கு மாப்பிள்ளை யாரோ…
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *