இரா. ஜெயானந்தன்
அவள்
அவனின் இருட்டை
சுமந்து சென்றாள்
பண்ணிரண்டு வயதில் .
சொல்ல முடியா
வலி
இதயம் முழுதும்
ஊர்ந்து செல்ல
நான்கு கால்கள்
மிருகத்தை விட
கேவலமாக
பார்க்கப்பட்டாள்
சமூகப்பார்வையில்.
இருட்டில் மறைந்த
ஆணை பார்க்க
மீண்டும் அவள்
முயலவில்லை.
ஏனோ எல்லா
ஆண்களின் முகங்களிலும்
காம விலாசம் பார்த்து
பயந்தாள் சிறுமி.
இருட்டைக்கண்டு
அலறினாள் அலறினாள்.
மசூதிக்கு சென்றார்கள்.
மாரியம்மன் கோயில்
பேச்சி அம்மனிடம் வேண்டினார்கள்
பெண்ணை பெற்றவர்கள்.
சிறுமியின் கண்கள்
இருட்டைக்கண்டால்
கண்ணீர் வடித்தது.
வீட்டின் மூலையில்
அடைந்தவள்
பிறகு
வெளியே வரவே இல்லை.
ஆண்களின்
இருட்டு
பெண்மையை விழுங்குமா!
இரா. ஜெயானந்தன்