This entry is part 1 of 8 in the series 24 மே 2026

தொடல்  

******************

இடைவிடாமல் பெய்த மழை
பாய்ச்சிய   ஈரம்  மிகுந்த தோட்டத்தில்
தனியாயிருந்தன வேப்பமர இலைகள்
ஒரே ஒரு கிளி கிளையில்
மெல்ல அமர்ந்தாலும் போதும்
ஒரு அசை காற்று விசை மிகுந்தாலும் போதும்
சரிந்திருக்கும் அச்சிறு இலைமேல்
தளும்பிய மழைச் சொட்டு ஒன்று
பூமி அடைந்திருக்கும்.

  – பா.சத்தியமோகன்

Series Navigation    நிம்மதி