This entry is part 6 of 10 in the series 18 அக்டோபர் 2026

வசந்ததீபன்

வானம்  பறந்து கொண்டிருக்கிறது

பூமி  ஓடிக்  கொண்டிருக்கிறது

துயரத்தைச்  சொல்லும்  வாய்கள்  பூட்டப்படுகின்றன

வலியை  வெளிப்படுத்தும்  கண்கள்  அடைக்கப்படுகின்றன

தகிக்கும்  பெருமூச்சு  விசுரூபிக்கிறது

தோற்பதற்கு  எதுவுமில்லை

ஜெயிப்பதற்கு  எதுவுமில்லை

கண்ணீரும்  குருதியும்  வெள்ளமாகப்  பாய்கிறது

பசிஓலங்கள்  பேரிரைச்சலாய்  ஒலிக்கிறது

தேசம்  அகதியாய்  வாழ்கிறது

மனிதர்கள்  வேட்டையாடப்படுகிறார்கள்

மிருகங்கள்  கோலோச்சுகின்றன

எரிந்து  கொண்டிருக்கிறது  காலம் 

பூக்களை  ரசித்துக்  கொண்டிருக்கிறீர்கள்

சாம்பலாகப்  போவீர்கள்  பூக்களும்  நீங்களும்

அழிய  மாட்டேன்  என்கிறது

நினைவுகள்

பறவையின்  சிறகாய்  இருந்திருக்கலாம்

மரத்தின்  வேராய்  இருந்திருக்கலாம்

பூவாய்  இருந்து  கழியுது  வாழ்வு.

Series Navigationபுகைமூட்டம்நோயல் நடேசனின் அசோகனின்  வைத்தியசாலை  –     நாவல் — வாசிப்பு அனுபவம்