இந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்

This entry is part 26 of 26 in the series 13 ஜூலை 2014

பிரகாஷ் பிறப்பால் நான் ஒரு இந்து. இந்து மதத்தில் பல்வேறு குறைகள் இருப்பினும், அவை என்னை பாதித்த்தில்லை. அதனால் அவை பற்றி நான் அதிகம் சிந்தித்த்தும் இல்லை. ஆனால் என்னை அதிகம் பாதித்தது இந்துக்களிடமிருக்கும் திருமணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் வழக்கம். ஜோதிட சாஸ்திரம் முதலில் தட்பவெட்ப சூழ்நிலையை முன்கூட்டி அறிய உருவாகிய சாஸ்திரமாகும். தட்பவெட்ப சூழ்நிலைகள் பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை ஒட்டி அமைகின்றது. பூமி சுரியனைச் சுற்றி வருகிறதன்றறியும் […]

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1

This entry is part 19 of 26 in the series 13 ஜூலை 2014

        (Michael Baigent) இதுதான் மெய்யியல் என்று மெய்யியலுக்கு திட்டவட்டமான வரையறை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. பொருட்களின் உண்மை குறித்து ஆய்வது மெய்யியல் என்கிறார் திருவள்ளுவர். கண்ணால் கண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்மிடம் ஒரு முதுமொழி உண்டு. இவ்விடத்து மெய் என்பது உண்மை, என்ற சொல்லுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆனால் உண்மை மட்டும்தான் மெய்யியலா? எது உண்மை? உண்மையை […]

நான் தான் பாலா ( திரை விமர்சனம்)

This entry is part 18 of 26 in the series 13 ஜூலை 2014

    இயக்கம்: கண்ணன். ஓளிப்பதிவு : அழகிய மணவாளன். இசை: வெங்கட் கிருஷி. பாடல்கள்: அமரர் வாலி, நா.முத்துகுமார், இளையகம்பன். கலை: விஜயகுமார். நடிப்பு: விவேக், வெங்கட்ராஜ், தென்னவன், ஸ்வேதா, சுஜாதா, செல் முருகன், மயில்சாமி. நேரம்: 133 நிமிடங்கள். ____________                           ____________________________ அழுத்தமான கதை ஒன்று, சரியான திரைக்கதை, பாத்திரப்படைப்புஇல்லாத கோளாறால், அந்தரத்தில் தொங்குகிறது. அதை இன்னமும் இறுக்கி, இறுதி ஊர்வலத்திற்கு அனுப்புகிறது, புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குனரின் ஆசுவாச முயற்சி. விவேக்கின் கதை […]

வயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.

This entry is part 17 of 26 in the series 13 ஜூலை 2014

V.R.மோகன் “பிள்ளைய சேக்க வந்திருக்கீங்களா சார்?” என்று கேட்ட ஓட்டுனரிடம், “இல்லீங்க, நான் தான் சேர வந்திருக்கேன்” என்று சொன்னேன். இதற்குப் பிறகு எட்டிமடை ரயில்வே கேட்டை தாண்டி விருந்தினர் விடுதியில் என்னை விடும் வரை ஓட்டுனர் என் பக்கம் திரும்பவே இல்லை, திரும்பிய நேரத்தில் குழம்பிப் போயிருந்த முகம் தெரிந்தது. நானும் விளக்கவோ மேலும் விவரிக்கவோ இல்லை. நுழைவு வாயிலில் செக்யூரிட்டிகள் புதிராகப் பார்த்து உள்ளேயிருந்து வந்த லிஸ்டில் பெயர் இருக்கிறதா என்று சோதித்து அனுமதித்துகொண்டிருந்தனர். […]

முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)

This entry is part 15 of 26 in the series 13 ஜூலை 2014

  இயக்கம்: ராம்குமார். இசை: சீயான் ரோல்டன். ஒளிப்பதிவு: பி.வொ.சங்கர். எடிட்டிங்: லியோ ஜான் பால். நடிப்பு: விஷ்ணு விஷால், ஆனந்தராஜ், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ். நேரம்: 148 நிமிடங்கள்.   அழுத்தமில்லாத கதையை, சிரிப்பூக்களால் நிரப்பி, புன்னகைக் கதம்பமாக ஆக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமாருக்கு வாழ்த்துக்கள். இரண்டரை மணிநேரம், கதையை இழுத்து ரசிகனின் பொறுமையைச் சோதித்த குற்றத்திற்காக, திரைக்கதை தேர்வில் பெயில். இசைஞானியும் இசைப்புயலும் சேர்ந்த கலவையாக முத்திரை பதித்திருக்கும் இசைத் தென்றல் சீயான் […]

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11

This entry is part 16 of 26 in the series 13 ஜூலை 2014

இலேசான கைநடுக்கத்தைச் சமாளிக்க முயன்றவாறு ராமரத்தினம் அந்த உறையை வாங்கிப் பார்த்தான். அதன் மீது ரமணியின அலுவலக முகவரி முத்துமுத்தான கையெழுத்தில் காணப்பட்டது. அவனுள் குப்பென்று ஒரு சூடு பரவி முகம் வியர்க்கலாயிற்று. ‘மாலாவின் கையெழுத்து!’– பாதிக்கு மேல் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. “என்னப்பா பிரமிச்சுப் போய் உக்காந்துண்டிருக்கே? உன் தங்கை அந்த மாலாவோட கையெழுத்துதானே அது?” “ஆமா, சார்.” “அதுக்குள்ள இருக்கிற லெட்டரை எடுத்துப் படிச்சுப் பாரு.” அவன் அப்படியே செய்துவிட்டு நான்காக மடிக்கப்பட்டிருந்த கடிதத்தைப் […]

வேலையத்தவங்க

This entry is part 20 of 26 in the series 13 ஜூலை 2014

“என்னாகாலையிலேயேசட்டையைமாட்டிகிட்டுகிளம்பிட்டிங்க?” காலைமிதியடியில்நுழைத்துக்கொண்டிருந்தவன், ”பொறப்படச்சவேகேட்டுட்டஇல்ல: போனகாரியம்உருப்பட்டமாதிரிதான்” என்றேன். ”ஆமா, ஏதோபொண்ணுபாக்கப்போறமாதிரிதான்சொல்றீங்க; யாராவதுதேடிகிட்டுவந்தாஎங்கபோயிறிக்கிங்கன்னுசொல்லணும்லஅதுக்குதான்கேட்டேன்’ என்றாள்என்மனைவி. ”போனவாரம்நடந்தகூட்டத்துக்குகொஞ்சம்பேருவரல; அதான்ஏன்னுகேட்டுட்டுவரலாம்னுபோறேன்.” ஞாயிறுதானேவீட்டில்ஏதாவதுவேலைகளைப்பார்க்கலாமேஎன்றஆதங்கம்தான் அவளுக்கு. என்னவேலை? படித்தபுத்தகங்களைஒழித்துஅல்லதுஒதுக்கிவைக்கலாம்; இருசக்கரவாகனத்தைத்துடைக்கலாம்; தூசிபடிந்துள்ளமின்விசிறியைத்துடைக்கலாம்; பூச்செடிகளைச்சுற்றிக்களைஎடுத்துத்தண்ணீர்தேங்கக்குழிபறிக்கலாம்என்பனபோன்றவைதான். ”கூடஅவங்கரெண்டுபேரும்வராங்கஇல்ல?” என்றுகேட்டவளுக்கு “ஆமாம், ஆமாம்” என்றுபதில்சொல்லியவாறேவெளியில்வந்தேன். காலைநேரக்காற்றில்இருசக்கரவாகனத்தில்பயணிப்பதுமிகவும்சுகமாகஇருந்தது. மணிஏழாகியும்கூடசிலவீடுகளில்பெண்கள்நைட்டியுடன்வெளியில்வந்துவாசலுக்குத்தண்ணீர்தெளித்துக்கொண்டிருந்தனர். வாசலுக்குச்சாணம்போடும்பழக்கம்சுத்தமாகஇப்போதுபோய்விட்டது. கிராமங்களில்கூடதார்மற்றும்சிமெண்ட்சாலைகள்வந்துவிட்டதால்அங்கும்தண்ணிர்தெளிப்பதேவழக்கமாய்விட்டது. தவிரஇப்போதுமாடுகளேகுறைந்து விட்டதே? மேய்ச்சல்தரைகளெல்லாம்கட்டிடங்கள்ஆகிவிட்டன. பால்பாக்கெட்பழக்கமாகிவிட்டது. வேகமாககிரிக்கெட்மட்டையையும்ஸ்டம்ப்குச்சிகளையும்தூக்கிக்கொண்டுஎதிரேசிலசிறுவர்கள்ஓடிவந்தனர். வேகத்தைசற்றுக்குறைத்தேன். இவர்களுக்குப்பம்பரம், கிட்டிப்புள், போன்றவைஎல்லாம்தெரியவேதெரியாதுஎன்றுஎண்ணினேன். பழையபாரம்பரியவிளையாட்டுகள், உடை, உணவுமொழிஎல்லாமேமாறிவிட்டன. இதுஎங்கேபோய்முடியும்என்பதைநினைத்துப்பார்த்தால்அச்சமாகத்தான்உள்ளது. ’அவங்கரெண்டுபேர்’ என்றுஎன்மனைவிகுறிப்பிட்டவர்களில்ஒருவரானகதிரவன்வீட்டின்முன்னால்வண்டியைநிறுத்தினேன். வாசலில்முனைவர்கதிரவன்எனும்பெயர்ப்பலகைஅழகாகஇருந்தது. அவர்தான்எங்கள்இலக்கியஅமைப்பின்செயலாளர்; நான்தலைவர். சத்தம்கேட்டுவெளியில்வந்தவர் ”என்னபோலாமா?” என்றுகேட்டுவண்டியின்பின்னால்உட்கார்ந்தார். ”அவர்கிட்டபேசிட்டிங்களா?” என்றுகதிரவன்கேட்க ”பேசிட்டேன், அவர்வீட்டுவாசல்லவண்டிலேதயாராஇருப்பாரு” என்றுபதில்சொல்லியவாறேவண்டியைக்கிளப்பினேன். இப்போதுகதிரவன்கேட்டதுஎன்மனைவிசொன்னஅவங்கரெண்டுபேரில்இரண்டாவதுநபரானசிவராமன்என்பவர். தனியார்நிறுவனத்தில்பணியாற்றும்அவரும்நல்லஇலக்கியஆர்வமுள்ளவர். […]

சாகசக்காரி ஒரு பார்வை

This entry is part 21 of 26 in the series 13 ஜூலை 2014

    கவிஞர் தான்யாவின் இக்கவிதைகள் சாகசக்காரி பற்றியவை மட்டுமல்ல. மதம் இனம் மொழி கலாச்சாரம், காதல், பிரிவு தனிமை தேசம், குடும்பம் சார்ந்து சாகசக்காரியைப் ”பற்றியவை பற்றி” அவரின் மொழியில் ஒரு சரளமான வெளிப்பாடு.   புலம்பெயர் பெண்களின் கவிதைகளில் தான்யாவின் கவிதைகள் குடும்ப உறவில் உள்ள முரண்களைப் பதிவு செய்கின்றன. குடும்பம் ஒரு அதிகார மையமாகத் தன்னைக் கட்டுப்படுத்துவதையும் அதையும் மீறி அந்த சாகசக்காரி சாதிக்க முயல்வதையும் தன்னுடைய கவிதை மொழியில் சொல்லிச் செல்கிறார் […]

தொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

This entry is part 25 of 26 in the series 13 ஜூலை 2014

தொடுவானம்                                                                                                        டாக்டர் ஜி. ஜான்சன் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 83

This entry is part 24 of 26 in the series 13 ஜூலை 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Among the Multitude) (O You Whom I often & Silently Come) ஆயிரம் பேரில் ஒருத்தி அடிக்கடி வருவது உன்னிடம்     மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     ஆயிரம் பேரில் ஒருத்தி   ஆடவர், பெண்டிர் என்ற பேரளவு எண்ணிக் கைக்குள் யாரோ ஒருத்தி என்னைத் தேர்வு செய்ததைக் கூர்ந்து நான் […]