புதுவிலங்கு

This entry is part 23 of 26 in the series 13 ஜூலை 2014

                 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பூமியில் வாழ்ந்த டூடூ என்ற அபூர்வ பறவை இப்போது எந்த சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு அதிர்ச்சிதான் .மொரிசிஸ் அரசின் சின்னமாக அதன் இறப்பைச் சொல்லி அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஒரு புது விலங்கு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலான செய்தி. பூவிவெப்பமாதலும்,  காடழிப்பும் தட்பவெட்பநிலை மாறுதலும் பலஅரியஉயிரினங்களைக்கொன்று அழித்து வரும்நாளில் இதுவரை கண்டறியப்படாமல்இருந்தததும், இந்தநூற்றாண்டில் கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்குமான ‘டாப்ரியல்கபோமணி’ உலகுக்குத்தெரியவந்துள்ளதைவிலங்கினமேதைகள்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். டாப்பியாஎனும்விலங்குவகையில்ஒருபுதுவிலங்குவகையாகஇதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைஅறிவித்தவிஞ்ஞானிகள், விலங்கினமேதைகள்பலஅறியவகைவிலங்கினங்கள்அறிந்துவரும்நாளில்புதுவகைவிலங்குகண்டுபிடிப்புஎன்பதுஅழிவின்விளிம்பில்உள்ளவிலங்குகளைக்காப்பாற்றவேண்டும்என்றஅக்கறையையும்கொண்டுவந்துள்ளது. மலேசியா, கொலம்பியா, […]

பாவண்ணன் கவிதைகள்

This entry is part 22 of 26 in the series 13 ஜூலை 2014

    1.புன்னகையின் வெளிச்சம்   இறவாணத்து மூலையில் ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது அவளுக்கு   கழுவித் துடைத்த தருணத்தில் கருமையின் அடர்த்தி கரைந்து ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள் உதிர்ந்தன   ஆனந்தச் சிரிப்புகளும் அளவற்ற ஆசைகளும் பாட்டுத் துணுக்குகளும் பரிகாசப் பேச்சுகளுமாக ஓர் ஊஞ்சல் அசைந்தது   ஆதிநாள் தொடங்கி சூரியனைப் பற்றும் விருப்போடும் விண்ணைத் தொட்டு காற்றில் பறக்கும் கனவோடும் குழலாட குழையாட குட்டைப் பாவாடை சரசரக்க ஆடிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி […]

பிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்

This entry is part 14 of 26 in the series 13 ஜூலை 2014

எந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு  வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே. பதினாறாம் லூயி மன்னனாக பதவி ஏற்கையில் பிரெஞ்சு அரசாங்கம் நிதிநிலையில் தள்ளாடி கொண்டிருந்தது. இங்கிலாந்துடனான இடைவிடாத போர்கள் அதை பலவீனபடுத்தி இருந்தன. அந்த சூழலில் லூயி மன்னர் சில சீர்திருத்தங்களை செய்ய முனைந்தார். அரசின் செலவுகளை குறைக்க முனைந்தார். பணகாரர்களும் நில உடமையாளர்களும் ஏழைகளை விட குறைவாக வரி செலுத்தும் நிலை இருந்தது. அதை மாற்றி […]

(84) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 26 in the series 13 ஜூலை 2014

(84) – நினைவுகளின் சுவட்டில் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges – பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் […]

சிறை பட்ட மேகங்கள்

This entry is part 5 of 26 in the series 13 ஜூலை 2014

சிறை பட்ட மேகங்கள் – சு.மு.அகமது பிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான கயிறு.கயிறு காற்றில் லேசாக அசைந்தது என் கழுத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேன் என்பதாய். உள்ளங்கைகளின் மேல் தலை வைத்து இடது காலின் மேல் வலது காலை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்த எனக்கு தலையின் பாரம் தாங்க மாட்டாது கைகள் வலிக்கத் துவங்கியது.கழுத்தும் இறுகிப்போனதாய் தெரியவே சற்று ஒருக்களித்து படுத்தேன். […]

கொலைக்களன்களின் மறு உருவாக்கம்

This entry is part 4 of 26 in the series 13 ஜூலை 2014

பொதுவுடமையாளர்கள், பொதுவுடமை ஆதரவாளர்கள், தங்களுக்குப் பணம் தர மறுப்பவர்கள் என்று 5 லட்சம் பேரை 1965ல் இந்தோனொசியாவில் கொன்று குவித்தார்கள். தொடர்ந்து மனிதகுலம் இன, துவேச அழிப்பால் துயரங்களைத் தந்து வருவதைக் காணமுடிகிறது. இரண்டு உலக் யுத்தங்கள் முதல் முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை இவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிபர் சுகர்னோ தூக்கி எறியப்பட்டு சுகர்தோவின் ஆட்சி வந்தது. அந்த வகை கொலைச் செயலுக்கு பலர் பயன்படுத்தப்பட்டனர். அதில் அன்வர் காங்கோ என்ற சுமித்ராவைச் சார்ந்தவரைச் சுற்றி […]

நினைவுகளின் சுவட்டில் (84)

This entry is part 3 of 26 in the series 13 ஜூலை 2014

  ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges – பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கோடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ஹங்கரியர் தான் மறந்து போனது. […]

பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.

This entry is part 1 of 26 in the series 13 ஜூலை 2014

பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gsqRGM1JirU http://www.space.com/25288-supernova-survivor-massive-star-weathers-mega-blast-video.html +++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     காலவெளிக் கருங்கடலில் கோல மிடும் கட்டுமரத் தீவுகள் காலக்ஸி ஒளிமந்தை ! தேயும் பூத விண்மீன் ஈர்ப்புத்  திணிவால் மாய மாய் வெடித்து வாயுவும், தூசியும் சிதறிப் புதிய அண்டம் பிறக்கும்,  எழுபிறப்பு மனிதச் சுழற்சி போல் ! பிறப்பும், இறப்பும் […]

நெப்போலியன் நாடக நூல் வெளியீடு

This entry is part 2 of 26 in the series 13 ஜூலை 2014

  சி. ஜெயபாரதன், கனடா திண்ணை வலையில் பல மாதங்கள் தொடர்ந்து பதிப்பான  “ஆயுத மனிதன் ” [Bernard Shaw’s The Man of Destiny] நெப்போலியன் என்னும் பெயரில்  நாடக நூலாக வெளிவரப் போகிறது.

உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை

This entry is part 6 of 26 in the series 13 ஜூலை 2014

தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை சேர்க்கும் நல்லதொரு படைப்பு முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை, 630562 9442913985     படைப்பு மனம் வேறுபட்டது. மற்ற மனங்களை விட அது மிகவும் மாறுபட்டது. நுழையாத வாசல்களிலும் அது நுழைந்து பிரிக்கமுடியாத இழைகளையும் அது பிரித்து சேர்க்க முடியாத சேர்மானங்களைச் சேர்த்து, தொடர்பற்றவற்றை தொடர்புபடுத்தி, தொடர்புடையவற்றைத் தொடர்பிலாததாக்கி படைப்பு மனம் செய்யும் புதுமை  காலகாலத்திற்கும் விரிந்து கொண்டே போகின்றது. முழுவதும் எழுதிவிட்ட வள்ளவருக்குப் பின் […]