எங்கே செல்கிறது இயல்விருது?

This entry is part 7 of 26 in the series 13 ஜூலை 2014

புகாரி எங்கே செல்கிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பொன்னான இயல்விருது? வானுயர்ந்து தாய்த்தமிழ் வாசம் சுமந்து புலம்பெயர்ந்தும் தமிழ்த்தேன் வேர் பெயரா கர்வத்தோடு உயர்ந்து உயர்ந்து பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம் ஓரிரு வாசல்களின் முன் மட்டும் மண்டியிட்டுத் தாழ்ந்து பின்னெலும்பு மடிந்து அந்நிய மோகத் தனலில் தானே வலிந்து விழுந்து கருகிக் கருகி சிதையும் சிறகுகளோடு கீழ்நோக்கிப் பறக்கும் அவலம் ஏன்? நெஞ்சு பொறுக்குதில்லையே! * 28 ஜூன் 2014ல் நிகழ்ந்த 2013ன் இயல்விருது விழாவிற்கு […]

வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]

This entry is part 12 of 26 in the series 13 ஜூலை 2014

————————————————————————————————————————— நாள்: 20—7—2014, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி. இடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,கடலூர். ———————————————————————————————————- வரவேற்புரை: திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை நூல் வெளியிடுபவர்: முது பெரும் எழுத்தாளர் திரு ஜி. ஜி. இராதாகிருஷ்ணன், நெல்லிக்குப்பம். நூல் பெறுபவர்:    திரு வெ. பிரகாசம், முன்னாள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், நூல் ஆய்வுரை:  கவிஞர் திரு அன்பன் சிவா. கடலூர். ஏற்புரை:        திரு வளவ. துரையன், நூலாசிரியர். நிகழ்ச்சி நெறியாளர்; முனைவர் திரு […]

மொழிவது சுகம் ஜூலை 10 2014  

This entry is part 11 of 26 in the series 13 ஜூலை 2014

நாகரத்தினம் கிருஷ்ணா     உண்டாலம்ம இவ்வுலகம்:  செல்வேந்திரா   அச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன: இந்த மெய்யும் கரணமும் பொறியும் இருபத்தேழு வருடங்கள்  காத்தனன்; வந்தனம்; அடி பேரருள் அன்னாய்! வைரவீ! திறர் சாமுண்டி! காளி! சிந்தனை தெளிந்தேனிதை! யுந்தன் திருவருட்கென அர்ப்பனம் செய்தேன்! நண்பர் செல்வேந்திராவிற்கு எல்லோரும் வைத்துள்ள பெயர் ‘ஆசை’ நானும் ஆசை என்ற பெயரில்தான் அவரை அறிவேன். […]

தினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை

This entry is part 10 of 26 in the series 13 ஜூலை 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஒரு கதை சொல்லப்படுகிறது. உற்றுக் கேட்கிறேன், உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று மனம் இடித்துரைத்த பின்னும். அப்போது ஒரு குரல் என் காதில் விழுந்தது. “ஒரு அடையாள அட்ட வேணும் மேடம்.” ஏற்கனவே விண்ணப்பிச்சுட்டீங்களா? இல்ல இனிமே தான் விண்ணப்பிக்க போறீங்களா? வந்திருந்த இருவரில் ஒருவன் நெடு நெடுவென வளந்திருந்தான். அடர் கறுப்பு நிறம். மற்றவன் அவன் வளர்ந்தவனின் தோள் பட்டையில் தலை உயரம் ஒத்திருக்க நின்றான் மாநிறம். “இல்ல மேடம் […]

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12

This entry is part 8 of 26 in the series 13 ஜூலை 2014

முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 45, 46, 47, 48​ ​இணைக்கப்பட்டுள்ளன.   — வசன கர்த்தா திரு. வையவனைப் பற்றி.       வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று  சென்னையில்  புகழ்பெற்ற  யுராலாஜி   […]

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11

This entry is part 9 of 26 in the series 13 ஜூலை 2014

11. இலேசான கைநடுக்கத்தைச் சமாளிக்க முயன்றவாறு ராமரத்தினம் அந்த உறையை வாங்கிப் பார்த்தான். அதன் மீது ரமணியின அலுவலக முகவரி முத்துமுத்தான கையெழுத்தில் காணப்பட்டது. அவனுள் குப்பென்று ஒரு சூடு பரவி முகம் வியர்க்கலாயிற்று. ‘மாலாவின் கையெழுத்து!’ – பாதிக்கு மேல் அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. “என்னப்பா பிரமிச்சுப் போய் உக்காந்துண்டிருக்கே? உன் தங்கை அந்த மாலாவோட கையெழுத்துதானே அது?” “ஆமா, சார்.” “அதுக்குள்ள இருக்கிற லெட்டரை எடுத்துப் படிச்சுப் பாரு.” அவன் அப்படியே செய்துவிட்டு நான்காக […]