கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.

This entry is part 16 of 16 in the series 9 ஜூலை 2017

  3800 AGRO FLEET Autonomous Devices Spread out Uniformly across Oceans சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்க ஏகுது ! நாட்டு நடப்பு, வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக்கு மேகம் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் மட்டம், கனல் […]

வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20

This entry is part 2 of 16 in the series 9 ஜூலை 2017

(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)   கிஷன் தாசின் பங்களா. கிஷன் தாஸ் பீமண்ணாவுடன் நுழைகிறார்.  சமையல்காரர் நகுல் சமையலறையிலிருந்து எட்டிப் பார்க்கிறார். படித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ் தன் தலை உயர்த்தி ஒரு சிறுவனுடன் உள்ளே வரும் கிஷன் தாஸைக் கேள்விக்குறியுடன் நோக்குகிறான். “யாரப்பா இந்தப் பையன்? அவனுக்கு உடம்பு சரி இல்லையா? உடம்பில் யூகலிப்டஸ் ஆயில் தடவிக்கொண்டிருக்கிறானா, என்ன! இந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகத்தான் நீங்கள் ஜெய்ப்பூருக்குப் போனீர்களா?” என்று பிரகாஷ் கேள்விகளை அடுக்குகிறான். சோபாவில் விழாத குறையாய்ப் […]

”மஞ்சள்” நாடகம்

This entry is part 7 of 16 in the series 9 ஜூலை 2017

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கில் இருக்கைகள் நிரம்பிப் பார்வையாளர்கள் பலரும் நின்றபடி  பார்த்தார்கள் என்பதே முதல் திருப்திகரமான விஷயம்.”சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவுகட்டுவோம்”, என்னும் […]

தொடுவானம் 177. தோழியான காதலி.

This entry is part 3 of 16 in the series 9 ஜூலை 2017

            அவள் சொன்னது கேட்டு எனக்கு அதிர்ச்சி உண்டாகவில்லை. நான் அவளுக்காக காத்திருந்து ஆசையோடு திரும்பவில்லை. எங்களிடையே இருந்த உறவும் கடித வாயிலாக முறையாக தொடரவுமில்லை. தொலைவும் பிரிவும் முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன் நான் கல்லூரி சென்றபின் அங்கு உண்டான அனுபவங்களும் முக்கிய காரணம் எனலாம். ஒரு பெண்ணை மறக்க வைக்க இன்னொரு பெண்ணால் முடியும் என்பது என்னைப் பொறுத்தவரையில் உண்மை. அதனால்தான் அவள் அப்படி சொன்னது கேட்டு […]

ஒரு சொட்டுக் கண்ணீர்

This entry is part 4 of 16 in the series 9 ஜூலை 2017

  என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, வெள்ளைத் தொப்பி, அத்தனையும் மடிப்பறியாத கசங்கல். கைப் பக்குவத்துல் துவைத்த சுத்தம். அட! அன்வர்பாய் மாதிரி இருக்கிறதே. கொஞ்சம் வேகமாக நடந்தேன். 60 டிகிரி கோணத்தில் திரும்பிப் பார்த்தேன். அட! அன்வர்பாய் தான். ‘அன்வர்பாய்’  என்று கத்தினேன். திரும்பிப் பார்த்தார். ‘சீமானே’ என்று கட்டித் தழுவிக் […]

சொல்லாத சொற்கள்

This entry is part 5 of 16 in the series 9 ஜூலை 2017

  உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு   காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை   நஷ்டத்தை மட்டுமன்றி சமங்களில் லாபம் தந்து உறவு காத்தல் நாகரிகம் பேணல் பொறுமைக்கான அடையாளம் சேர்த்தல் எனப்பல பரிமாணங்கள் கொள்கின்றன அந்தச் சொல்லாத சொற்கள்   அதன் விலை சிலர் வாழ்கையையே பலியிடும் ஆனாலும் சொல்லாத சொற்களுக்கு சொன்ன சொற்களைவிட நன்மதிப்பு இருக்கத்தான் […]

அதிகாரம்

This entry is part 6 of 16 in the series 9 ஜூலை 2017

   சோற்றுக்கையின் பிசுபிசுப்பு  வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம்  பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது. சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. வாஷ்பேசின் குழாய் மூடியைத்திரும்பத் திரும்ப திறந்தும் மூடியும் பார்த்தான். இடது கையால் அதன் மேல் படாலென்று […]

English translation in poetical genre of Avvaiyaar’s poems

This entry is part 8 of 16 in the series 9 ஜூலை 2017

Dear editor,   VanaKkam. This is to inform Thinnai readers that my English translation in poetical genre of Avvaiyaar’s poems – except Gnaanak Kural – has been published by Cyberwit.net Publishers of Allahabad this month, under the heading All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess. Thanks.    

கவிதைகள்

This entry is part 9 of 16 in the series 9 ஜூலை 2017

அருணா சுப்ரமணியன்  தடயங்கள்…    நீலம் தெளித்த வான்வெளியில் சிறகசைத்து பறக்கும் நினைவுகளோடு மரங்கள் சூழ் மலைகளில் நெளிந்து திரியும் நீர்ச்சுனையில் நீந்தி பாறைகளில் தெறித்து வீழும்  அருவியில் எழும் அருவமாய் அத்துவானத்தில் அலைகிறேன் தடயங்களை அழித்துச்  சென்ற விரல்களின் தடங்களைத்  தேடி…     ************************** அழையா விருந்தாளி..   அழைப்புமணி அழுத்தவில்லை அனுமதி கோரவில்லை தாழிட்ட கதவை மீறி எப்படியோ உள்நுழைந்து ஆக்ரமித்து கொள்கின்றன யாருமற்ற தனிமையில் தினமும் என் தூக்கத்தை துரத்திடும் கவிதைகள்!! […]

‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

This entry is part 11 of 16 in the series 9 ஜூலை 2017

மணிமாலா   கடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த […]