பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..

This entry is part 46 of 46 in the series 26 ஜூன் 2011

பெண்களின் உலகில் அவர்கள் தன் முனைப்புடன் செயல்படுவது, முன்னேற்றத்தின் தனி பாதையை தேர்ந்தெடுத்து குடும்பச்சூழலிலும், வியாபாரத் தளத்திலும்  அவர்கள் முன்னேறுவவதைப்பற்றி வனஜா டேவிட்டின் “ சிலையைச் செதுக்கிய உளிகள்” , “ மாறுபட்ட மங்கை இவள்”  ஆகிய நாவல்களில் காணக்கிடைக்கிறது.  இவரின் சிறுகதைகளில் அவ்வகைப்பெண்களையும் குடும்பச் சூழலின் அவலங்களை ஏற்றுக் கொண்டு வாழ்கிற பெண்களையும் பார்க்கிறோம்.குடும்பத்தை நிராகரிக்கிற ஆண்களைக் காண்பிக்கிற போது சாபமிடுவதில்லை.  அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையிலிருந்து நம்பிக்கைத் துளிகளுக்காய் காத்திருக்கிறார்கள்.குடும்பத்தை அலட்சியப்படுத்தி வாழும் ஒருவனின் […]

பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு

This entry is part 45 of 46 in the series 26 ஜூன் 2011

இசையரங்குகளில்  அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் இசைக் கருவிகளுள் ஒன்று   மோர்சிங் ஆகும்.  தாள இசைக்கருவியான இது  முகர்சிங் என்றும் அழைக்கப்படும்.  கையடக்கமான இக்கருவியை வாயினால் கவ்விக்கொண்டு தாளச் சொற்கட்டுகளை (ததிகிடதோம் – தகதோம் ) நாவால் இசைத்து, இடையில் அமைந்த இரும்பாலான கம்பியின் முனையில் இரு விரல்களால் தட்டி இசை எழுப்புவர். இசை, நாட்டியம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்படுகின்றது. முன்னணிக்கலைஞர்களின் இசைநிகழ்வுகளில் இக்கருவியிசை இடம்பெறும். இக் கருவி உலகின் பழங்குடி இன மக்களிடமிருந்து தோன்றியிருக்கக் […]

இருள் குவியும் நிழல் முற்றம்

This entry is part 44 of 46 in the series 26 ஜூன் 2011

சல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சு சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் பற்றித் திரும்பியது. அதற்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு நாவலைப் படிக்க வேண்டாம் என்று நெடுநாள் வைத்திருந்ததாகவும், பின்னர் சில பக்கங்கள் படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்து நாவல் மிகவும் பிடித்துப் போனதாகவும் கோபால் ராஜாராம் சொன்னார். ரவிக்குமாரின் விமர்சன, தத்துவப் பார்வையின் தகுதிகள் குறித்து கோபால் ராஜாராமுக்குக் கேள்விகள் எதுவும் […]

திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்

This entry is part 43 of 46 in the series 26 ஜூன் 2011

சிங்களர்களே என்றாலே காடையர்கள் என்பதாக ஒரு பிம்பம் கடந்த் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களில் பதிந்து விட்ட ஒன்று. தமிழ் ஈழப் போராட்டத்தில் நியாய உணர்வு கொண்ட சிங்களவர்களும் இணைந்து பணி புரிய முடியாதபடிக்கு அவர்களிடமிருந்து தனிமைப் பட்ட நிலையில் இயக்கங்களும் போராட்டங்களும் இருந்து வந்திருக்கின்றன. இது பற்றி முதன்முதலில் உணர்ச்சி பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் விவாதித்தவர் பிரமிள். அவருடைய “ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை” புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நூலை இன்று படிக்கும்போது வருத்தம் […]

ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்

This entry is part 42 of 46 in the series 26 ஜூன் 2011

                            1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜன்ஸி என்ற நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமல் செய்யப்பட்டது.  அதன் பொருட்டு வந்த சில அபு அப்ரஹாம் கார்ட்டூன்களையும் கார்ட்டூன் போன்ற  இங்கே பகிர்ந்துகொள்கிறேன்                               […]

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

This entry is part 41 of 46 in the series 26 ஜூன் 2011

இரவு வானம் சூரியன்- பகலில் மத்தாப்பெரிக்கிறான். நெருப்பு பொறியில் துளைகளாகி போகிறது இரவு வானம் . களவாணி இதமான மௌனத்தை பெயர்த்து களவாடத் தூண்டும் இரவு வானில் சிதறி கிடக்கம் நட்சத்திரங்கள் மனசுக்காக … இருபதாயிரம் துளைகள் வியர்வை சொரிய எங்கேனும் இரு துளையுண்டா? இனியவளின் இதயம் நுழைய … நிலா முத்தம் கிண்ணம் நிறைய நீரெடுத்து கால்கள் நனைத்து கொள்கிறேன் நழுவி விழுகிறது நிலா ! புத்தகம் நல்ல புத்தகம் தேடி நாமெல்லாம் அலைகிறோம் வளர்த்தவர்கள் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6

This entry is part 40 of 46 in the series 26 ஜூன் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “மாந்தர் தாமிருக்கும் நிலைக்குக் காலச் சூழ்நிலையே காரணம் என்று எப்போதும் புகார் செய்வார். எனக்குச் சூழ்நிலை மீது நம்பிக்கை இல்லை. எழுந்து கொண்டு தமக்குத் தேவையான சூழ்நிலையை நோக்கிச் செல்பவரே உலகப் போக்கோடு ஒத்துப் போகக் கூடியவர். அவ்விதம் கிடைக்கா விட்டால் அந்தச் சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்பவர்.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Mrs. Warren’s Profession) நாடக ஆசிரியர் பெர்னாட் […]

பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா

This entry is part 39 of 46 in the series 26 ஜூன் 2011

செய்தி : புதுவை எழில் பாரீசிலும் சரி பாரில் வேறு எங்கும் சரி, விழாவைக் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை. இதற்கு விலக்காக நடை பெற்ற விழா, இலக்கிய விழா-இலக்கியத் தேடல் விழா! சூன் திங்கள் 4 -ஆம் நாள் பாரீஸ் 14 – ஆம் வட்டத்தில் உள்ள Maison de l’Inde என்ற இடத்தில் இவ்விழா நடந்தேறியது. இதில் மகா கவி தாகூரின் 150 -ஆவது ஆண்டு விழாவும் […]

21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5

This entry is part 38 of 46 in the series 26 ஜூன் 2011

(கட்டுரை –5) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)

This entry is part 37 of 46 in the series 26 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எழுகிறது ஒரு குரல் சுருண்டு சோம்பிக் கிடக்கும் என் அறையி லிருந்து ! உன்னோடு இன்னும் நான் வசிக்க முடியும் செத்த உடலோடு மெத்த மோகத் துடன் ! என்னை விரும்பு கிறாய் இன்னும் நீ ! உணவு சமைக்கிறாய் ! தின்ன எடுத்து வருகிறாய் ! என்ன நிலையில் இருந்தேன் என்பதை நீ மறந்து போனாய் ! ++++++++++++ பட்டப் பகலில் […]