காலமும் கணங்களும் – பிரேம்ஜி ஞானசுந்தரன் (1930 – 2014)

This entry is part 13 of 14 in the series 15 நவம்பர் 2020

முருகபூபதி – அவுஸ்திரேலியா தன்முனைப்பற்ற மனிதநேயவாதியின் மறைகரத்தால்  மலர்ந்த  பணிகள் ! நவம்பர் 17 ஆம் திகதி பிறந்த தினம்                                       எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் மு. கனகராஜன். மல்லிகை ஜீவா எனக்கு  கனகராஜனை  அறிமுகப்படுத்தியிருந்தார். இவ்வாறு அறிமுகங்களினாலேயே எனது நட்பு வட்டம் விரிவடைந்திருக்கிறது.  பெருகியிருக்கிறது. பிரேம்ஜியுடன் 1974 ஆம் ஆண்டிலிருந்து  நெருங்கியிருந்த நான், 05-02-2014 ஆம் திகதி வரையில்  அவருடன் தொடர்போடிருந்தேன்.  இவ்வாறு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக  எனது நெஞ்சத்திற்கு […]

பயணம் மாறிப் போச்சு

This entry is part 12 of 14 in the series 15 நவம்பர் 2020

குணா காலையில் எழுந்தவுடன் ஒரு சுற்று நடந்து வந்து மைக்ரோவேவில் பாலை சூடு பண்ணி ஒரு காபியை போட்டு எடுத்து ஆற அமர உட்காரும் பொழுது, மகன், மருமகள், பேரன், பேத்தியென்று அனைவரும் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். யோசித்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்… கல்லூரி முடித்து ராக்கெட் விடுகிறேன் பேர்வழியென்று வேலைக்குச் சேர்ந்து… ஒரு நகரியத்தோடு ஒன்றி தொடங்கிய வாழ்க்கை. அதது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டுமென்று, உடனேயே மைதிலி என் […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 11 of 14 in the series 15 நவம்பர் 2020

குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் சில கடலாழங்களில் சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில் பதுங்கியிருந்த சேங்கள்ளனை உடலெல்லாம் எண்ணெய் தடவி அவன் கையிலகப் படாமல் சிறைப்பிடித்த தன் பாட்டனாரின் பெருமையை இன்னும் அவ்வப்போது என் தாய் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சில குகைகளுக்குள் சூரியக்கதிர்கள் உள்நுழையும் சிலவற்றில் அனுமதி மறுக்கப்படும். உள் அப்பிய இருட்டில் அடுத்த […]

லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை

This entry is part 10 of 14 in the series 15 நவம்பர் 2020

கு.அழகர்சாமி      அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் க்ளிக்கிற்கு (Louise Gluck( 1943–) இந்த ஆண்டு 2020-க்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் கிடைக்கும் அவரின்  பல கவிதைகளின் வாசிப்பில்,   இருப்பின் இருண்மையில் வேர் விடும் பெரு விருட்சம் போல் அவர் கவிதைகள் தெரிகின்றன. அருவமும், படிமமும் அவர் கவிதைகளை வெகுவாகக் கடத்திப் போய் விடவில்லை. ”என் துன்பத்தின் இறுதியில் ஒரு கதவு இருந்தது; அதை நீ மரணம் என்று அழைத்தாய்” என்பது போன்ற படிமங்கள் அவர் […]

மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ

This entry is part 9 of 14 in the series 15 நவம்பர் 2020

    வில்லியம் ஆல்ஃப்ரெட் கெய்ல்ஸ்    ஆங்கில வழி தமிழில் : ட்டி. ஆர். நடராஜன்  உலகின் மிக உயரமான மரங்களில் ஒன்றாக  சிவப்பு மரங்கள் பூமியிலிருந்து 350 அடி உயரத்துக்கு வளர்கின்றன.  அவற்றின் வேர்கள் தனித்து விடப்பட்டால் பத்தடிக்கு மேல் போக முடியாது.  ஆகவே இவ்வளவு பிரமாண்ட மரங்களாய் வளர அவற்றின்  தனிமைப்படுத்தப்பட்ட  வேர்கள் உதவமாட்டா..  ஒவ்வொரு வேரும் ஒரு அங்குல தடிமனில் இருப்பதால்  அவை பக்கத்திலுள்ள மற்ற வேர்களுடன் தத்தம் பழுப்பு நிற விரல்களால்  பின்னிப் பிணைந்து பலமான அஸ்திவாரத்தை எழுப்பிக் கொண்டு வளர்கின்றன.  என்குடும்பமும் சிவப்பு மரங்களின் கூட்டம் போலத்தான்.    […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்

This entry is part 8 of 14 in the series 15 நவம்பர் 2020

  ஜானகிராமனின் தேர்ச்சி பெற்ற கையில் மனித சுபாவங்கள், சம்பாஷணைகளின் மூலமும், நிகழ்ச்சிகளின் மூலமும் உறுத்தாமல் சொல்லப்படுகின்றன. இங்கு உறுத்தாமல் என்று சொல்லப்படுவதின் நீட்சி இரைச்சலற்ற, பின் புலத்தில் அடங்கிய குரலில் விவரணைகளை வாசகனுக்குத் தருவதையே குறிக்கிறது. வியாபாரத்தினூடே ஒரு வெற்றிலை வியாபாரிக்கும் , வெற்றிலை வாங்குபவருக்கும் இடையில் நடக்கும் பேச்சுதான் கதை. நிகழ்ச்சிகள் மேல் ஏறிச் சவாரி செய்யும் சம்பாஷணைகளைக்  காண்பது ஓர் புத்தனுபவம். நாலு நாளைக்கு வரும் கவுளி வெற்றிலை ஒரே நாளில் உப்பிலியிடம் தீர்ந்து போனதன் மர்மம், அவருடைய வீட்டுக்கு வந்த  மாயவரம் மருமான் ஒரு தடவைக்குக் கால்கவுளி […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.

This entry is part 7 of 14 in the series 15 நவம்பர் 2020

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா ராம் இராஜேந்திரனின் காதலி  – கிருஷ்ணன் சுப்ரமணியன் திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு  – முனைவர் இராம். பொன்னு இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு அந்தக்காலத்து தீபாவளி – சுந்தர் வேதாந்தம் இனிய நினைவு – பாவண்ணன் கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு – பி.ஏ. கிருஷ்ணன் ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம் – மைத்ரேயன் ட்ரம்ப் விட்டுச் செல்லும் எச்சங்கள் – லதா குப்பா அமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது? – ஸ்டீஃபன் கின்சர் உயிர் பெற்றெழும் மறைந்த மொழிகள் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் கைச்சிட்டா – 7 – பாஸ்டன் பாலா தத்துவப் பூனை – டிம் ஆடம்ஸ் ; தமிழாக்கம்: […]

“மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா

This entry is part 6 of 14 in the series 15 நவம்பர் 2020

(குணச்சித்திர நடிகர் S.V. சுப்பையா அவர்களுடைய வாழக்கை மற்றும் திரைப்பயணம் குறித்த முழுமையான கட்டுரைகள் எதுவும் காணக்கிடைக்காத காரணத்தினால், அக்குறையினை நீக்கும் பொருட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இதிலுள்ள பல தகவல்களை S.V. சுப்பையாவினுடைய மூத்த புதல்வியிடம் நேரடியாகச் சென்று சேகரித்தேன். மேலும் இந்த ஆண்டானது S.V. சுப்பையாவின் பிறந்த நூற்றாண்டாகவும் அமைந்திருக்கின்ற காரணத்தினால் இக்கட்டுரையை வெளியிடுமாறு வேண்டிக்கொள்கிறேன். ) “மக்கள் கலைஞன்”: S.V. சுப்பையா முனைவர் ரமேஷ் தங்கமணி M.Sc., PhD., SLET., DIBT., DMLT., DOA., […]

சிலம்பும் மரபும் – நாட்டுப்புறச் சமய மரபும் சிலப்பதிகாரமும் 

This entry is part 5 of 14 in the series 15 நவம்பர் 2020

முனைவா் த. அமுதா                                                             கௌரவ விரிவுரையாளா் தமிழ்த்துறை முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி(தன்னாட்சி) வேலூர் – 2 damudha1976@gmail.com முன்னுரை              தமிழுக்குச் சிலப்பதிகாரமென்றோர் மணியாரம் படைத்தளித்த இளங்கோவடிகள், கற்புத் தெய்வம் கண்ணகியின் திறம் வியந்து காவியம் படைத்தாரா? அக்காலத் தமிழா் மரபுகளைத் தன்நோக்கில் வெளிப்படுத்தக் காவியம் படைத்தாரா? என்ற வினாக்கள் இக்காவியத்தைக் கற்போர் மனதில் தோன்றலாம். உலகக் காப்பியங்களுக்கெல்லாம் மலையாயது எனக் கொள்ளத்தக்க உத்தி அமைப்புக்களுடையது.  சிலப்பதிகாரம். அதோடு தொன்மைக் காலந்தொடங்கி, இளங்கோவடிகள் காலம்வரையிலான தமிழா் […]

ஒரு கதை ஒரு கருத்து -எழில்வரதனின் ஹைப்ரீட் குழந்தை

This entry is part 14 of 14 in the series 15 நவம்பர் 2020

அழகியசிங்கர்  ‘செம்புலி வேட்டை’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழில்வரதன் எழுதிய ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன்.  இது ஒரு சிக்கலான  கதை.  அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.              இயல்பாகவே இவர் கதைகளில் நகைச்சுவை உணர்வு அடிக்கடி தட்டுப் படுகிறது.  சுலபமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு போகும் பாங்கும் இவர் கதையில் தட்டுப் படுகிறது.             10 கதைகள் அடங்கிய இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் அளவுக்கு மீறிய பக்கங்கள்.  கிட்டத்தட்டக் குறுநாவல்கள் என்று சொல்லத்தக்கக் கதைகளாக எழுதி உள்ளார்.             இவர் கதை சொல்லல் முறையில் முக்கிய அம்சம் நகைச்சுவை […]