ரவி அல்லது முளைத்துக்கிடந்த அறிவுச் செடிகள் வறண்ட நிலமென கொள்ள வைத்தது கொஞ்சம் காகிதக் குப்பைகளை கையில் திணித்து. பிரபஞ்சம் யாவருக்கும் பொதுவென பொருள் கொண்ட பொழுதும் பெரு மதிப்புக் கருணையைக் காணவே இல்லை உதிர்ந்த சொற்களைத்தவிர. மரபணுவில் பொதிந்த மாறிடாத அன்பை இழந்த தருணமொன்றில் சிலையெனத்தான் வாய்த்தது மலர்தலின் உதிர்தலென. நகலென நாற்புறமோடிய பிள்ளையின் குறும்பினை பேருவகையாக ரசித்தபொழுது நோவினையொன்றிக்காக வழிந்தோடும் கண்ணீர் கடந்த வாழ்வில் புதிதினும் புதிதுதாம். யாவினும் வியத்தலாக நோவினையை எப்புறம் காண்கிலும் […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி பனி படர்ந்த குன்றுகளின் அருகிலிருந்த அடர்ந்த அந்த வனப்பகுதியில் கோபாலனின் கார் விரைந்துகொண்டிருந்தது. பெரிய வேன் ஒன்றும் உடன் வந்தது. வனத்தில் அவரது குலதெய்வக் கோவில் உள்ளது, வருடம் தவறாமல் சொந்தங்களோடு அங்கு வந்து பொங்கல் வைத்து கிடா வெட்டி படையலிடுவது அவரது வழக்கம். அம்மா இருந்த வரையில் தவறாமல் நினைவூட்டுவாள். தைமாதத்தில் இங்கு வந்து விடுவார்கள். தொண்ணூற்றைந்து வயது வரை அவளது வழிகாட்டலில் பூஜைகள் நடந்து வந்தது. அவள் […]
வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]
ரவி அல்லது எனக்குள் இருக்கும்உன் வார்த்தைகளுக்குசிறகுகள் முளைக்கிறதுதிடீரெனகாத்த மௌன இடைவெளியில். திசைக்கொன்றாகபறப்பதில்கலைப்பு மேலிடுகிறதுஆசுவாசங்கொள்ளஅருகாமையைஎதிர் நோக்கியதாகஅன்றாடங்கள்வெறுமையை மென்று. வாய்த்திருக்கும்தனிமைப் பாடில்இருப்பவைகள்யாவும் நேற்றுசொர்க்கமென சுகம்காண வைத்தவைகள்தான். வாசனையற்றவாழ்க்கைஉழல வைக்கிறது.நோதலின்நரகத்தில்விடியலுக்கானவரவின்வேண்டலாகஎஞ்சியிருக்கும்தெம்பில்இந்தஉயிர்எப்பொழுதும்உன் திசை நோக்கியத் தவத்தில். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
வெங்கடேசன் நாராயணஸ்வாமி பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா யமுனா தீரத்தில், ஆங்கோர் தோப்பிலோர் மரத்தடியில் யமுனைத்துறைவன் தன் காதலியைத் தேடிக் களைத்த முகத்துடன் தன் நெஞ்சமதில் பொங்கியெழும் காதலைத் தன் கண்களில் தேக்கி பேசவொண்ணாது அமர்ந்திருக்க, அதைக் கண்ட ராதையின் தோழி அவனருகில் சென்று பின்வருமாறு கூறலானாள்: (1) “மாறனின் கூர் மலர்க்கணைகள் மருட்டும் மங்கையவளை மாறகோடி ஈஶனாம் நீயே காக்கவல்லாய். உன்னையே உள்கி உருகி உன் நினைவாய் எப்போதும் உணர்ச்சிகளால் உவகையுற்று புறவுலகில் உன்னைக் காண ஏங்கியுன் பிரிவாலுழலும் உன் பிரியை […]
சோம. அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு […]
ரவி அல்லது குடிசையில்பூத்திருந்ததுஅழகெனவாசனைப்பூயாவரையும்ஈர்த்து.வேலிகளற்றாலும்முட்களின்நம்பிக்கையில்தான் இருக்கிறதுநிறைவாகஉயிர்த்து.
ரவி அல்லது நனைகிறதுநிழல்நடுக்கமாககுளத்தில்.காற்றிலெனஅறியாமல்.
ரவி அல்லது சகதியின் சேறு வாடையில் அய்யாவின் கால் தடங்களில் மூழ்கிய மனம் உழுவதற்கு விலா கோலியது. முற்புதர்கள் மண்டி முகடுகளாக வானம் பார்த்த தரிசு நிலத்தில் நின்றாடும் தண்ணீரின் நித்தியங்கள் யாவும் அய்யாவின் இளமையைக் கரைத்தது. நிலச் சமன்களில் நின்ற நீர் ஒப்படியாகவே அமைந்து நெகிழ்வில் நாற்றுகளைப் பற்ற இஞ்சாமல் தயாராக இருந்தது. இயந்திர இத்யாதிகளற்ற நாளில் வாரங்களைக் கடந்து வாழ்க்கையே சகதியாக தோல் இறுக்கி இன்று போலல்லாமல் தாளடி நடவு சாகுபடிகள் தாங்கொணா துயரங்கள் […]
வெங்கடேசன் நாராயணஸ்வாமி [ஶ்ரீம.பா.10.32.1] ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்: அரசே! அண்ணலைக் காணும் ஆவலால் அழுதனர் உரத்த குரலில், வஶீகரிக்கும் வகையில் பாடியும் பலவாறு புலம்பியும், மணிவண்ணனைக் காண இவ்வாறே இக்கோபிகைகள் ஏங்கியே தவித்தனரே! [ஶ்ரீம.பா.10.32.2] பட்டுப் பீதாம்பரமுடுத்தி பன்மலர் வனமாலையணிந்து பங்கயத் திருமுகம் தன்னில் மோஹனப் புன்னகை மிளிர மன்மதன் மயங்கும் மாறகோடி ஸுந்தரனாய் மதுஸூதனன் அவர்கள் முன்னே தோன்றினாரே! [ஶ்ரீம.பா.10.32.3] பிரிந்த உயிர் திரும்பி வர மிக உவகையுடன் வரவேற்கும் விறைத்தவுடல் போல் அருளால் ஆருயிர் […]