தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை! தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார். அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் […]
நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன். முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும். தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய். எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான். வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் . சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன குடும்பமா வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான். காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு அவனது உலகமே அழிந்ததாய் கதறினான் . நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும், குரூரமான […]
ஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’ புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் ஆபிசுக்கு வந்து அவற்றை என்னுடைய இல்லை. . . இல்லை. . . என்னுடைய மகளுடைய இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாயிற்று. இவற்றை எவ்விதம் விற்கப்போகிறேன் என மலைத்து மோட்டுவளையை இல்லை . . . . இல்லை. . . கூரையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். . டெலி ஃபோன் ஒலித்தது. […]
பெரும் நெருப்பு தணிந்து பனி நடக்கும் ஊரில் பஞ்சுமெத்தை விரித்து புற்கள் வரவேற்கும் கால்களை. கன்றிய இதயங்கள் இளகி முகம் பார்க்கும் மலர்களில். கூட்டு பறத்தலினூடே காற்றில் அசையும் புள்ளினங்களின் தேர்ந்த பாடலில் மயங்கி உயிர்கள் கழித்து விளையாடும். நிறைந்த குளங்களிலிருந்து குதித்துவிழும் மீன்கறிவாசம் பசியின் வயிறு தடவும். நிலவை தட்டில் பிசைந்து ஊட்டிய பாட்டி நினைவில் நின்று சிரிப்பாள், மனைவியின் உருவில் பேரப் பிள்ளைகளுடன். வடக்கின் குட்டானை கிழக்கின் நாருசிக்க ஒடியல் காயும் வாசலெங்கும். பஞ்சத்தில் வேரிறக்கி பயிர்கள் […]
அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும் சேர்த்து ஒரு தொகுப்பாக்க எண்ணமிருக்கிறது. திருவாளர்கள்: 1. மு.இராமநாதன், சென்னை 2. சைலபதி, சென்னை 3. நா.அனுராதா, மதுரை 4..சுமதிராம், கோவை 5. பாரதிவாணர் சிவா, புதுச்சேரி 6. பிரபாகர், […]
சூர்யா கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்கு கீழ் அணிந்திருந்தது அரைக்கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக் காரணம், அவர் அவரது கட்டை விரலை, வாய்க்குள்ளே வைத்து சூம்பிக் கொண்டிருந்தார். என்னதான் ஏராளமான மன நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தியிருந்தாலும், வாய்க்குள் பெருவிரலை வைத்து்க கொண்டு வித்தியாசமாக பேசும் அந்த இளைஞனின் வார்த்தைகளை […]
ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் 75 வயதை எட்டியுள்ளார். அவருடைய வாழ்வை நினைவு கூரும் கட்டுரை) தலைமுறைகள்தோறும் தமிழே வாழ்வு என்று தனித்து நிற்கும் இலட்சியப் புதல்வர்களைப் பெற்ற தமிழன்னையின் ஆயிரமாயிரம் தமிழ்ப்புதல்வர்களில் ஒருவர் என்று, மலேசியாவில் பெருமையோடு சொல்ல வேண்டியவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள். எளிய குடும்பத்தில் தோன்றி, எளிமையான வாழ்க்கையை வகுத்துக் கொண்டு தமிழுக்கும் தமிழர்க்கும் […]
ஜோனா லெஹ்ரர் ஒரு சின்ன கணக்கு.. ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒரு ரூபாய், பத்து பைசாக்கள் என்று வைத்துகொள்வோம். கிரிக்கெட் மட்டை பந்தை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றால், பந்தின் விலை என்ன? பெரும்பாலான மக்கள் உடனே மிக தைரியமாக பந்தின் விலை 10 பைசாக்கள் என்று சொல்வார்கள். பதில் தவறு. (சரியான பதில் பந்தின் விலை 5 பைசா. மட்டையின் விலை ஒருரூபாய் ஐந்து பைசா) கடந்த […]
சில விருதுகள்: ————— 1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012 ================================= பெற்றபடைப்புகள்: நாவல்கள்: ”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்) “நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு) சிறுகதைகள்: ’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்) “சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய பெரியவன் ( நற்றிணை) கவிதைகள்: “இறக்கி வைக்க முடியாத சுமை” எஸ்.பாபு ”அந்த நான் இல்லை நான்” பிச்சினிக்காடு இளங்கோ (ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது குழு, மணப்பாறை தமிழ்ச்சங்கம்) ============================================================================== 2. திருப்பூர் அரிமா […]
முனைவர் நா.இளங்கோ இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. மனிதகுல வரலாற்றைச் சிந்தனைகளின் வரலாறு என்றும் சிந்தனையாளர்களின் வரலாறு என்றும் வருணிக்கலாம். ஏனெனில் மனிதகுல முன்னேற்றம் காலந்தோறும் பல்வகைப்பட்ட சிந்தனையாளர்களின் தத்துவச் சிந்தனைகளின் ஊடாகவே கோர்க்கப்படுகின்றது. இதில் பொருள்முதல் வாதத்தின் முற்போக்கான பங்களிப்பு அரசியல் அரங்கிலும் பொருளியல் அரங்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதகுல வரலாற்றில், உலகின் பெரும்பான்மை மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் கருத்துமுதல் வாதம் சார்ந்த ஆன்மீகத்தின் பங்களிப்பு என்ன? சமூக மாற்றத்திற்கும் சமத்துவத்திற்கும் ஆன்மீகத்தில் […]