தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு. கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம். நிலாந்தன் சோலைக்கிளி யோ. கர்ணன் அ.முத்துலிங்கம் தமிழ்க்கவி மு. நித்தியானந்தன் சண்முகம் சிவலிங்கம் ந.இரவீந்திரன் ஸர்மிளா ஸெய்யித் தேவகாந்தன் பொ.கருணாகரமூர்த்தி ஏ.பி.எம். இத்ரீஸ் […]
பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. பதினெட்டாம் ஆண்டாகிய 2013இல் கவிஞர் சிற்பி இலக்கியவிருது பெற இரண்டு கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் இந்திரன் ஆகிய இருவரும் விருது பெறும் கவிஞர்கள் ஆவர். இருபதினாயிரம் ரூபாய் தொகையும், நினைவுக்கேடயமும் அளிக்கப்படவுள்ளன. எழுச்சிக்கவிஞராக அறியப்படும் காசி ஆனந்தன் ஈழநாட்டவர்; காசி ஆனந்தன் கவிதைகள், நறுக்குகள் முதலிய பல தொகுப்புகளைப் படைத்தவர்; தமிழ் உணர்வும், தமிழர் […]
இத்தோடு இணைத்து அனுப்பப்படும் நூல் வெளியீட்டு செய்தியை தயவுசெய்து பத்திரிகையில் பிரசுரித்து உதவவும். வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை […]
Sengadal, the Dead Sea – SCREENING IN TORONTO + DISCUSSION WITH DIRECTOR MONDAY, JULY 1, 2013 AT 1:30 P.M. YORK CINEMAS 115 York Blvd Richmond Hill, Ontario Canada L4B 3B4 For More information: sengadaltoronto@gmail.com 416. 727. 2391 […]
பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மெய்யப்பன் அறக்கட்டளைத் தலைவர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், சிலம்பொலி செல்லப்பனார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் அவ்வை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணன், எழுத்தாளர் ராசேந்திர சோழன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன், கவிஞர் பொன் செல்லமுத்து, […]
75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று அவர்களுடன் இணைந்து இளைஞர்கள்- மாணக்கர்களிடம் விழிப்புணர்வு உண்டாக்குதல் போன்ற எவ்வெவற்றை எங்களிடம் தமிழ் ஆர்வலர்களும்,சுவைஞர்களுமாகிய நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என சுருக்கமாக இருபக் கஅளவில் எழுத்து வடிவில் ஒரு வரைவுத் திட்டம் […]
தலைநகரில் பல நாடகங்களையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்த யதார்த்தா தற்போது ஒரு அறக்கட்டளையாகப் பதிவு பெற்றுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட யதார்த்தா அறக்கட்டளையின் சார்பில் ‘யமுனா சூத்ரா’ என்ற நாட்டிய விழா, இந்தியா ஹாபிடாட் சென்டரின் ஆதரவுடன் கடந்த ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் இந்தியா ஹாபிடாட் சென்டரின் ‘ஸ்டெயின் கலையரங்கில் நடைபெற்றது. 4 ஜூன் 2013 அன்று சுப்ரியா நாயக் ‘யமுனா’ என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார். வாய்ப்பாட்டு- பிரசாந்த் பெஹரா, மர்தலா- […]
சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு சீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகளின்” வெளியீட்டு விழா ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. தமிழ், இந்தி, உருது, நேபாளம் உள்பட 18 மொழி கலைச்சொல் அகராதிகள் வெற்றிகரமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. வீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சமூக காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டு […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்) பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன் உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி. நாள் : 15-06-2013, மாலை 5 மணி இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர். விருது பெறுவோர்: * அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர் ( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா […]
ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUE EASTHAM- E12 6SG மாலை 6 மணி எழுத்தாளர் சல்மா இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்.குறும்பட இயக்குனர்களான நெல்சன்,குவேரா சிவலிங்கம் ஆகியோர் நிகழ்வினை வழிப்படுத்துகிறார்கள். வேலை தினமாதலால், உங்கள் நேரத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு […]