இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பொதுவுடைமை பாடிய கவிஞர்கள் பொதுவுடைமைச் சிந்தனைகளை முதன் முதலில் பாடிய பெருமை மகாகவி பாரதியாரையே சாரும். பொதுவுடைமை இயக்கமோ, தொழிற்சங்க இயக்கமோ உறுதியாகக் கால் கொள்ளாத காலத்தில் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் விளைவாகப் பாடியவர் பாரதியார். ‘‘வையகத்தீர் புதுமை காணீர்’’(ப.,90) என்று ரஷ்யப் புரட்சியைப் பாடிய பாரதியார், ‘‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக் கொருபுதுமை’’ ‘‘எல்லாரும் ஓர் குலம் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வறுமையிற் செம்மை போற்றிய கவிஞர்கள் வறுமை மிகுந்த தமது வாழ்க்கையிலும் செம்மாந்த வாழ்க்கையினை இரு கவிஞர்களும் வாழ்ந்தனர். வறுமையின்றி மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பி அதனைத் தமது படைப்புகளில் பதிவு செய்தனர். தாம் சார்ந்த சமுதாயம் பசியின்றி, நோயின்றி வளமான வாழ்க்கையினை வாழ வேண்டும் என்று மகா கவியும் மக்கள் கவியும் விரும்பினர். நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் அகன்று […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை விதைத்த கவிஞர்கள் எந்த ஒரு காலத்திலும் படைப்பாளன் சமுதாய மக்களுக்கு அவநம்பிக்கையை ஊட்டுகின்ற விதத்தில் தனது படைப்புகளை படைத்தல் கூடாது. அவ்வாறு படைத்தால் அப்படைப்பாளன் அச்சமுதாயத்திற்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். விரக்தியான நிலையில் மனச்சோர்வடைந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் படைப்புகளைப் படைத்து, மக்களை வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டும். இது ஒவ்வொரு படைப்பாளனுடைய கடமையாகும். நல்ல கவிஞர்களுக்கான அடையாளமாக நம்பிக்கை […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தலைவர்களைப் பாடுதல் பாரதி தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தேசியத் தலைவர்களைப் பாராட்டிக் கவிதைகள் யாத்தார். காந்தியைப் பற்றிப் பாடும்போது, ‘‘வாழ்க நீ எம்மான் இந்த வையத்துள் நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி! மகாத்மா நீ வாழ்க! வாழ்க!’’ (ப.72) என்று வாழ்த்திப் பாடுகின்றார். இதனைப் போன்றே திலகர், தாதாபாய் நவ்ரோஜி, பாலகங்காதர திலகர், […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உழவரை மறக்காத உழவுக் கவிஞராக மக்கள் கவிஞர் விளங்கினார். உழவன் வாழ்வு உன்னத வாழ்வு என்று எழுதினார். அதனால்தான், ‘‘நல்லவர் செய்த செயல்களிலே – பயிர் நாட்டியமாடுது வயல்களிலே’’ என்று உலகத்தாருக்கு உணவிடும் உழவனே, மற்றவருக்கு உதவும் பண்பு கொண்ட உழவனே நல்லவன் என்று உலகத்திற்குப் பறைசாற்றுகின்றார். நடிப்பிற்காகக்கூட உழவர்களை இழிவாக நடத்தத்தெரியாதவர் மக்கள் கவிஞர். ‘‘1954-ஆம் ஆண்டில் திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com தமிழகம் தந்த தலைசிறந்த கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசன் உள்ளிட்டோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இவர்களது வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவராக விளங்குபவர் பாரதிதாசனின் மாணவராகிய பட்டுக்கோட்டையார் ஆவார். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை ஆகிய மூவரும் தமிழக வரலாற்றில் அடுத்தடுத்த சகாப்தங்களாக அமைந்துவிட்டனர் எனாலம். 1882-ஆம் ஆண்டில் பிறந்த பாரதியார் 1921-ஆம் ஆண்டு தமது 39-ஆவது வயதில் மறைந்தார். 1930-ஆம் ஆண்டில் தோன்றிய பட்டுக்கோட்டையார் 1959-ஆம் ஆண்டில் தனது […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com சங்க கால மக்கள் பல்வேறு சடங்கு முறைகளைக் கொண்டிருந்தனர். அச்சடங்குகள் அவர்களது நம்பிக்கைகளின் வாயிலாகவே தோன்றியிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை பழந்தமிழ் மக்களின் பல்வேறு விதமான நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது. குறிசொல்லல் தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவர், மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வுகூறும் வகையில் அமைவதே குறிசொல்லலாகும். ‘‘தெய்வத்தின் அருள்பெற்று தன்வயமிழந்த நிலையில், ஒருவர் மற்றொருவரின் சிக்கலுக்குத் தீர்வு கூறுவதே குறிசொல்லல் எனப்படும். இதனை ‘அருள்வாக்கு’ […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன. தொன்மம் – விளக்கம் தொன்மம் (Myth) என்பது பழமை […]
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நம்பிக்கை இல்லாத வாழ்க்கை பாழ்பட்டுவிடும்.நம்பிக்கை அதீதமாகவும் இருப்பது துன்பந்தரும். ஆனாலும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது. இந்நம்பிக்கையில் பெரும்பாலோரிடத்த்து அதிகமாகக் காணப்படுவது தெய்வங்கள் குறித்த நம்பிக்கையே ஆகும். தெய்வ நம்பிக்கை மனிதன் மனிதனாக வாழ உறுதுணையாக அமைகிறது. இவ்விறை நம்பிக்கை வாழ்க்கையில் மனிதனுக்கு மனச் சோர்வு ஏற்படாது காக்கின்றது. தெய்வ நம்பிக்கை தளரிக்னறபோது மனிதன் தன்னம்பிக்கையை இழக்கின்றான். தன்னப்பிக்கையை மனிதன் இழக்கின்ற நிலையில் விரக்தியின் […]
முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நிலம் என்பதற்கு தமிழ் நிலம் என்று பொருள்கொள்ளப்படுவது நோக்கத்தக்கது. தமிழர்;கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நிலங்களாகப் பாகுபடுத்தினர். நில அமைப்புகளைக் கொண்டே அவற்றிற்குப் பெயரிட்டனர். ‘‘நிலம் என்பதற்கு இடம், தலம், நானிலத்தின் பொது தேசம் பூமி’’ எனும் பல பொருள்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி’’ (மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் ப. 101.) குறிப்பிடுகிறது. தமிழர்களின் நிலவியல் பாகுபாடு குறித்த பல்வேறு […]