இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரைக் கைப்பற்றினர் ஜப்பானியர். அவர்கள் சிங்கப்பூரை ஆண்டபோது புலம் பெயர்ந்து தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியர்கள் தங்களுக்குகென்று ஒரு தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்தியாவுக்கு வெளியே சிங்கப்பூரில் 1943 ஆம் வருடத்தில் உருவாக்கினர். இதற்கு ஜப்பானும் தேசிய பொதுவுடைமை ஜேர்மனியும் ஆதரவு தந்தன. இந்த அரசுக்கு அசாத் ஹிந்த் ( Azad Hind ) என்று பெயர் சூட்டப்பட்டது. இதன பொருள் விடுதலை இந்தியா என்பது. இதன் தலையாய […]
ஜப்பானியர் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் இருந்தபோது அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பரம எதிரி. கல்கத்தாவில் அவர்களால் வீட்டுக் காவலில் இருந்தபோது மாறுவேடம் பூண்டு தப்பித்தார். ஆப்கானிஸ்தான் வழியாக தரை மார்க்கமாக ரஷியா சென்றார். அங்கு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிய உதவி கேட்டார். ஆனால் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. அங்கிருந்து அவர் ஜெர்மன் தூதரகத்தின் உதவியுடன் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் […]
உலகின் மொத்த நிலப்பரப்பில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்லது சாம்ராஜ்யம். அதில் சூரியன் அஸ்தமிப்பதில்லை ( The Empire on which the sun never sets ) என்று கூறுவார்கள். காரணம் உருண்டையான உலகின் எப்பகுதியிலாவது சூரியன் இருந்துகொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியும் பிரிட்டிஷார் ஆட்சியில்தான் இருக்கும்! உலகின் பலம் பொருந்திய இராணுவ பலத்தைக் கொண்டிருந்தது பிரிட்டிஷ் இராணுவம். அதில் அவர்களின் […]
சிங்கப்பூரை முதன்முதலாகக் கண்டுபிடித்து பெயர் சூட்டியவர் ஸ்ரீ விஜயத்தின் இந்திய இளவரசர் பரமேஸ்வரன். இவர் அரசு விருந்தினராக சீன தேசம் வரை சென்று வந்துள்ளார். சீனாவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகமும் செய்துள்ளார். அவருக்குப்பின் அவருடைய மகன் இஸ்கந்தர் ஷா 1389 ஆம் வருடத்தில் சிங்கப்பூரின் மகாராஜாவானார். அவர் அந்தப் பாரசீகப் பெயரைச சூடிக்கொன்டாலும் அவர் இஸ்லாம் மதத்தைத் தழுவவில்லை.இவர் ஸ்ரீ ரண விக்ரமா என்றும் பெயர் கொண்டவர். 1398 ஆம் வருடத்தில் ஜாவா தீவிலிருந்து மஜாபாகித் […]
ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வேனேயொழிய எந்தக் கடையிலும் நுழைந்ததில்லை. இப்போது லதா என்னை அங்கு ஓர் உயர்தர உணவகத்திற்கு இட்டுச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் ஜில்லென்றிருந்தது .வருங்கால டாக்டர் என்பதால் என் மதிப்பும் அவள் பார்வையில் கூடியதோ! உண்மையான காதலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் என்ன வேலை? அவளைப் […]
தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 115. சிங்கப்பூர் பயணம். இரண்டாம் வருடத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.கல்லூரி மீண்டும் தொடங்கும்பொது முடிவுகள் தெரியும். அப்பா என்னை சிங்கப்பூர் வரச் சொல்லி எர் இந்தியாவில் பணம் கட்டிவிட்டார். நான் விடுதியிலிருந்தெ பிரயாணத்துக்குத் தேவையானவற்றை முன்பு சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த சூட் கேசில் அடுக்கிக்கொண்டு சென்னை புறப்பட்டேன். சம்ருதி, டேவிட் ராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிங்கப்பூர் சட்டைகள் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போதெல்லாம் அந்த சட்டைகள் […]
தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 114. தேர்வுகள் முடிந்தன . மூன்று மாதங்கள் ஓடி மறைந்தன. தேர்வு நாட்களும் வந்தன. இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வு. உண்மையில் நாங்கள் கல்லூரியில் சேர்த்த மூன்றாம் ஆண்டு இது. இரண்டாம் ஆண்டில் தொடங்கிய உடற்கூறு, உடலியல் ஆகிய இரு பாடங்களையும் இரண்டு வருடம் பயின்றோம்.ஆதலால் இரண்டாம் வருடத்தை இரண்டு வருடம் கழித்தோம். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மூன்றாம் வருடம் சென்றாலும் உண்மையில் அது நான்காம் வருடம்தான். இந்தத் தேர்வில் […]
113.கற்றாருள் கற்றார் அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்டு நாங்கள் தேனுண்ட வண்டானோம். அரங்கம் ஆச்சரியத்துடன் அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தது! புலைமை மட்டுமல்ல சபைக்கு ஏற்றவகையில் அவர் பேசியது மேலும் வியப்பையூட்டியது. ” கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். ” என்னும் குறளுக்கேற்ப அண்ணாவின் உரை அமைத்திருந்தது. அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர். மதங்கள் மீது பற்றுதல் இல்லாதவர். அவர் தமிழக முதல்வர். அனைத்து தமிழக மக்களையும் அணைத்துச் செல்லும் பொறுப்பு […]
அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை அந்த ராஜ்ய சபை உறுப்பினர்களுக்குப் புதுமையாக இருந்திருக்கும். அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். காரணம் தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக மக்கள்தான் அதுவரை அறிந்திருப்பார்கள். திராவிட ஏடுகளைப் படித்தவர்கள் மட்டுமே அதுபற்றி அதிகம் தெரிந்திருப்பார்கள். பாமர மக்கள் அது பற்றி மேடைகளில்தான் கேட்டிருப்பார்கள். பலருக்கு அதன் உண்மையான பொருள் தெரிந்திருக்க வாயிப்பில்லை. திராவிடர் இயக்கத்திற்கு எதிரானவர்கள் அதை ஒரு மாயை என்று கூறினர். திராவிட நாடு என்பது இருந்ததில்லைதான். […]
அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை நேருக்கு நேர் பார்த்து அவருடைய சொல்லாற்றலைச் செவுமடுக்கும் பேறு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழைத்தான் அதுவரை அரசியல் மேடைகளின் தொலைவில் நின்று கேட்டதுண்டு. ஆனால் அண்ணாவின் ஆங்கில உரையை வெகு அருகாமையில் அமர்ந்து இரசித்தது எங்கள் கல்லூரியில்தான்! அது கல்லூரியின் பட்டமளிப்பு விழா. மருத்துவம் படித்து முடித்து வெளியேறும் மருத்துவ பட்டதாரிகளுக்கு முறைப்படி பட்டம் வழங்கும் விழா. கல்லூரி முதல்வர் சாமர்த்தியமாக அண்ணாவை அதில் சிறப்பு விருந்தினராக […]