author

ரயிலடிகள்

This entry is part 34 of 40 in the series 12 பிப்ரவரி 2012

டிக்கெட் எடுத்திட்டியா டிபன் எடுத்திட்டியா தண்ணி எடுத்திட்டியா தலகாணி எடுத்திட்டியா பூட்டு செயின் எடுத்திட்டியா போர்வை எடுத்திட்டியா போன் எடுத்திட்டியா ஐபாட் எடுத்திட்டியா… அலாரம் வெச்சுட்டியா…. கேள்விகளால் நிரம்பி வழிகின்றன தொலைதூரம் செல்லவிருக்கும் தொடர்வண்டியின் சன்னலோரங்கள் பார்த்துப் பத்திரமா போ யாருகிட்டேயும் எதும் வாங்காதே மறக்காம போன் பண்ணு நல்லா சாப்பிடு ரொம்ப அலையாதே மனித சமுத்திரத்தின் காலடியில் நசுங்கும் நடைமேடை விளிம்புகள் அக்கறையிலும் அன்பிலும் மிதக்கின்றன பிரியும் நேரம் நெருங்க விடுபடப்போகும் விரல்களினூடே நிலநடுக்கத்திற்கு நிகராக […]

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை

This entry is part 36 of 42 in the series 29 ஜனவரி 2012

  மாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன்.   அழுக்கடைந்த குடிப்பக மூலையில் ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில் கோணலாய் நிற்கும் மேசையில் காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.   முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல் குறுகுறுப்பாய் குடுவையைக் கையாள அடைபட்டுக்கிடந்த அவனுக்கான அமிர்தம் விடுபட்டு மெல்லச் சிரிக்கிறது   நடுங்கும் விரல்களோடு குவளையில் சரித்து இனிப்பூட்டிய குளிர்பானத்தையோ வாயு நிரம்பிய சோடாவையோ பிளாஸ்டிக் பை தண்ணீரையோ பீய்சிக்கலந்து ஒரு புணர்ச்சியின் […]

பாசாங்குப் பசி

This entry is part 23 of 40 in the series 8 ஜனவரி 2012

மண்டப முகப்பில் கும்பிடுகளை உதிர்த்து மணமேடை நிழற்பட பதிவு வரிசையைத் தவிர்த்து பசியாத வயிற்றுக்கு பந்தியில் இடம் பிடித்தேன் சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட இடது பக்கயிருக்கைக் கிழவியின் இலை இளைத்துக்கிடந்தது அவர் தேகம் போலவே வலதுகையால் பிட்டதை பாசாங்காய் வாய் கொறிக்க எவரும் அறியா சூட்சுமத்துடன் இடது கை இழுத்து புதைத்துக்கொண்டிருந்தது மடியில் பசிக்காத வயிற்றுக்கு பாசாங்காய் புசித்துண்ணும் எனக்கு பரிமாறியவர் பாட்டியின் இளைத்துக்கிடந்த இலையையும் இட்டு நிரப்பிப்போனார் முதுமை முடக்கிய கணவனோ புத்திசுவாதீனமில்லா மகனோ தீரா […]

பொருத்தியும் பொருத்தாமலும்

This entry is part 18 of 39 in the series 4 டிசம்பர் 2011

விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு படிப்பு பணி தொழிலென எதையும் பதியனிடமுடியாமல் தவிக்கும் அப்பா! இல்லற வெம்மையில் வாசமிழந்த மலரில் நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும் குறைந்த வயதுடைய சகஊழியனின் சல்லாபமோகத்தில் வெதும்பும் தோழி! வரும் மாதவாடகை கரண்ட்பில் அக்கம்பக்கம் புரட்டிய கைமாத்துக்கு கை பிசையும் வாழ்ந்துகெட்டோர் வாரிசான மத்திம வயதையெட்டும் தோழன்! ஆயிரம் ரூபா முதியோர் பென்சனில் ஆறுக்கு எட்டு […]

கூடிக்களிக்கும் தனிமை

This entry is part 27 of 38 in the series 20 நவம்பர் 2011

கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது ஒரு மண்புழு போல நள்ளிரவு விழிப்பில் புத்திக்கு முன் துயிலெழுந்து இடவலமாய்த் துழாவும் கைகளில் தாவி அப்பிக்கொள்கிறது சன்னலோர மரக்கிளைகளில் சிதறும் பறவைக் கொஞ்சல்களும் வெளிச்சக் கீற்றுகளையும் தட்டியெழுப்ப அனுமதிக்கிறது நேரம் தவறிய தேநீர் சிற்றுண்டி பசிக்கு கொஞ்சம் பகல் உறக்கம் தொட்டுக்கொள்ள ஒரு முட்டை இரு ரொட்டித்துண்டுகளுமென எதையும் கலைத்துப்போட்டுக்கொள்ளும் ஏகாந்த சௌகரியத்தை […]

பெருநதிப் பயணம்

This entry is part 45 of 53 in the series 6 நவம்பர் 2011

ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று பள்ளங்களில் பதுங்கி நிரம்பி பாறைகளில் தாவிப்படிந்து சரிந்து விழுந்து குதித்து வழிந்து தன்னைத் தாய்மையாக்கி தன்னையே ஈன்றெடுத்து தன்னுள்ளே தன்னைச் சலித்து தன்னைத் தூய்மையாக்கி தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து நிரம்பும் அம்மணங்களைக் கழுவி நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து தன் கனத்தை தானே தாங்கி தன் குணத்தை எங்கும் விதைத்து தன் மணத்தை திசைகளில் தூவி நனைக்கும் கால்களிலும் கைகளிலும் உற்சாகத்தை ஒட்டிவிட்டு தத்தித்தாவி தாளம் போட்டு நடனமாடி நளினமாயோடுது பெருநதி ஒரு துளியும் […]

இருள்

This entry is part 7 of 44 in the series 30 அக்டோபர் 2011

சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும் நீண்ட சாலையைப் பார்க்கும்போது அந்த அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையைப் போலிருந்தது. ஓசை போன்றே வெளிச்சமும் அமைதியைத் தின்றுவிடுவதாகத் தோன்றியது. வெளிச்சம் மிகு இடத்தைவிட குறை வெளிச்சத்தில் அதிக அமைதியை உணரமுடிவதாகத் தோன்றியது. […]

சொர்க்கமும் நரகமும்

This entry is part 3 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நீள் பயணங்களில் நெரியும் சனத்திரளில் பாரம் தாங்கமுடியாமலோ பத்திரமாய் உறங்கட்டுமெனவோ நம் மடிமீது வலிய இறுத்தப்படும் குழந்தையின் எப்போதாவது இதமாய் உந்தும் பிஞ்சுப்பாதம் இதழ்வழியே தவழ்ந்து ஈரமூட்டும் எச்சிலமுதம் கனவுகளில் தேவதைகள் கூட்டிடும் குறுஞ்சிரிப்பென என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும் இறுதியாய் எப்போது சிறுநீர் கழித்திருக்குமென நச்சரிக்கும் சிந்தனை நரகத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை பல நேரங்களில்!

தீர்ந்துபோகும் உலகம்:

This entry is part 16 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து தம்பிப்பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து பறவைக்கு இறக்கை பொருத்தியென….   நிமிடங்களுக்கு நிமிடம் மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது அதற்கானதொரு அழகிய உலகத்தில்…   அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும் உலரும் துணி உதிராமல் இருக்க அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்

This entry is part 4 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

உங்களைவிட சக்தி வாய்ந்த அதிகாரத்தால் நிர்பந்திக்கப்பட்டு, உங்களுக்கு சற்றும் ஒப்புதலில்லாத உறுத்தல் நிறைந்த ஒரு அநியாயத்தைச்செய்ய நேர்ந்தால் அந்த உறுத்தலோடு எத்தனை நாட்கள் உங்களால் நிம்மதியாக உறங்கிட முடியும்….? இங்கே அந்தக் காரியம் எனக் குறிப்பிடுவது ”ஒரு கொலை” எனின்! கேரள தேசத்தில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தை காவல்துறை ஒடுக்கிவந்த சி.ஆர்.பி பிரிவினரால் 1970ல் நண்பர் மூலமே காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு விடியலில் சிறைபிடிக்கப் படுகிறார் பழங்குடி மக்களுக்காகப்போராடும் தோழர் வர்க்கீஸ். சி.ஆர்.பி பிரிவில் சாதாரணக் காவலராகப் பணியாற்றிய […]