ஜெயானந்தன் வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம். இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும். ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள். நடுச்சாமத்தில் பாலுக்காக அழும் குழந்தையின் வாயில், காய்ந்த முலையின் காம்புகள். கதவே இல்லாத வீட்டில், எதற்காக சாவி தேடி அலைகின்றான் குடிகாரன். அநாதையாக விட்டுச்சென்றவனின் கையில் கபால ஓடும், காவியும் எதற்கு? தப்பித்துக்கொள்ள, புத்த மடத்தையா தேடுவது. சாமியார்தனங்களில், […]
எனக்கு ஞாபகமில்லை அவரை. அவர் எனைப்பார்த்து புன்னகையை சிந்தினார் நானும் சிந்தினேன். அருகில் வந்தார். நானும் அவரருகே சென்றேன். நினைவில்லையா…., இழுத்தார். கொஞ்சம் நெற்றியை தடவினேன். “அதான் சார். … போனமாசம் இதே இடத்தில் நான் வாந்தி எடுத்த போது ஓடோடிச்சென்று , கோலி சோடா வாங்கி கொடுத்திங்களே. ..” ஏதோ ஒரு இடத்தில் சிந்திய புன்னகை இன்னொரு இடத்தில் விருட்சம். யார் யாரோ வருகிறார்கள், போகிறார்கள். அன்பே போதிமரம்.
ஜெயானந்தன் எல்லா அறைகளையும் பூட்டி சாவி கொத்தை சிங்கார வேலர் எடுத்து விட்டு ஒவ்வொரு பூட்டையும் இழுத்துப்பார்த்தார். ஸ்டேசன் அடைவதற்குள் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பறந்துவிட்டது. பிளாட்பார ஓரத்தில் எட்டணா டீயோடு காத்திருப்பார் அடுத்த வண்டிக்கு. இடையே மூன்றாவது அறையை பூட்டினோமா சந்தேகம் வரவே கால்கடுக்க ஓடினார் வீட்டுக்கு. எல்லா அறைகளும் பூட்டித்தான் இருந்தன. ஸ்டேசன் அடைவதற்குள் அடுத்த வண்டியும் சென்றுவிட்டது. காலியான ஸ்டேசனில் அடுத்த வண்டிக்காக காத்திருக்கும் கடைசி ஆள் இவரோ. – ஜெயானந்தன்
ஜெயானந்தன் உடைந்து போன ஞாபக கண்ணாடிகளில் நழுவி சென்றது சித்திரை நிலா. போன நித்திரையில் ராமகிருஷ்ணன் வீடகன்று போனான். போனவன் வெளிச்சத்தையும் கொண்டு போய் விட்டான். வீடு இருளாகத்தான் காய்ந்து கிடக்கின்றது. இன்று வந்த நிலாவும் அவனைத்தான் தேடியது கூடவே அவனது கவிதைகளும். பெட்டி நிறைய தழும்புகிறது அவனது இலக்கிய தாம்பத்யம் எதிர் வீட்டு சன்னலிலிருந்து எட்டி பார்க்கும் பத்மனி குட்டிக்கூட என்னை பார்க்க வருவதுபோல் அவனை ஓரக்கண்ணால் பார்த்து சென்றது என் கடந்த போன யவனத்திற்கு […]
தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது. இவரது எழுத்துக்கள், ஒரு வகையான Mystism, மாயாவாத காமத்தை, காமரூபணியாக காண்பித்து, மனதை பித்து நிலைக்கு கொண்டு செல்லும். மேலும், இவரது எழுத்துக்கள், வாலிப பருவத்தின் வாசலை தொடுவோர்க்கு காமரூபனின் காட்சி சாலையாக மாறி, உடலின் மிருகத்தை தட்டி எழுப்பிவிடும். கூடவே, தி.ஜா.வின் சாட்டை, காமக்குதிரையை அடக்க, கதையின் அடுத்த கட்டத்தில், அம்பாளையும் , சங்கீத கீர்த்தனைகளையும் சேர்த்து மிருதுவாக தடவி கொடுத்து, […]
தொலந்து போன காலடி சுவடுகளை தேடி அலையும் மனசு. தேடாமல் தேட நொண்டியாடி வருவான் அவ்வப்போது. தொலைதூர பூங்காவில் கேட்கும் ரகசிய பயணிகனின் வாழ்க்கை ரகசியங்கள் எந்த குகையில் தேடினாலும் உள்ளூக்குள் இருட்டு. வெளிச்சமேற்றிய கன்னியோ காயப்பட்டு போனாள் தொடர் அறுவை சிகிச்சையால். சகியே சொல்லடி எந்த சாவியை எந்த மனதில் வைத்துள்ளாய். உனக்காக நான் நதியில் நீராகப்போகும் தருணத்தில் படகுக்காரன் கரம் நீட்டி அலைப்பாயா சகியே சொல்லடி. மீண்டும் மீண்டூம் பிறந்துன்னை தொட அலைந்தாலும் நீண்டூக்கொண்டே […]
மனிதர்கள் சந்தித்துக்கொள்ளும் பாதையில் சுவர்ண பட்சிகள் வருவதில்லை. வறண்டு போன நதிகளின் கண்ணீர் கதையை அவைகள் கேட்ட பிறகு மனித வாடை துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறுகின்றன. இடிந்து போன அரண்மனையின் கடைசி செங்கல்லில்தான் பட்சி வளர்த்த கடைசி மன்னனின் சமாதி இருந்தது. இரவில் பட்சிகள் வந்து மெளன ராகம் பாடி செல்லும். வறண்ட நதியின் கர்ப்பத்தின் ஆழமான சதைப்பிண்டங்களை அள்ளி சென்றனர் இரக்கமற்ற மனிதர்கள். ஒவ்வொரு மணித்துளிகளில் காசை வலக்கையில் வாங்கி கஜான ரொப்பினார்கள். மறைந்து […]
குடைபிடி ஞாபகங்களில் எச்சரிக்கின்றது வயோதிகம். குழந்தையின் மழலைப்போல போய்விடுகின்றது கால்கள். குளிரில் அணைத்தப்படி செல்லும் இளசுகளின் உரசலில் என் வாலிபத்தின் விலாச முத்திரை தெரியும். எங்கோ போய்விட்ட அறுந்த காத்தாடியின் நூலை பிடிக்க அலையும் மனசு. பள்ளிக்கூட மணி ஓசையில் மகிழ்ந்து கொள்ளும் மனம். தொலைதூர ரயில்வண்டியின் பயணிகளின் இரைச்சல்களில் எனது பயணங்கள். ஞாபக மரங்கள் எரியும் தெருக்களில் கூடு கட்டி வாழும் எனது மிச்சமுள்ள வாழ்க்கை. – ஜெயானந்தன்.
இறக்கிவிட்ட ரயில் வெகுதூரம் சென்றுவிட்டது சில ஞாபக விலாசங்களோடு. “ஏதோ நினைவுகள் மலருதே…,” பாடிய குருட்டு பிச்சைக்காரனை கைத்தடியில் அழைத்து செல்லும் சிறுமி . கடலை பர்பி கைக்குட்டை விற்று செல்லும் நொண்டி அண்ணன். கைத்தட்டி உரிமையோடு காசு கேட்கும் அனார் அலி. டைம் பாஸ் கடலை விற்கும் பீடி கணேசன். “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை….” ஹார்மோனிய வயோதிகன். பழம், பூ விற்கும் சம்சாரிகள் நெற்றியில் பெரிய பொட்டோடு. கையில் கல்லூரி நோட்டோடு காதல் […]
முகவரி கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார் தபால்காரர். அவரா என்று எளனமாக பார்த்தான் சந்தைக்காரன். அதோ மூலையிலுள்ள புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை எடைப்போட்டுக் கொண்டே. அவரா நேத்து தான் அந்த மூலை பழைய புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார். நாலு பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை வாங்கி சென்றார் நாலு ரூபா பாக்கியுடன். அவரா ஜிப்பாவோடு அலைவரே தோளில் ஜோல்னாப்பையோடு. அவரா முனைத்தெரு டீக்கடையில் பேசீக்கொண்டே இருப்பாரே. அவரா வேல வெட்டி இல்லாம எழுதிக்கொண்டிருப்பரே. அவரா லைப்ரரில […]