இரா.முருகன் 1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து கொண்டு இருக்கிறாள். இருட்டு தான் எங்கேயும். அது விலகி சூரியோதயம் ஆகிறதுக்கு ரொம்ப நேரம் செல்லும். வெளிச்சத்துக்காக சத்திரத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. போயே ஆக வேண்டும். போய்க் கொண்டிருக்கிறாள். பகவதிப் பொண்ணே, வேண்டாம்டி, சொன்னாக் கேளு. திரும்பிடலாம் வா. ஆம்பிளைகள் இல்லாம இப்படி புலர்ச்சை வேளையில் தனியா எங்கேயும் போகண்டா, […]
1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை அம்மா, போகலாமா? சாமா கேட்டான். மேல் சட்டையில்லாத உடம்பில் குற்றாலம் துண்டைப் போர்த்தி, கையில் சின்ன மூட்டையைத் தூக்கிப் பிடித்திருந்தான். இடுப்பில் வார் பெல்ட்டில் பத்திரமாக ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, பர்ஸை மருதையனிடம் கொடுத்தான். குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துக்கலாமய்யா. அண்டா குண்டாவிலே வச்சு கங்கா ஜலம்னு சகலமானதுக்கும் எடுத்து நீட்டறான். மத்ததெல்லாம் சரிதான். குடிக்கவும் அதானான்னு எதுக்களிச்சுட்டு வருது. மருதையன் சொல்வதும் உண்மைதான். பத்து அடி […]
1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள். சூனிய மாசம்னாலும் அமிர்தமான மாசம். நேரம். நல்ல நாளும் பெரிய நாளுமா அத்தை வந்திருக்கா. வந்தேளா, குளிச்சேளா சாப்பிட்டேளான்னு பக்ஷமா நாலு வார்த்தை பேசாமா, ஏழுகிணறு நாயுடு கொண்டு வந்து கொடுத்த சொம்பைக் கட்டித் தூக்கிண்டு அலைஞ்சாறது. பகவதி அத்தை வீட்டுக்கு வந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டே வீட்டுக்காரனைப் பற்றிக் குறைப்பட்டுக் […]
1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை என்கிறது போல் ஸ்நானக் கட்டங்களை மூடி மறைத்தது. ஓடியும் தேங்கியும் ஒடுங்கியும் விரிந்தும் கடந்த கங்கா நதிப் பிரவாகத்தை அது கீழிறங்கித் தொட்டு, கவிந்த படிக்கே விடியும் பொழுது. பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் பூவாடையும் பிணவாடையும் மக்கிய இலையும் சோற்றுப் […]
1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். கொஞ்ச நேரம் அங்கே இருந்து டாக்டர் வார்டு வார்டாக வரும்போது அவரை எதிர்கொள்ள வேண்டும். நாயுடுவின் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தாலே அது சாத்தியம். வெள்ளைக்கார டாக்டர் என்பதால் அவர் கேட்பதற்கு எல்லாம் இங்கிலீஷில் பதில் சொல்லி, அவரிடமிருந்து நாயுடு தேக நிலை பற்றி புதுசாகத் தகவலும், மருந்து மாத்திரை சம்பந்தமான விஷயங்களும் […]
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை உன்னாண்ட ஒரு தண்ணிச் சொம்பும் கன்னடத்திலே எவனோ எங்கேயோ எழுதிக் கொடுத்த கோர்ட் காயிதமும் ஒரு தபா கொடுத்தேனே, ஞாபகம் இருக்கா? கோர்ட்டுலே குப்பை செத்தையா அடஞ்சு வச்சிருந்த ஜாமானுங்க. நாயுடு சாயும் சூரிய வெளிச்சம் முகத்தைப் பாதிக்கு வெளிச்சம் போட, மீதம் மசங்கல் இருட்டில் இருந்தபடி நீலகண்டனைக் கேட்டான். நினைவு இருக்கிறது. அவன் கொடுத்தது. முக்கியமாக அந்த செம்பு. கங்கா […]
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம கேசு தான் போல இருக்கு அங்கேயும். எதிர்பாராத சந்தோஷம் கிடைத்த திருப்தியோடு சிரித்தபடி நாயுடு கயிற்றுக் கட்டிலில் உட்காந்தான். இவன் கிட்டே எப்படிச் சொல்ல? பக்கத்திலே யாரும் இருக்காளாடா? பேசின மாதிரி இருந்தது. அவன் எங்கே என்று இலக்கு இல்லாமல் கை காட்டிக் கேட்டான். குரல் கேட்குதா? கேக்கும் […]
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை சாயந்திர வெய்யில் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப் புறத்துக்கு அலாதியான சோபையைக் கொடுத்திருந்தது. ஊர்ந்து கொண்டிருக்கிற டிராம்களில் இருந்து குதித்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள் முகத்தில் அலாதியான மகிழ்ச்சி இருந்ததாக நீலகண்டனுக்குத் தோன்றியது. பார்க்கப் போகிறவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கிடந்தால் ரெண்டு நிமிஷம் உபசார வார்த்தை பேசிவிட்டு, நர்ஸ் மிஸ்ஸியம்மாக்களின் ஸ்தன பாரத்தை வெறித்த பிறகு பார்க் ஸ்டேஷன் ஓரமாக மசால்வடையும் போண்டாவும் […]
1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை நீலகண்டன் வாசல் திண்ணையில் மேற்கு வடமேற்கில் ஆரோகணித்திருந்தான். முதுகில் உதய கால வெய்யில் இதமாகப் படர்ந்திருந்தது. கற்பகம் பின்னால் இருந்து ஆலிங்கனம் செய்த மாதிரி சுகம். அதெல்லாம் இப்போ அதிகமாகக் கிடைக்கிறதில்லை. தூரம் நின்னு போச்சு. இச்சை எல்லாம் கட்டுக்குள்ளே அடக்கிக்குங்கோ இல்லே தச்சனைக் கூப்பிட்டு பலகை அடிச்சு அரைக் கட்டுலே அடைச்சு மூடுங்கோ. போற வழிக்குப் புண்ணியம் தேடிண்டு கோவிலுக்கு நிதம் போறது தான் இந்த […]
1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால் பயமாக இருக்கிறது. மனுஷர்களைப் பார்த்து உண்டான பயம் இல்லை இது. இடித்துப் பிடித்து வண்டியில் ஏறி, குளிர் காலம் என்ற சாக்கில் மாசக் கணக்கில் குளிக்காமல் உடுப்பு மாற்றாமல் திரிகிறவர்களின் உடம்பு வாடை பற்றிய […]