சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே……அனைத்துக் கோவிலுக்கும் கொண்டாட்டம் தான்…அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும்….எத்தனை சின்னக் கோயிலாக இருந்தாலும்…சித்திரைத் தேர் அந்த ஊரை ஒரே ஒரு தரம் வலம் வந்த பிறகு தகரக் கூடுக்குள் அடைந்து விட்டால் அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் பரம சந்தோஷம்…நிம்மதி…இனி அடுத்த வருஷம் தான்….அது வரும்போது வரட்டும் என்று அதுவரை அக்கடான்னு இருப்பார்கள்.பிறகு தேரைப் பற்றி யாரும் கவலைப் படுவதும் கிடையாது. பராமரிப்பதும் […]
காலை மணி எட்டரையைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கேன் நெற்றியில் வேர்வை வழிய வழிய. பவர் கட்டுத் தொல்லை வேறு ! அது எப்போது வருமோ ? இன்னும் வீட்டு வேலை செய்ய வரும் ஆயிஷா… வரவில்லை.எத்தனை நேரம் தான் நேற்று ராத்திரி போட்ட பத்துப் பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருக்கணும் ? வேலைக்கு வந்து பத்து நாட்கள் கூட ஆகலை…அதற்குள் இப்படி….! இந்த லட்சணத்துக்குத் தான் நான் வேலைக்கு ஆளே.. வெச்சுக்காமல் இருந்தேன்…என்னோட இந்த […]
காலையில் ஜம்மென்று வீட்டிலிருந்து கிளம்பிப் போன மணிஅய்யர் ..வருவதற்குள் மிதுக்க வத்தல் மாதிரி துவண்டு போய் வீட்டுக்குள் நுழைந்தார்.இந்த உடம்புக்குள்ள கடல் போன்ற பரந்த மனசு இருப்பது யாருக்குமே தெரியாது… என்னன்னா…இப்படி வேகாத வெய்யில்ல அலைஞ்சுட்டு வரேளே…..உடம்பு என்னத்துக்காறது….ஒருநாளப்போல இதற்கு வா…இங்க வா…அங்க வா…ன்னு அவா உங்களை இப்படி….அலைக்கழிக்கறாளே..! வயசானவாளாச்சேன்னு கொஞ்சம் கூட கரிசனம் இல்லாத…அக்ரீமென்ட்டைப் போட்டோம்மா…. கையெழுத்தப் வாங்கினோமான்னு விடாமல்…வெய்யில் எல்லாம் உங்க தலைலன்னு எழுதி வெச்சா மாதிரி….! வாங்கோ…. நாழியாறது….வந்து சாப்பிடுங்கோ…பவானி மனைப்பலகை யைப் போட்டு…இலையை […]
பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்….! ————————————– களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு….! ————————————— தோண்டத் தோண்ட தீரவேயில்லை…. களிமண்..! —————————————- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்…! —————————————— களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான் .. பிரம்மன்..! ——————————————– சுட்டதில் எந்தப் பானை.. நல்லப் பானை..! ———————————————- மண் ஒன்றுதான்.. வடிவங்கள் மட்டும்.. வேறு வேறு..! ———————————————- குயவன் செய்த பானைகள்…. அனைத்தும் காலி தான்..! ————————————————– குயவனின் பொன்னாடை… களிமண்ணாடை..! —————————————————— நினைத்ததைச் முடிப்பவன்… குயவன்..! […]
ஆச்சு….புனிதாவும் அவளது கணவன் ராஜேஷும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொண்டு…. இன்றோடு மூன்றாவது நாள் முடிகிறது…. …! இப்படியே ராஜேஷை விட்டுப் பிரிந்து போகவும் புனிதாவுக்கு மனதளவில் சம்மதம் தான்…குழந்தை அருண் மட்டும் பிறந்திருக்கவில்லையென்றால் …..அவளது முடிவு அதுவாகத் தான் இருந்திருக்கும்…என்ன செய்வது…?.சிலரின் வாழ்க்கை….எப்பவுமே இன்னொருவரின் கைகளில் தான் இருக்குமோ என்னவோ? பார்க்கலாம்…இந்த விஷயம் இன்னும் எவ்வளவு தூரம் போகும் என்று. எண்ணியபடியே….அருணை இடுப்பில் இடுக்கியபடியே…கிண்ணத்தில் பிசைந்த தயிர் சாதத்தை நார்த்தங்காயைத் தொட்டு எடுத்து […]
மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்……என்னமா… வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் நான் வீணாக்கறேனே… கையோட இன்னைக்கே… ஸ்கூட்டர்ல மாவு திரிக்கிற மெஷினுக்குப் போயி ரெண்டு படி அரிசியை திரித்துக் கொண்டு வந்து நாளைக்கே கையோட வடாம் பிழிஞ்சு வைக்கணும்.கடையில் வாங்கிக் கட்டுப் படியாகாது. போன தடவை மாங்கு… மாங்குன்னு பிழிந்து வைத்தது….போக வர வறுத்துத் தின்று தீர்த்தாச்சு. வெறும் வத்தல் குழம்பு பண்ணி தொட்டுக்கக் கருவடாம் […]
குழந்தைகளுக்கு விடுமுறை….! எங்கெல்லாம் எனக்கு.. உறவினர்கள்..? ———————————— குற்றம் பார்த்தேன்… சுற்றம் விலக…. முற்றத்தில் தனிமரம்..! ————————————— அழகை அழிக்கக் காத்திருந்தது.. வெறியோடு.. முதுமை..! ————————————- சிக்கல் நூல்கண்டாக சில நேரங்களில்.. சிக்கித் தவித்தது உள்ளம்..! ————————————– பேசிப் பேசியே.. அமைதியானது.. மனம்..! ——————————————– கடல் கொண்டு நிறைத்தாலும் நிறையாதது… மனம்..! ———————————————– குறைகளைக் கண்டே.. நிறைவாவது நெஞ்சம்… ————————————————– மௌனமாய்க் கதறும்.. சப்தமின்றி நொறுங்கும்… இதயம்.. ———————————— உடலுக்குள் சமாதி.. இதயம்…! ————————————— மன மாளிகையின் […]
பகவானே….என்ன சோதனை…. இது? ….என் தலையெழுத்தே… இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே……அவரைக் காப்பாத்தும்மா… தாயே… உன் கோயில் வாசல்ல…..வந்து மண்சோறு சாப்பிடறேன்…அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு… தாயே…லோகமாதா…அவரை எனக்கு திருப்பித் தா…இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு வேற எந்த கதியும் இல்லையே..என் குடும்பத்தைக் காப்பாத்திக் கொடும்மா…அகிலாண்டேஸ்வரி… இதயத்தைப் பிழிந்து வேண்டிக் கொண்டதால் வேதனையில்… கண்களில் இருந்து போல பொலவென்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்தக் கலங்கிய கண்களுக்கு காரணமான மீனாட்சியின் கணவர் […]
ஜன்னலோர பிரயாணம்… துணைக்கு வருகிறதாம்… அடம்பிடிக்கிறது மழை..! இயற்கை..! —————————————————— கொன்றவர்களாலும் தின்றவர்களாலும் நிறைந்திருக்கிறது உலகம்..! மாறுமோ மனம்..! —————————————————— நசுக்கிக் கொன்ற குருதித் தடத்தின் மீது தான் சக்கரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன… வாழ்க்கை.. ———————————————————- விரும்பும் வகையிலெல்லாம்.. விரும்பிய வண்ணத்தில் பூக்கள் மலர்வதில்லை… நிராசை..! ——————————————————- இறந்தகால ஞாபகங்கள் படிந்திருக்கும் துண்டுப் பொருட்கள் நிகழ்காலத்தை நடத்திச் செல்கிறது…! நினைவுகள்..! —————————————————— உறவில் சொந்தம் இறந்ததாய்….. துக்கம் அனுஷ்டித்தார்…அம்மா…! ஓ..!..தீபாவளி வருகிறதா?!.. ஏழ்மை…! —————————————————————— உலகமே உறைந்து போயிற்று […]
“தார் ரோட்டில் வார் அறுந்து தன்னை உணர்த்தியது செருப்பு..! ” —————————————————- மலர்போல் தான் சருகாகும்வரை மனித வாழ்வும்..! —————————————————– “இதோ..சென்றுவிட்டேன்.. சொல்கிறது நிமிடமுள்..! ” ————————————————— “நன்மைகள்… உயர்ந்திட ஊருக்குள் கோபுரங்கள் ..!” ———————————————————— “ஆபத்து….எனக்கு…. பரீட்சை வைத்தேன் நண்பனுக்கு..! ” —————————————————————- கடற்கரையில் தாகத்தோடு காதலர்கள்..! —————————————————————. இடியும்..மின்னலும்.. கோள்சொல்லியது – மேகம்..!” —————————————— “திருடர்களின் ஒளிவிளக்கு இரவு..! ‘ ——————————————– விரிந்த வானம் விஷமமாய் சிரிக்குது விரிசல் பூமி..!!” ———————————————— புத்தம் புதிய […]