கௌரி சொன்னதைக் கேட்டதும்,..பதறிப் போன சித்ரா…எண்டே குருவாயூரப்பா…..! என்று சடக்கென காதைப் பொத்திக் கொண்டவள் …டீ இத்தோட உன் திருவாயை மூடிக்கோ …! இனி ஒரு வார்த்தை அப்படியெல்லாம் தத்து பித்துன்னு உளறிண்டு நிக்காதே. நீ ஒண்ணும் கெட்டுப் போகலை. ஏதோ …அப்படி இப்படி இருந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு வாழற வழியைப் பாரு. அதுக்காக அதையே நினைச்சுண்டு வேறெந்த முடிவுக்கோ அல்லது இனிமேல் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிண்டோ உன் வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்காதே. இத்தனை நடந்திருக்கு….அவனே, […]
புதுவை. வெகு தூரத்தில் ….கார்த்தி, லாவண்யா ….கல்யாணி இவர்களின் பிரச்சனைப் புயல் மையம் கொண்டதை அறியாத கௌரி, வசந்தியின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி கரையைக் கடந்து அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறியபடியே சுரத்தே இல்லாதா குரலில் ‘விருகம்பாக்கம் போப்பா’…என்றவள் ம்ம்ம்ம்…வசந்தி நீயும் .ஏறிக்கோ ….முதல்ல எங்க வீட்டுக்குப் போகலாம்….என்றதும் வசந்தியும் ஏறிக்கொள்ள ,ஆட்டோ விர்ரென்று கிளம்பி கௌரியின் வீடு நோக்கி வேகம் பிடித்தது . தாங்க்ஸ் மேடம்…..வசந்தியின் குரலில் நன்றியின் எதிரொலி. ம்ம்ம்…..பரவால்ல…..இப்ப ஒண்ணும் பேசாதே என்று […]
ஜெயஸ்ரீ ஷங்கர், புதுவை என்ன….கௌரி…அப்படியே ஷாக்காயிட்டே….இந்த லெட்டர் எப்படி என்கிட்டேன்னா..? ஒ…இது…..அந்தக் கடிதம்…பிரசாத்தின் கடிதம் தானே? இது எப்படி உன்கிட்ட…..கௌரியின் மூளை அதிவேகமாக வேலை செய்து தகவல் கொடுத்தது….ம்ம்ம்….என்னோட ஹாண்ட்பாக்கில் இருந்தது தானே..? ரொம்ப தாங்க்ஸ்…அத இப்படி கொடு…என்று கையை நீட்டுகிறாள். இந்தா…என்றவன் கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, இப்போ சொன்னியே ஒரு காரணமில்லாமல் எந்த ஒரு காரியமும் ஒருத்தரோட வாழ்க்கையில நடக்கறதே இல்லைன்னு…..அதுக்கும் இதுக்கும் ஏதாவது லிங்க் இருக்குமா கௌரி..? இதுக்கும்….எதுக்கும் என்று கேட்டுக் கொண்டே அந்தக் […]
கல்யாணியின் கைகளைப் பற்றியபடி, அத்தை….கடல் காத்து சூப்பர்..எனக்குக் கடல்னா கொள்ளை ஆசை…மதுரைல தான் கடலே இல்லையே..ஒரே போர். சென்னை ஜெகஜ்ஜோதியா இருக்கு, இல்லையா ? எனற லாவண்யாவின் முகமெங்கும் பரவசம் பொங்குகிறது . ஏண்டி…அங்க தான் மீனாட்சியம்மன் கோயில் இருக்கே..? இத்த விட அங்க ஆடி வீதில காலாற நடந்தா..எப்படி இருக்கும் தெரியுமா? இந்தக் கடலே அந்தக் காத்துக்கு வந்து பிச்சை கேட்டு நிக்கணுமாக்கும்…எங்க பாரு இக்கரைக்கு அக்கரைப் பச்சை தான் போ…! கல்யாணி விட்டுக் கொடுக்காமல் […]
வைத்த கண் வாங்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சித்ராவிடம் “ஏன்மா….அப்படிப் பார்க்கறே?” அந்தப் பார்வையில் பல அர்த்தங்களை புரிந்து கொண்ட கௌரி நிதானமாகக் கேட்கிறாள். நீ ஏதோ சொல்ல வந்து வார்த்தையை முழுங்கின மாதிரி இருந்தது….அதான். அது….அது…அது வந்து, வேற ஒண்ணுமில்லை…இப்பத்தான் நேக்கு பொருளோட அருமையே புரிஞ்சுது. அப்பப்பா….முதல் தடவையா டெல்லில எல்லாத்தையும் தொலைச்சுட்டு நின்னதும்…நான் பட்ட பாடு…எப்படியாவது கிடைச்சுடாதான்னு தவிச்சுப் போயிட்டேன்மா. தேடி…தேடி..தேடி…தேடி…நான் தோத்தேன். கண்டிப்பா என் அஜாக்கிரதைக்கு கிடைச்ச அடியாக்கும் […]
நெடுங்கதை:ஜெயஸ்ரீ ஷங்கர் ,புதுச்சேரி. லாவண்யாவின் கல்யாணம் கார்த்திக்கோடு நடந்து முடிந்ததைத் தன் கண்களால் ஆசை தீரக் கண்டு அட்சதையும் அள்ளித் தெளித்த ஜீவாவுக்கு மனசுக்குள் அத்தனை நாட்களாக புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் வெறி வெற்றியாக முடிந்ததில் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். லாவண்யாவின் அப்பா ஜீவாவின் பொறுப்பைப் பாராட்டி அவரது கம்பெனியில் அவனுக்கு உயர்ந்த பதவி தருவதாகச் சொல்லி தோளைத் தட்டிக் கொடுத்ததும் ஜீவா பெருமையில் பறந்தான்.கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல கிடைத்த இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் ரெண்டு […]
நெடுங்கதை கௌரி காலைவாரி விட்டதால் வந்த ஏமாற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தாள் கல்யாணி. “ஏன்னா, நீங்க முடிஞ்சா இன்னைக்கு மட்டும் உங்க ஆபீஸுக்கு லீவு போடுங்கோ .முதல் வேலையா கார்த்தியோட ஜாதகத்தை கையிலே எடுத்துண்டு கல்யாண மாலை கம்யூனிட்டி மீட் ஆனந்தா கல்யாண மண்டபத்துல நடக்கறதாம் ….நியூஸ் பேப்பர்ல இன்று வந்த விளம்பரம் பார்த்தேன் .அப்பாவா…லட்சணமா அந்த வேலையை உடனடியா பாருங்கோ…இல்லையானா விஷயம் நம்ம கைமீறி போயிடுமாக்கும்…வர வர கார்த்தியோட மூஞ்சியும் போக்கும் சரியில்லை. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்து […]
அந்த பிரம்மாணடமான லட்சுமி பில்டிங்க்ஸின் ஆறாவது தளத்தில் கௌரி லிப்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் முன்பாக அவள் போட்டுக் கொண்ட “ப்ளூ லேடி “சென்டின் மென்மையான மணம் அவளைத் தாண்டிக் கொண்டு அந்த நீள வராண்டா முழுதும் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டு பறந்தது…”டக் டக் ” என்ற கௌரியின் செருப்பின் சத்தம் எதிரொலியாக கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது. கௌரி வருவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்த ‘குரூப்4 செக்யூரிட்டி’ தன்னை சுதாரித்துக் கொண்டு […]
டாக்டர்……என் அம்மாவுக்கு என்னாச்சு? இன்னியோட நாலு நாட்கள் போயாச்சு…இன்னும் .ட்ரிப்ஸ்ல தான் இருக்காங்க..எம்.ஆர்.ஐ. ரிசுல்ட் கூட வந்தாச்சு…எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு டாக்டர்….ப்ளீஸ் டாக்டர் எங்கம்மாவை காப்பாத்திடுங்கோ என்று கண்களில் கண்ணீர் ததும்ப சொல்கிறான் பிரசாத். அவங்களுக்கு டைப் 2 டயாபடிஸ் , இரத்தக் கொதிப்பு, தைராயிட் எல்லாமே இருக்கறதா டெஸ்ட்ல தெரியுது. இப்போ ப்ளட் கிளாட் வேற…சுகர் லெவல் கொஞ்சம் கன்ட்ரோல் வந்து இப்போ தரும் இந்த ட்ரீட்மென்ட்ல அவங்களுக்கு குணமாகலைன்னா ஒரு அறுவை சிகிச்சை […]
டிடிங்……ட்டிங்…….டிடிங்…….டிடிங்……ட்டிட்டிங்……ட்டிட்டிடிங்…….டிங்க்க்க்க்க்க்க்க்…….தொடர்ந்து அவசர அவசரமாக அடித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கார்த்திக்கின் அம்மா கல்யாணி, சற்றே பரபரப்பானவளாக……யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்…. அதுக்காக இப்படியா.. காலிங் பெல்லை….பூஜை மணி அடிக்கிறா மாதிரி அடிக்கறது……என்று கோபத்தோடு சொல்லிக் கொண்டே “வரேன்…..வரேன்….வரேன்…..வரேன்….” காலிங் பெல் ஒரு தடவை அடிச்சா போதாதா…இது வீடா இல்லை செவிட்டு ஆஸ்பத்திரியா…..இப்படி நூறு தடவை அடிச்சு சுவிட்ச்சை கைல பேத்து எடுத்துண்டு வரேன்னு யாருட்டயாவது சவால் விட்ட மாதிரின்னா இருக்கு….நல்ல கூத்து….சொல்லிக்கொண்டே கதவைத் திறக்கவும்…எதிரில் அழகான பெண் […]