ஹார்ட் பீ டிரஸ்டிற்கு உதவ முன்வந்துள்ள பண்புடன் குழும நண்பர்கள் ஆசிஃப் மீரான், புவனா கணேசன், மற்றும் கோகுல் குமரன் (கூகுள் ஜி) ஆகிய அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பண்புடன் குழுமத்தில் நானும் ஒருத்தி ஆகையால் ஆர். வேணுகோபாலன் அவர்களின் வாழ்த்துக்களை மனமுவந்து ஏற்கிறேன். ஹார்ட் பீட் டிரஸ்டு உருவாகக் காரணமாக இருந்த என் வாழ்க்கைப் பின் புலங்களைக் குழும / இணைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். […]
பத்திரிக்கைகளையும் செய்தித்தாள்களையும் படிக்கும் போதும் தொலைக்காட்சி செய்திகளைக் கேட்கும் போதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சி நாடகங்களைக் காணும்போதும், நாம் வாழும் உலகின் போக்கும், சம்பவங்களும், நிகழ்வுகளும் மிகைப்படுத்தப்படல் நமக்குப் புலனாகிறது. உலக நடப்புகள் நன்மை தீமை, முரண்பாடு மற்றும் நேர்மைச் செயல்களின் தொகுதியே! இங்கு குறைபடுதலோ, அல்லது கூப்பாடு போடுதலோ, கண்டனங்களைத் தெரிவித்தலோ தேவையற்ற ஒன்று. ஒரு துருத்தியில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் கூழாங்கற்களைச் சேமித்தால், அங்கு கூழாங்கற்கள் மட்டுமே நிரம்பிகிடக்கும், அது […]
சில தினங்கள் வழக்கமானவை. சில தினங்கள் வழக்கத்திற்கு மாறானவை. காலம் மாறும்போது அதன் பயணம் மாறுகிறது. அப்படி நிகழ்ந்தது ஒன்று. நான் முற்றிலும் எதிர்பாராத விதமாக என் இனிய நண்பரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான திரு.வையவன் அவர்கள் ஹார்ட்பீட் டிரஸ்ட்டையும் என்னையும் பார்வையிட வரப் போவதாக முந்தின நாள் அறிவித்தார்கள். உலக புத்தகத் தினத்திற்காக மாநில கல்விக் கருவூலம் தமிழ்நாடு ஆளுநர் மேதகு .ரோசையா அவர்கள் ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர்கள் அந்தச் செய்தியைத் […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி பகுதி : 1 திடீரென்று ஒரு நாள் அவளை நான் சாலையில் சந்தித்தேன். அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ ஆறுதல் வேண்டி ஓய்வெடுத்தது போல் பதிந்தன. அவற்றிலிருந்து கண்ணீரின் ஈரம் என் கன்னத்தில் பட்டு நான் அவள் முகத்தை நிமிர்த்தினேன். என் கண்களைச் சந்திக்கக் கூச்சப்பட்டு அவளது இமைகள் தாழ்ந்தன. என் கவிதை உள்ளம் […]
சாலையில் விழுந்து கிடக்கும் குடிமகன்களைக் காணும் போதெல்லாம் என் மனம் பதை பதைக்கிறது. எந்த தாய்மாரின் தலைமகன்களோ, வாந்தி பண்ணும் போது கருவிற்கு நோகக் கூடாதென்று அடிவயிற்றைப் பிடித்திருப்பாள். சளி காய்ச்சலுக்கும் தாங்காமல் பத்தியம் என்று பட்டினி கிடந்திருப்பாள். குலம் விளங்க குலக்கொழுந்திற்காய் கோயில் வலம் வந்திருப்பாள். குடி போதையில் தரையில் விழுந்து புரளும் இவனைக் கண்டால் எப்படி தவித்துப் போய்த் துடிப்பாள் ? குடிப்பழக்கம் ஏழையர் குடியைக் கெடுக்குது. வரிப்பணத்தை வாரிக் குவிக்கும் அரசாங்கத்துக்கு […]
எங்கும் திருவிழா கோலம். விநாயக சதூர்த்தியின் கைங்காரியம்,விடுமுறை தினம். சீரியல் விளக்கொளியில் அந்த தெருவே மின்னியது. அழகு தேவதைகள் போல உலா வந்த அத்தெருவின் இளம் பெண்கள். குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள். பிள்ளையார் ஒவ்வொரு வீட்டு வாசலுக்காய் வந்து சுண்டலும் கொழுக்கட்டையும், பூசையும் ஏற்று விநாயகர் தான் கொலுவேற்கும் இருப்பிடத்தில் போய் அமர்ந்துக்கொண்டார். சிறிய குழந்தை ஒன்று விநாயகர் அகவல் படித்தது மைக்கில். பிறகு குழந்தைகள் பாடல்கள் வேறு பாடிக்கொண்டிருந்தார்கள். அந்த […]
ஒரு முடிவிற்கு வந்தாயிற்று, இனி மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று. என் தனித்துவத்தை நானே வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்க, என்னை நான் வடிவமைத்துக் கொள்வதில் என் நண்பர்கள் பெரும்பங்கு உதவி வருவதை அனுபவத்தில் கண்டேன். தாழ்வு மனப்பான்மையில் இருந்து நான் வெளி வரவும். சமூகத்தில் நான் முக்கிய பங்கு வகிப்பதையும் அவர்கள் விரும்பு கிறார்கள். உன் பாதம் கல்லில் இடராதபடி அவர்கள் தாங்கிக்கொண்டு போவார்கள் என்று ஒரு வேத வசனம் உண்டு. வேதத்தை […]
எப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது ஒன்று தான். எங்கும் கல்வி கூடங்களை அமைக்க வேண்டும். கல்வி தரமானதாக இருக்கவேண்டும். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படக் கூடாது. அதையும் தாண்டி என் முழுமையான கனவு என்பது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதே! நான் எதையெல்லாம் வலியாக உணர்ந்தேனோ அந்த வலிகளை நிவர்த்திக்க கூடிய வகையில் அநேகருக்கு வேலை வாய்ப்பை தரும் […]
தினம் என் பயணங்களைத் தொடர்ந்து எழுத வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருக்க, மொத்த கட்டுரையும் எடுத்து படித்த போது சோர்ந்து போனேன். என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? என் சோகத்தை உலகம் எங்கிலும் பந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் வாங்க, கூடி ஒப்பாரி வைப்போம் என்று அழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உண்மை எனக்கு புரிந்த போது, மனம் சோர்ந்தது. நான் எதை செய்யக் கூடாது என்று எண்ணுகிறேனோ அதைச் செய்கிறேன். அதைச் செய்ய முனையும் போது அதை […]
வாழ்க்கையின் தேடல்களும் மனம் போகிற போக்கும் அலாதியானது. காரணமற்ற மன அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதும், எதற்காக வருகிறதென்பதும் புரியாத புதிர்கள். அப்படியான ஒரு நாள் பொழுதில், அலுவலகம் நோக்கிய எனதான பயணத்தில், காலை புலர்ந்து பனி வாடாத மலர்போல் இருந்தது. எங்கோ ஓர் காகம் கரைய, காகக் கூட்டத்திலாவது பிறந்திருக்கலாமோ என்றெண்ணிக் கொண்டேன். இறக்கைகளைச் சட்டென்று விரித்து நினைத்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்றெண்ணியபடி கடந்த போது தான் பொத்தென்று ஒரு […]