author

வாழ்க்கை ஒரு வானவில் அத்தியாயம் 3

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

  ஜோதிர்லதா கிரிஜா          சேதுரத்தினம் பேருந்து பிடித்து முதலில் கடற்கரைக்குப் போனான்.  நாடாத்திரி விளக்கு வெளிச்சத்தில் ஒரு பையன் முறுக்கு, சுண்டல் ஆகியவற்றை விற்றுக்கொண்டிருந்தான். தன்னைச் சுற்றிலும் கமழ்ந்துகொண்டிருந்த வாசனைகள் மீண்டும் தன்னுள் பசியைத் தோற்றுவித்தாலும் வியப்பதற்கில்லை என்று மனத்துள் சொல்லிக்கொண்டான்.  அந்த வாசனைகள் ஓட்டலையும், புதிய பணியாள் ராமரத்தினத்தையும் அவனுக்கு நினைவூட்டின. ராமரத்தினம்! அவனைப் பற்றி நினைத்த போது, பெண்களினுடையவை போன்ற அவனின் கரிய, பெரிய விழிகளே அவன் கற்பனையில் தோன்றின. ஊர்மிளாவைப் […]

நீங்காத நினைவுகள் 46

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா பல்லாண்டுகளுக்கு முந்திய விஷயம். தமிழ் வார இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதை எழுதியவர் இந்து முன்னணிக் கட்சியைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னென்ன விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது என்பது இப்போது முக்கியமானதன்று. ஆனால் அதை எழுதியவர் அதில் சொல்லியிருந்த ஒன்று மட்டும் இன்றளவும் மறக்கவே இல்லை. அவர் சொன்னதை இங்கே திருப்பி எழுதுவதற்கே கை கூசுகிறது. அதாவது – அன்னை தெரசாவின் முகம் ஒரு சூனியக்காரியின் முகம் போல் […]

வாழ்க்கை ஒரு வானவில் அத்யாயம் 2

This entry is part 33 of 33 in the series 12 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா 2. “ராஜாவை இன்னும் காணோமேடி? அஞ்சரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் முடிஞ்சு உடனே கிளம்பினா ஆறரைக்குள்ளே வீட்டில இருக்க வேண்டாமோ? மணி ஏழாகப் போறதே!” என்று புலம்பியபடி பருவதம் அந்தச் சின்ன வீட்டுப் பகுதியில் உள்ளுக்கும் வாசலுக்குமாக நடந்துகொண்டிருந்தாள். “நீ இப்படிப் புலம்பிண்டே நடையா நடந்தா மட்டும் அவன் சீக்கிரம் வந்துடுவானா என்ன! ஏற்கெனவே முட்டிவலின்னு சொல்லிண்டு எதுக்கு இப்படி அலையறே? பேசாம உக்காரேன் ஒரு இடத்துலே. அவன் டைபிஸ்ட் ஆச்சே? தவிர இன்னைக்குத்தான் முதல் […]

நீங்காத நினைவுகள் 45

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா 1983 ஆம் ஆண்டு என்று ஞாபகம். குடும்பக் கட்டுப்பாட்டு இலாகாவைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று நினைக்கிறேன். குடும்பக்கட்டுப்பாடு தொடர்புள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்பது பற்றி என்னைக் காணவந்திருந்ததைத் தெரிவித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. ‘நீங்கள் தப்பான ஆளிடம் வந்திருக்கிறீர்கள்!’ என்று நான் சொன்னதும் அவர் புன்னகை பூத்தார். ‘இல்லை, மேடம். அது பற்றிய கருத்தைப் பொறுப்பு உணர்வுள்ள மக்களில் எவர் […]

வாழ்க்கை ஒரு வானவில் – 1 (ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் புதிய தொடர்)

This entry is part 31 of 31 in the series 4 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா 1. ஊர்மிளா ஊருக்குப் போனதிலிருந்து சேதுரத்தினம் தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறான். இன்று சமையல் செய்வதற்குக் காத்திருக்க இயலாத அகோரப் பசியுடன் அவன் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். சின்ன வயசிலிருந்தே சமையல் செய்து அவனுக்குப் பழக்கமாகி யிருந்ததால், அதில் அவனுக்குச் சிரமம் ஏதும் தெரிவதில்லை. ஒரு வகையில் உற்சாகமாய்க் கூட இருந்தது. ஊர்மிளாவுக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு சமயம், போது என்றால் நெருக்கடியைச் சமாளிக்க அவனுக்குத் தெரிந்திருந்ததால், தனது சுமை குறைந்ததை எண்ணித்தான்! […]

நீங்காத நினைவுகள் – 44

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

ஜோதிர்லதா கிரிஜா சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரபல எழுத்தாளரும் (தற்போது ஓய்வு பெற்றுள்ள) அன்றைத் தமிழகக் காவல்துறை உயர் அலுவலருமான ஒருவர் போரில் வெற்றி பெறும் ராணுவத்தினர் தோற்ற நாட்டின் பெண்களை வன்னுகர்வு செய்வது பற்றித் தமிழகத்தின் வார இதழ் ஒன்றில் ஒரு கேள்வியை எழுப்பி யிருந்தார். அவரது கேள்விக்கு அதன் தலைமை உதவி ஆசிரியர் கீழ்க்கண்டவாறு பதில் அளித்திருந்தார்: “முதல் வேலையாக (தோற்ற) அந்நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு (வெற்றி பெற்ற நாட்டு) ஆண்கள் உட்படுத்துவது […]

நீங்காத நினைவுகள் – 43

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

ஜோதிர்லதா கிரிஜா அமரர்களாகிவிட்ட அற்புதமான பெண் எழுத்தாளர்களில் “லக்ஷ்மி” (டாக்டர் திரிபுரசுந்தரி) சூடாமணி, அநுத்தமா, குமுதினி, வை.மு. கோதைநாயகி போன்றோர் அடக்கம். இவர்களில் வைமுகோ, குமுதினி ஆகியோர் ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி ஆகியோருக்கும் மூத்தவர். இவ்விருவரையும் பற்றி அதிகம் அறிந்திலேன். இங்கே நினைவுகூரப் போவது நான் அறிந்துள்ள ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி ஆகியோரைப் பற்றி மட்டுமே. அவ்விருவரும் எனது சிறுகதை யொன்றுக்கு வெவ்வேறு விதமாக எதிரொலித்தது இன்னும் மறக்கவில்லை. 1980 இல் அமரர் மணியன் அவர்கள் இந்திரா […]

நீங்காத நினைவுகள் – 42

This entry is part 7 of 19 in the series 13 ஏப்ரல் 2014

முனைப்பான விஷயங்களைப் பற்றியே எழுதிவரும் கட்டுரைகளுக்கிடையே, நகைச்சுவைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தால் என்ன என்று தோன்றியதில், இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது. (முன்பே ஒரு முறை பத்திரிகைகளில் வந்த ஜோக்குகள் என்கிற அறிவிப்புடன் சில ஜோக்குகள் ஒரு கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தன.) ஒன்று சொன்னால் நம்புவீர்களோ என்னமோ, தெரியவில்லை.  கதைகள் படிப்பதை நிறுத்திப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன. வெகு நாள்களாக ஜோக்குகளைப் படிப்பதுதான் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. தொடர்கதைகளைப் பொறுத்தவரையில், யாருடையதாக இருப்பினும், அது வரும் பத்திரிகை கையில் […]

நீங்காத நினைவுகள் 41

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

      கொஞ்ச நாள்களுக்கு முன்னால் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியர் – சிறந்த சிந்தனையாளரும் ஆன்மிகவாதியும், என்னுடைய நண்பரும் ஆன ஓர் எழுத்தாளர் –இன்று எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் பற்றிய தமது ஆற்றாமையை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைத் திரைப்படப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  ஏன்? கொஞ்சமும் தெரியாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நண்பர்கள் மூலமும், பத்திரிகைகளில் வரும் விமரிசனக் கட்டுரைகளிலிருந்தும் அவ்வப்போது சிலவற்றைத் தெரிந்து கொள்ளூவதுண்டு. அவ்வாறு கேள்விப்பட்ட ஒரு பாடல் – […]

நீங்காத நினைவுகள் 40

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் இவ்வாண்டின் மார்ச் மாதம் 25 ஆம் நாளில் காலமானார். இவரது அறிமுகம் 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அதுவரையில் அவரது பெயரை மட்டுமே அறிந்திருந்தேனே யல்லாது, அவரை நேரில் பார்த்தது கூட இல்லை.  சி.எல்.எஸ். என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டு வந்த ‘க்றிஸ்டியன் லிட்டரேச்சர் சொசையட்டி’ – கிறிஸ்துவ இலக்கியக் கழகம் – என்கிற அமைப்பு அந்நாள்களில் ஆண்டுதோறும் […]