மிகுந்த பரபரப்புடனும் கொந்தளிப்புடனும் கிஷன் தாஸ் மீரா பாய் கண்ணாடித் தொழிற்சாலையில் மேலாளர் சேகரின் அறைக்குள் நுழைகிறார். அவரைக் கண்ட கணமே சேகர் எழுந்து நிற்கிறார். “குட் மார்னிங், சர்!” என்று சொல்லும் சேகரை நோக்கிப் பதிலுக்குத் தலை கூட அசைக்காமல், “தொலைபேசியில் நீங்கள் பதற்றத்துடன் பேசிய தினுசில் இன்று குட் மார்னிங் இல்லை, பேட் மார்னிங் என்றுதான் தோன்றுகிறது. என்ன நடந்தது? சொல்லுங்கள்!” எனும் கிஷன் தாஸ் பொத்தென்று நாற்காலியில் அமர்கிறார். நடந்தவை […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) சுமதியையும் சுந்தரியையும் முதலில் கங்கா அழைத்துச் செல்லும் பெரிய அறையில் பதின்மர்ச் சிறுவர்கள் பல்வேறு அலுவல்களில் ஈடுபட்டவாறு உள்ளனர். சதுரக் கண்ணாடிகளின் ஓரங்களை ஒட்டி இணைத்தல், வகை பிரித்து அடுக்குதல், பெட்டிகளில் வரிசையாக வைத்தல், எண்ணுதல் போன்ற அலுவல்கள். அறையின் ஓர் ஓரத்தில் ஒரு தட்டெழுத்துப் பொறி காணப்படுகிறது. சுமதி, “கங்கா! இந்தச் சிறுவர்-சிறுமிகளுடன் நான் கொஞ்ச நேரம் இருக்க விரும்புகிறேன். நீங்கள் இப்போது போகலாம். சிறிது நேரம் கழித்து நான் […]
16. கிஷன் தாசின் பங்களாவில் நடுக்கூடம். பிரகாஷ் தன் எம்.பி.ஏ. தேர்வுக்கான பாடத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான். படிப்பவன் போல் தென்பட்டாலும், அவனது முகத்தில் சிந்தனை தேங்கியிருக்கிறது. அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கேயே பக்கத்தில் சோபாவில் அமர்ந்தவாறு கிஷன் தாஸ் நாளிதழ் ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று கிஷன் தாஸ், “இப்போதெல்லாம் நாளிதழ்களில், கற்பழிப்பு, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் எக்கச்சக்கமாக வருகின்றன. இந்த அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இந்த முழு உலகமுமே பெண்களுக்குப் […]
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 15. கிஷன் தாஸ், பிரகாஷ் ஆகியோரின் அறைகளில் உள்ள சுவர்க் கடிகாரங்கள் சில நொடிகளின் இடைவெளியோடு நள்ளிரவு தாண்டிய 1:30 மணி என்பதைக் குறிக்க ஒரு முறை அடிக்கின்றன. திடுக்கிட்டுத் தூக்கம் கலைந்த நிலையில் கிஷன் தாஸ் எழுந்து உட்காருகிறார். அவர் கண்கள் மூடி இருக்கின்றன. அவர் தம்மிரு கைகளாலும் முகத்தைப் பொத்திக்கொள்ளுகிறார். சில கணங்கள் போல் மவுனமாக அப்படி உட்கார்ந்திருந்ததன் பிறகு எதனாலோ அஞ்சி நடுங்குபவர் போல் அவர் இரைந்து கூச்சலிடுகிறார். […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 14 அடுத்த நாள். கிஷன் தாஸ் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். எம்.பி.ஏ. தேர்வுக்குரிய பாடத்தைப் படித்தபடி பிரகாஷ் நடுக்கூடத்துச் சோபாவில் அமர்ந்திருக்கிறான். காப்பிக் கோப்பையுடன் நகுல் சமையலறையினின்று வருகிறார். அவரைப் பார்த்ததும் பிரகாஷ் நிமிர்ந்து உட்கார்ந்துகொள்ளுகிறான். பிரகாஷிடம் காப்பியைக் கொடுத்துவிட்டு, “பரீட்சைக்குப் படிக்கிறீர்கள் போலிருக்கிறது!” என்று சொல்லும் நகலை நோக்கித் தலையசைத்துவிட்டுக் காப்பியைப் பிரகாஷ் பருகுகிறான். “காப்பி மிகவும் பிரமாதம். ஆனால் மதராஸ் காப்பி அளவுக்கு இல்லை!” குறும்பாய்க் கண்சிமிட்டும் […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 13. கிஷன் தாசின் பங்களாவில், முன்னடிக் கூடம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கிஷன் தாசும் பிரகாஷும் பஞ்சணை நாற்காலிகளில் அமர்ந்து ஆளுக்கு ஒரு நாளிதழைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். தலை உயர்த்தும் பிரகாஷ், “அப்பா! நாம் காப்பி குடிக்கலாமா?” என்கிறான். “இன்று காப்பி கிடையாது, பிரகாஷ்!” “ஏன், அப்பா?” “அதிகாலையில் எழுந்து சமையலை முடித்துவிட்டு நகுல் தன் சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருக்கிறான். மாலையில்தான் திரும்புவான்.” “அப்படியானால ஃப்ரிட்ஜிலிருந்து நான் குளிர்ப்பானங்களை எடுத்து வரட்டுமா?” […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 12. கிஷன் தாசின் பங்களாவில் அவர் தம் படுக்கையறைக்குள் நுழைகிறார். முழு அலுவலக உடையில் அவர் இருக்கிறார். மிகுந்த களைப்புடன் இரைச்சலாய்ப் பெருமூச்சுவிடும் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம் டை, காலுறைகள் ஆகியவற்றைக் கழற்றுகிறார். அப்போது சமையல்காரர் நகுல் அங்கு வருகிறார். அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “குடிக்க ஏதேனும் கொண்டுவரட்டுமா, அய்யா?” என்று நகுல் அவரைக் கேட்கிறார். அதற்குப் பதில் சொல்லாமல், “பிரகாஷ் வீட்டில் இருக்கிறானா?” என்று அவர் […]
ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்) 11. தில்லியில் கிஷன் தாசின் பங்களா. முகவாயையும் கன்னங்களையும் தன்னிரு உள்ளங்கைகளிலும் தாங்கியபடி கிஷன் தாஸ் சிந்தனை அப்பிய முகத்துடன் தம் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது பிரகாஷ் அங்கு வருகிறான். கிஷன் தாஸ் அவனைப் பார்த்ததும் கைகளை முகத்திலிருந்து அகற்றிக்கொண்டு புன்னகை புரிகிறார். முகத்தில் புன்னகை தோன்றிய போதிலும் அவரது பார்வை ஒரு கூர்மையுடன் பிரகாஷின் மீது பதிந்திருக்கிறது. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பிரகாஷ் அதில் […]
ஜோதிர்லதா கிரிஜா 10 … சிகிச்சைக்குப் பின் மருத்துவ மனையிலிருந்து திரும்பியுள்ள சுமதி தன் வீட்டுக் கூடத்தில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளைத் தாக்கியவர்கள் ஏற்படுத்திய எலும்பு முறிவால் அவளது இடக்கை ஒரு தூளிக் கட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடிபட்டதால் அவளது முழங்கால் ஒன்றிலும் கட்டுப் போடப்பட்டுள்ளது. உச்சந்தலையில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டுள்ளது. சிறு வானொலிப்பெட்டியில் சுமதி சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். ஜெயராமன் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். ஜானகி வழக்கம் போல் வீட்டு அலுவல்களைச் செய்துகொண்டிருக்கிறாள். கதவு தட்டப்படும் […]
சுமதியின் வீட்டில் நடுக்கூடம். நுழை வாயில் கதவைத் தட்டிய பிறகு கிஷன் தாஸ் உள்ளே வருகிறார். சுமதியும் ஜெயராமனும் அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று அவருக்கு மாலை வணக்கம் சொல்லுகிறார்கள். “வாருங்கள், சர், வாருங்கள்! உட்காருங்கள்!” என்று ஜெயராமன் உபசரிக்கிறார். ஒரு நாற்காலியில் அமர்ந்ததன் பின் சுமதியை நோக்கி அன்புடன் புன்னகை புரிந்தவாறு தாம் கொண்டுவந்துள்ள சோழா ஓட்டலின் இனிப்புப் பொட்டலத்தைக் கிஷன் தாஸ் அவளிடம் தருகிறார். “நன்றி, மாமா!” என்று கூறிவிட்டு அதை வாங்கி […]