This entry is part 1 of 9 in the series 12 ஜூலை 2026

_ லதா ராமகிருஷ்ணன்

குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் பொது நிகழ்ச்சியொன்றைத் திரையிட்டுக் காண்பித்த பள்ளித் தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று இன்றொரு செய்தி. ஆனால், பள்ளிகளில் குழந்தைகளை வார்த்தைகளாலும், தண்டனைகளாலும் தினந்தோறும் கொடுமைப்படுத்துவது பல பள்ளிகளில் நடந்துகொண்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் சரி, தனியார் பள்ளிகளிலும் சரி. அத்தகைய இரண்டு விஷயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இத்தகைய குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் எப்படி கல்விக்கூடங்களில் வழக்கமான நடைமுறையாக அனுமதிக்கப்படுகின்றன.

கேரளாவைச் சேர்ந்த மல்லப்புரத்தில் ஆசிரியர் அடித்ததில் மாணவிக்கு கையே முறிந்துவிட்டது. என்ன கொடுமை இது?

ஜெய்ப்பூர் பள்ளியொன்றில் கடந்த நவம்பர் 25ஆம் நாள் நான்காம் வகுப்பு மாணவி  பள்ளியில் மாடியிலிருந்து குதித்து இறந்தாள். அது தற்கொலையென்று சொல்லப்பட்டது. இப்போது அவளுடைய பெற்றோர் வெளியிட்டிருக்கும் காணொளி காட்சிகளில் மாடியிலிருந்து குதிப்பதற்கு முன் அந்த மாணவி வகுப்பில் சில மாணவர்களால் கேலி செய்யப்படுவதும், அது குறித்து அவள் நான்கைந்து முறை ஆசிரியையிடம் சென்று புகார் செய்தும் அந்த ஆசிரியர் அதைப் பொருட் படுத்தாமல் அலட்சியப்படுத்துவதும் அதனால் அந்தப் பெண் மாடிக்கு ஏறிச்சென்று குதிப்பதும் பதிவாகியிருக் கின்றன.

ஆசிரியை ஏன் அப்படி அலட்சியமாக இருந்தார் ? அந்த மாணவர்கள் அவர்களைப் போன்றவர்களுக்குத் திரைப் படம், தொலைக்காட்சிகளின் தாக்கம்தான் அவர்களை அப்படி சக மாணாக்கர்களாக உள்ள பெண்களை நடத்தச்செய்கிறதா?

கல்விக்கூடங்களில் அரசியல்வாதிகள் தலையீடு கூடாது என்பது சரிதான். அதற்காக, கல்விநிலையங் களை வெளியுலகின் பார்வைக்கு உள்ளே நடப்பது புலனாகாத இரும்புக்கோட்டையாகக் காவல்காக்க வேண்டிய அவசியமென்ன?

Sensitization Programmes  ஆசிரியர்களுக்கு, பெற்றோர்க ளுக்கு, மாணாக்கர்களுக்கு, சமூகத்திற்கு என்று பல நிலைகளில் அவசியமாக இருக்கிறது. ஒரு கோர சம்பவம் நடந்தால் தான் இதுபற்றியெல்லாம் கவனத் தில் எடுத்துக்கொள்வோம் என்றிருப்பது சரியல்ல.

தேசியக் கல்விக் கொள்கையைப் புறக்கணிப்பதால் 24 அரசு பல்கலைக்கழகங்களின் தர வரிசை பாதிக்கும் என்று அகல்விரிவாகச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வருக்கு கல்வியாளர் திருவாசகம் எழுதியுள்ள கடிதம் தினமலரில் ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது. ‘ஐயையே, தினமலரா’ என்று பழிப்பவர்கள் அந்த செய்தியில் தரப்பட்டுள்ள தரவுகள் தவறானவையா என்று சுட்டிக்காட்ட முன்வருவதே சரி. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட வெகு சில மாநிலங்களே தேசியக் கல்விக்கொள்கையை எதிர்க்கின்றன. இதனால் பாதிப்படையப்போவது மாணாக்கர்களும், பல்கலைக்கழகங்களும், ஆசிரியப்பெருமக்களும் என்பது வருத்தத்திற்குரிய, கவனத்திற்குரிய விஷயம்.

மதத்தின் பெயரால் நீர்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் – ஜி.ஆர்.சுவாமிநாதன், பி. புகழேந்தி – அளித்திருக்கும் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படவேண்டியது. தாமிரவருணி நதியில் மே 2026 இல் மட்டும் கொட்டப்பட்டுள்ள கழிவுகளைப் படித்தால் தலை சுற்றுகிறது. நாம் நதிகளை தெய்வங்களாக வழிபடுபவர்கள்.

டாஸ்மாக் கடைகளும், BARகளும்

குடிகாரர்களோ, மதுப்பிரியர்களோ – வாடிக்கையாளர்கள். அரசு கஜானா கணிசமாக நிரம்ப உதவி செய்பவர்கள்.

டாஸ்மாக் கடைகள், வாடிக்கையாளர்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போதெல்லாம்  நீதிபதி சந்துரு, எழுத்தாளர் சாரு நிவேதிதா இருவரும் அக்கறையுடன் எழுதிய கட்டுரைகள் நினைவுக்கு வரும். டாஸ்மாக் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு (பலர் பட்டதாரிகள்) ஏற்படும் நோய்கள், நுரையீரல் சம்பந்தமான பாதிப்பு கள் குறித்தெல்லாம் அகல்விரிவாய் எழுதியிருந்தார். திரு.சந்துரு. அவற்றிற்கான மாற்றுவழிகளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அயல்நாடுகளில் அரசால் நடத்தப்படும் மதுவிடுதிகள் எத்தனை சுத்தமாய், விசாலமாய் கட்டமைக்கப்பட் டிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி அப்படி இங்கே டாஸ்மாக் கடைகளை, மதுவிடுதிகளை அழுக்காக, அசுத்தமாக , இருளோடி வைக்காமலிருந்தாலே (அவர்களும் வாடிக்கையாளர்கள்தானே, விலைகொடுத்துத் தானே மதுவாங்குகிறார்கள், அருந்துகிறார்கள்) ங்கு வந்து மதுவருந்துபவர்களும் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள், அநாகரீகமாகக் கத்திக்கூப்பாடு போட மாட்டார்கள் என்று விளக்கி எழுதியிருந்தார் திரு.சாரு நிவேதிதா.  தமிழக அரசு இந்த கருத்துகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அத்தனை தட்டுக்கெட்டதா தமிழ் இலக்கிய வெளி?

……………………………………………………………………………………………………………..

தமிழ் இலக்கிய வெளி குறித்து தொடர்ந்த ரீதியில் அல்லது தொடர்ந்த இடைவெளிகளில் ஒரு ‘கதை’ கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது ‘தமிழ் இலக்கிய வெளி ஆணாதிக்கப்போக்குடையது. மேட்டுக் குடியினரும் முற்படுத்தப்பட்ட சாதியினருமே மேலாதிக் கம் செலுத்தினர்; செலுத்துகின்றனர்’. அப்படியா?

இப்படிச் சொல்லிச்சொல்லியே தம்மை இலக்கியவெளி யில் தங்கள் எழுத்தின் தரத்தை மீறிய அளவில் முக்கிய மானவர்களாக நிறுவிக் கொண்டவர்கள், அதற்கு உறு துணையாக வந்த எத்தனையோ (பெரும்பாலும்  இலக் கிய நுட்பங்கள் அறியாத) ஆண்கள் அளித்த ஆதரவை யும் இல்லையென்று சொல்லத் தயங்குவதேயில்லை. 

எழுதும் பெண்கள் எல்லோரையும் இப்படி பலிகடாக்க ளாக அடையாளப்படுத்தி அதனால் கிடைக்கும் விளைச் சலை அறுவடை செய்பவர்களாக ஒரு சிலரே இருக்கி றார்கள். இது மிக மோசமான அடையாளமழிப்பு; marginalization. சமத்துவம், சமூகநீதி என்று பேசியபடியே ஒரு தரப்பினரில் ஒரு சிலர் மட்டுமே கோடீஸ்வரர்களா வது போல்.

இலக்கியவெளியில் இயங்கும் ஆண்களின் எண் ணிக்கை அதிகமென்பதால் அவர்களுக்கான இடர் பாடுகளும், இழுபறி நிலைமைகளும், அதிகம். ஆண்க ளென்பதால் அவர்களுக்கான இடம் எளிதில் கிடைத்து விடுகிறதா என்ன?

எனக்கு சந்திரபாபு பாடிய பாடல் தான் ஞாபகம் வருகிறது:

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை

காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை

மணமுடித்த அனைவருமே சேர்ந்துவாழ்வதில்லை

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்துபோவதில்லை.

சமூகவெளி, இலக்கியவெளியிலும் இதுதான் நடப் புண்மை.

தமிழ் இலக்கியவெளியில் புகழும் பணமும், அங்கீகா ரமும் கிடைக்காத நிலையிலும் எழுத்திலும் வாசிப்பி லுமான ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களே அதிகம். இதில் ஆண்களின் மேலாதிக்கம் எங்கிருந்து வந்தது?

சில கருத்து மோதல்கள், வேறுபாடுகள் இருக்கலாம். அதை அங்கங்கேயே பேசி முடித்துவிடுவதை விட்டு காலகாலத்திற்கும் போகுமிடமெல்லாம், வாய்ப்பு கிடைத்தபோதெல் லாம் தமிழ் இலக்கியவெளியே ஆணாதிக்க வெறி பிடித்தவர்கள், பெண்-எதிர்ப்புக் கொடுங்கோலர்கள் நிறைந்த பரப்பு போல் உள்ளூரிலும் வெளியூரிலும் வெளிநாடுகளிலும் திரும்பத் திரும்பக் கருத்துரைத்துக் கொண்டிருப்பது ஒருவித சுயலாப நோக்கத்திற்காகவே என்று சொல்லத் தோன்றுகிறது. இதுவும் ஒருவகை reductionist theory  தான்.

இத்தகைய false narrative ஐ அவ்வப்போது ஆரோக்கி யமான, அகல்விரி வான முறையில் எதிர்த்துக் கேள்வி கேட்காமல், கருத்துரைக்காமல் வாளாவிருந்தால் இன்னும் 200, 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய தமிழ் இலக்கியவெளியைப் பற்றி என்னவெல்லாம் பேசப்படுமோ, எத்தகைய பிம்பங்கள் வலம் வருமோ என்பதை இன்றைய படைப்பாளிகள், வாசகர்கள் எண்ணிப் பார்க்கவேண்டியது அவசியம்.

Series Navigationபுக்கட்–ஜேம்ஸ் பாண்ட் தீவுக்கு அப்பால்