– லதா ராமகிருஷ்ணன் ஜெயதேவன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ,பண்ணைக்காடு சொந்த ஊராகவும் வத்தலக்குண்டுவை குடியிருப்பு ஊராகவும் கொண்டவர் .,இவர் தொடர்ந்து இயங்கும் கவிஞர் .இவரது கவிதைகள் காக்கைச் சிறகினிலே , உயிர் எழுத்து , கணையாழி , இனிய உதயம் போன்ற இதழ்களில் தொடர்ந்து வருகின்றன . இவரது இதுவரையான கவிதை நூல்கள் விடியலை நோக்கி , சுய தரிசனம் , ஐந்தாவது யுகம், ,இன்றைய செய்திகள் , கண்ணாடி நகரம் ,அம்மாவின் கோலம் ,முச்குலம் என்னும் […]
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் 1.பிழைப்பு ”ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?” ”கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?” ”வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்கு” என்பார் மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு அவரவர் கட்சி கொடுத்திருக்கும் இரண்டு லட்சம் அல்லது இருபது லட்சம் விலையுள்ள காரில் கட்டுசெட்டாக ஏறிக்கொண்டு சுவர்களிலெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கும் தத்தம் தானைத்தலைவர்களின் திருவுருவப்படங்களை தரிசித்தபடியே ’கவரை’ கவனமாகத் திறந்து உள்ளிருக்கும் ரொக்கத்தைத் தம் பைக்குள் திணித்தபின் ’மறவாமல் […]
வதை சொர்ணபாரதி அட்சயபாத்திரத்தை யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல் திரிந்துகொண்டிருந்தாள் அறச்செல்வி நிலாவில் இருந்துவந்த ஒரு கானகன் சிலகாலம் அப்பாத்திரத்தைச் சுமந்துசென்றான் அக்கரைப் பணத்தில் காலங்களை விற்று மேற்குமலையோரம் பதுங்கிய ஒரு மாயக்காரன் தன் பங்கிற்குக் கொஞ்சம் சுமந்தான் இடைவெளியில் வார்த்தைமலர்களால் வசப்படுத்திய மகிழ்ச்சி மைந்தன் ஒரு துரோகப் பாட்டிசைத்து பாத்திரத்தை வீசிச் சென்றான் எப்போதும் காதலைச் சுமந்தபடி வந்துநின்ற உதயகுமாரனைப் புறந்தள்ளிய அறச்செல்வி பிள்ளைப்பிராயத்து பளிக்கறையில் தஞ்சம் புகுந்தாள் வளர்ந்துநின்ற பளிக்கறையோ அறச்செல்வியைச் சிறைப்படுத்தி தன் ‘ப்ராப்பர்ட்டி’ […]
‘ரமேஷ் பிரேதனி’ன் — ‘காந்தியைக்கொன்றதுதவறுதான்’ என்ற கவிதையை முன்வைத்து _ லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ரமேஷ் பிரேதனின் இந்த நீள்கவிதையைப் படித்த தாக்கம் இன்னும் அகலவில்லை. உலக இலக்கியத்தின் எந்தவொரு முதல்தரமான, கவித்துவம் மிக்க அரசியல்கவிதையோடும் இணையாக நிற்கக்கூடிய காத்திரமான கவிதை இது. இந்த நீள்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனிக் கவிதைகளாக, தன்னிறைவு பெற்ற கவிதைகளாக வாசிக்கப்படத் தக்கவை; பொருள்தரத் தக்கவை. இந்தக் கவிதை அல்லது கவிதைகளில் அங்கிங்கெனாதபடி காந்தி என்ற வார்த்தை அல்லது பெயர் வருகிறது. […]
லதாராமகிருஷ்ணன் க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்] [ ஜனவரி 31, 1912 –டிசம்பர் 18, 1988] ( “இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான் – – க.நா.சு) [இந்தச் […]
லதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்; விற்பனை உரிமை – புதுப்புனல் பதிப்பகம் – பாத்திமா டவர் முதல் மாடி(ரத்னா கபேக்கு எதிரில்), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை. சென்னை 600 005. தொலைபேசி : 9884427997 ; மின்னஞ்சல் pudhupunal@gmail.com நூலாசிரியர் ராமாராவ் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக […]
ஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன் தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன் தோற்போம் என்று தெரிந்தும் தோற்றவனுக்குக் கிடைக்கக்கூடிய சிறுதொகைக்காக போட்டியில் கலந்துகொள்ள கால்நடையாச் செல்வதும், களத்தில் அவனுடைய உடல், மன இயக்கங்களும் இந்த நீள் சிறுகதையின் கருப்பொருளாக அமைந்துள்ளன. பக்கங்கள் சுமார் 90. விலை ரூ.100. புதுப்புனல் வெளியீடு.(தொடர்புக்கு : தொலைபேசி – 9884427997. மின்னஞ்சல் முகவரி : pudhupunal@gmail.com) இதில் ஒரு […]
மிர்சா காலிபின் 440 கவிதைகள் பாரசீகமொழியிலிருந்து திரு.மூஸா ராஜாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழில் இப்போது வெளியாகியுள்ளன. வெளியீடு: கவிதா பதிப்பகம் : விலை: ரூ.275. தொடர்புக்கு : 044 2436 4243, kavithapublication@gmail.com) மூஸா ராஜா: அரபு, பாரஸீகம், உருது மற்றும் ஆங்கில மொழிகளின் வாழ்நாள் மாணவராக விளங்குபவர். இந்தியக் குடிமைப் பணியில் (IAS) தனி முத்திரை பதித்தவர். இவருடைய நாட்டுநலப்பணியைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் 2010இல் பத்மபூஷன் விருது வழங்கினார். இவருடைய மனதில் என்றைக்கும் […]
தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களான நிழல்களின் உரையாடல் என்ற மார்த்தா த்ராபாவின் நாவல் மற்றும் சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான 33 லத்தீன் அமெரிக்க சிறுகதைகளடங்கிய நூல் (தொகுப்பும் மொழிபெயர்ப்பும் அமரந்த்தா) ஆகியவை குறித்த திறனாய்வுக்கூட்டம் நடந்தேறியது. நிழல்களின் உரையாடல் என்ற புதினம் குறித்து திரு. வீ.அரசு மிக […]
(*தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளரான அமரந்த்தாவின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து சென்னையிலுள்ள மார்க்ஸ் நூலகம் சார்பில் நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட திறனாய்வுக் கூட்டத்தில் சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் என்ற தலைப்பிலான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்(தொகுப்பும் மொழியாக்கமும் –அமரந்த்தா) குறித்து நான் எழுதி வாசித்த கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது) வெளியீடு : யாழ் புத்தகம் / காலக்குறி பதிப்பகம் முதற்பதிப்பு : ஜனவரி, 2017 408 பக்கங்கள் – 33 சிறுகதைகள் […]