அகஒட்டு, இலக்குமி குமாரன் ஞானதிரவியம். அன்னம், தஞ்சாவூர், விலை. ரு. 140. கவிஞர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம். கவிதைகளை ஒருகட்டத்தில் கடந்து கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் என்று அவரின் படைப்பு வகைமைகள் பரவி வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. படைப்புகளின் முலம், முதல் கவிதை அதன் பின்னணியிலேயே மற்ற வகைமைகள் வளர்கின்றன என்ற பொது வரம்பிற்கு அவரும் ஒத்துப்போகிறார். அவரது அக ஒட்டு என்ற நாவலை ஒரே முச்சில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நாவலில் அத்திவெட்டி என்ற […]
புதுக்கோட்டை உலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011 ஞாயிறன்று காலை 10 மணியளவில் விஜய் உணவக மாடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முனைவர் சு. கணேசன் அவர்கள் திருவள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். மேலும் திரு பாபு ராஸேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அனைவரும் வருக அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். — M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com
முனைவர் மு. பழனியப்பன் சித. சிதம்பரம், பூம்புகார்க்கவிதைகள், முருகப்பன் பதிப்பகம், பழனியப்ப விலாசம், 48. முத்துராமன் தெரு, முத்துப்பட்டணம், காரைக்குடி, 630001- 2011 ஆகஸ்டு, விலை ரு. 60 கவியரங்கம் என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர் அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில் கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை […]
முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. […]
ஏலாதி என்ற நூல் நீதி நூல்களில் ஒன்றாகும். இதனுள் ஆண்களுக்குரிய நீதிகளும் பெண்களுக்கு உரிய நீதிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் வழியாகப் பெறப்படும் இந்த நீதிகளைக் கொண்டு அந்தக் காலத்தில் ஆண்சமுகம் மற்றும் பெண் சமுகம் ஆகியன எவ்வாறு இருந்தன என்பதனை அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தக் கட்டுரையின் வழியாக ஏலாதி என்ற நீதி நூல் காலத்தில் ஆண்களுக்கு உரிய நீதிகளாகக் காட்டப் பெற்ற செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன. ஏலாதி ஆண்களைச் சிறந்தவர்களாக ஆக்குவதற்காக அவர்களுக்கு உரிய நல்ல […]
தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது. செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு சிறப்புக் கூறு நடுவுநிலைமை என்பதாகும். இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைப் பண்பை வெளியுலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது. பட்டினப்பாலை என்ற பத்துப்பாட்டு நூலில் தமிழர்களின் நடுவுநிலை […]