1984 ஆம் ஆண்டு. திருமணத்துக்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கர்நாடகத்தில் உள்ள ஹோஸ்பெட்டிலிருந்து புதுச்சேரிக்கு வர ஒரு நாள்முழுக்க பயணம் செய்யவேண்டும். ஹோஸ்பெட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு தொடர்வண்டி. அங்கிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி. அதற்குப் பிறகு விழுப்புரத்துக்கு ஒரு தொடர்வண்டி. அப்புறம் புதுச்சேரிக்கு ஒரு வண்டி. எனக்கு தொடர்வண்டிப் பயணங்கள் பிடிக்கும் என்பதால் நேரத்தைப்பற்றி கவலைப்படாமல் இப்படி மாறிமாறிப் பயணம் செய்தேன். சென்னையில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து பூங்கா நிலையத்துக்குச் செல்லும் வழியில் ஒரு […]
அதிகாலையின் அமைதியில் குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக் கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூ மூட்டைகள் பாலைச் சூடாக்க அடுப்பைப் பற்றவைக்கிறார் தள்ளுவண்டிக்காரர் திருட்டு ரயிலேறி பிழைப்புக்காக நகருக்குள் வந்தவன் இருட்டைக் கண்டு அஞ்சியபடி நடுக்கத்தோடு நிலையத்துக்குள் வருகிறான் ஆற்றின் மடியில் ஊற்றெடுப்பதைப்போல ஒரே சமயத்தில் அவன் நெஞ்சில் சுரக்கிறது நம்பிக்கையும் அச்சமும் மாற்றுடைகள் […]
1. கருணை பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின் அடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன் அதைக்கண்டு முகம் மலரும் பூக்களுமில்லை அதற்குக் கன்னம் காட்டிச் சிரிக்க ஒரு குழந்தையும் இல்லை அதன் வரவால் களிப்பவர்களும் யாருமில்லை அடர்ந்த குகைபோல மூடிக் கிடக்கிறது அந்த வீடு ஏற்றுக்கொள்ள யாருமற்ற நிலையிலும் வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன் 2. ஒரு பகுதிக் கனவு எல்லாமே மறந்துபோக நினைவில் தங்கியிருப்பது […]
1. வருவதும் போவதும் பேருந்து கிளம்பிச் சென்றதும் கரும்புகையில் நடுங்குகிறது காற்று வழியும் வேர்வையை துப்பட்டாவால் துடைத்தபடி புத்தகம் சுமந்த இளம்பெண்கள் அணிஅணியாக வந்து நிற்கிறார்கள் மனபாரத்துடன் தவித்து நிற்கிறான் சில்லறை வியாபாரி ஏற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன விற்காத போர்வைக்கட்டுகள் மின்னல் வேகத்தில் தென்பட்டு நிற்பதைப்போல போக்குக்காட்டி தாண்டிப் பறக்கிறது நிறுத்தங்களற்ற வாகனம் கடற்கரை கடைத்தெரு தனிப்பாடல் பள்ளி நண்பர்கள் வீடு திரைப்படம் மதுச்சாலை இசைக்கச்சேரி செல்ல வந்து நிற்கிறார்கள் தனித்தனியாக கணிக்கமுடியாத மழையை […]
1.மாநகரக் கோவர்த்தனள் புள்ளியாய்த் தொடங்கிய மழை வலுக்க நேர்ந்ததும் இடம்பார்த்து ஒண்டினர் பாதசாரிகள் இருள்கவிழ்ந்த பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் அவர்களுக்குள் செல்பேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் துரதிருஷ்டத்தை நொந்துகொண்டார்கள் கடந்த ஆண்டு மழையோடு இந்த ஆண்டு மழையை ஒப்பிட்டு பேசிக்கொண்டார்கள் தார்ச்சாலையில் தவழ்ந்தோடும் தண்ணீரை வேடிக்கை பார்த்தபடி காத்திருந்தார்கள் அப்போது யாரோ ஒரு பிச்சைக்காரி தன் பிள்ளைகளுடன் ஒண்டிக்கொள்ள தயங்கித்தயங்கி நெருங்கிவந்தாள் உடனே ஒருவன் கொஞ்சமும் தயக்கமின்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி விரட்டினான் […]
நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் […]
1.இளமை ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும் உடனே புறப்படவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது இளமை எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை மென்மையான குரலில் ஒரு தாயைப்போல அறிவித்தது தடுக்கமுடியாத தருணமென்பதால் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் நாள் நேரம் இடம் எல்லாவற்றையும் பேசிமுடித்தோம் முழுச் சம்மதத்தோடு தலையசைத்துச் சிரித்தது இளமை நாற்பதைக் கடந்து நீளும் அக்கணத்தில் நின்றபடி இளமையின் நினைவுகளை அசைபோடத் தொடங்கியது மனம் இளமை மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம் நீர்மட்டம் குறைந்து […]
1. பிறவி அதிகாலையொன்றில் காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன் என் வருகையை அருகிலிருந்த நட்புக்காக்கைகள் கரைந்து கொண்டாடின. ஏதோ ஒரு திசையிலிருந்து ஒவ்வொன்றாய் இறங்கிவந்து நலம் விசாரித்தன பித்ருக் காக்கைகள். அதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன. அவற்றின் நினைவாற்றலும் அன்பும் நெகிழ்ச்சியடையவைத்தன. இரையெடுக்கப் புறப்படும்போது தோழைமையோடு இணைத்துக்கொண்டன. ஏதாவது கூரையில் படையல்சோறு எங்கோ மெத்தையில் உலரும் தானியம் உப்புக் கருவாடு எல்லாமே பழகிவிட்டது. செத்த எலியின் நிணத்தில் கொத்துவது முதலில் அருவருப்பாக இருந்தது. பழகப்பழக […]
தமிழகத்தில் பிறந்திருந்தாலும் இலங்கையில் படித்துப் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஸ்ரீதரன். அலை என்னும் இலக்கிய இதழில் 1974 ஆம் ஆண்டில் அவருடைய சிறுகதை பிரசுரமாகி, இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆய்வின் நிமித்தமாக கொலராடோ பல்கலைக்கழகத்தில் இணைந்து, அங்கேயே சில ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஒஹையா பல்கலைக்கழகத்தில் பதினான்கு ஆண்டுகளாக நீரியல் வள மேலாண்மைத்துறையின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் சிறுகதைகளையும் அவர் […]
பாவண்ணன் ’பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் […]