நேற்று உன்னை சந்தித்துவிட்டு வந்த பிறகு வேலை ஓடவில்லை பார்க்கப்படவேண்டிய கோப்புகளெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தன சதா வண்டு ஒன்று மனதைக் குடைந்து கொண்டிருந்தது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே எப்படிப் பயணிக்கிறேன் எனக்கே தெரியவில்லை மைதானத்தில் உதைபடும் பந்தாய் ஏன் நானிருக்கிறேன் நேற்று வசந்தத்தைப் பரிசளித்த காதல் தான் இன்று வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது என்னை நானே வெறுக்கிறேன் எல்லாவற்றையும் மறக்கத்தான் போதையிலே மிதக்கிறேன் பணக்கட்டுகளை வீசி பெண்களை வாய் பிளக்க வைக்கிறேன் புனிதத்தின் மீது காறி […]
மணல் வீடு வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும் சுதியைப் போலிருக்கும் பால்யத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாம் தான் கடற்கரையிலும் கைபேசியில் உரையாடுகிறோம் கட்டிய மணல் வீட்டை அடித்துச் சென்ற கடலலையைப் பார்த்து குதூகலித்தனர் குழந்தைகள். […]
சருகாகி உதிரும் இலைக்கு மெத்தை விரித்தது பூமி காற்று அதை கைப்பிடித்து அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்தது கிளைகளெல்லாம் இசைக் காருவியாகி வேர்களின் பாடலை ஓயாமல் பாடியது பூக்களின் நறுமணத்தை முகர்ந்த வண்டுகள் தேன் குடித்து ரீங்காரமிட்டுச் சென்றன மொட்டுகள் இதழ்விரித்து வானம் ஆடை உடுத்திக் கொள்ளாததைப் பார்த்துச் சிரித்தது அக்கா குருவி கீதம் பாடி வசந்தகாலத்தை அழைத்தது திடீரென மழை பெய்து தேகத்தை நனைத்தது புல்லாங்குழலின் துளைகள் வழியே எப்படி புது நாதம் பிறக்குது […]
நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கை சங்கிலிகளால் என்னைப் பிணைத்துள்ளது நினைத்தபடி காரியங்கள் நடக்காத போது சரணாகதி தீர்வாகிறது அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது கையில் பற்றிய மரக்கிளையும் முறிந்தால் என் கதி என்னாவது சூழ்நிலைக் கைதியாய் விளையாட்டுப் பொம்மையாய் விதியின் கைப்பாவையாய் எத்தனை நாளைக்கு […]
தொலைந்து போனவர்கள் சொல்லி வைத்தாற் போல மழை வந்தது காகிதக் கப்பல் இலக்கின்றி நகர்ந்தது தேவதையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு கனவுகள் இலவசம் ஞானம் தேடுபவர்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள் வேட்டுச் சத்தத்தோடு வழியனுப்ப வேண்டுமென்று எந்த மனிதன் எழுதி வைத்தான் உதிரும் இலைகள் வெற்று வெளியில் வார்க்கும் கவிதை கடல் கானம் பாடியது கரை அதைக் கேட்டுக் கிறங்கியது வானம் ஊஞ்சலாடியது திருவிழாவில் தொலைந்தவர்களெல்லாம் அடுத்த திருவிழாவில் அகப்படாமலா போய்விடுவார்கள். […]