‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய், சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய், சில இன்சொப்பனங்களாய், சில கொடுங்கனாக்களாய்…… சிலவற்றில் நாம் சொஸ்தமாகிறோம் சிலவற்றில் பஸ்பமாகிறோம் சில நட்பு பாராட்டுகின்றன சில நம்மை எதிரியாய் அடையாளப்படுத்துகின்றன பிறர்க்கும், நமக்கே நமக்கும். சொல்லில்லா இசை அமைதியென்பார் மனம் கேட்கும்போது எதையும் சொல்லாமலாயிருக்கும்? நினைவின் சொல்லுக்கு விலை நவரத்தினங்களிலென்றால் மறதியின் விலை நட்சத்திரம்! சொல்லில்லா […]
கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி வழிய அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும், மடிக்கணினி ஃபைண்டருமாய் அடிக்கோடிட்டுக் காட்டி அத்தனை உழைப்பையும் ’அள்ளித்தெளித்த கோலமா’க்கிவிடலாம். சில சக மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களை வழிமொழியும் சகாக்கள் சீடர்கள் தொண்டரடிப்பொடியார்கள் உட்பட அவரிவரெவரெவரெல்லாமோ ‘அசால்ட்டாய்’ எட்டியுதைப்பதற்கென்றே வரம் வாங்கி வந்திருக்கிறார்கள் அரைக்காசுக்குக்கூட ஆர்வமாய் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பவர்கள்
_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு. வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும் அவருடைய விழிகளில்தான் எத்தனை பரிவும் நேயமும் Photoshop finishing என்பது இதுதானோ…? படித்துமுடித்துவிட்டேன் என்கிறார் பக்கத்திலிருந்தவர். பிடித்திருக்கிறதா? என்று கேட்காமலிருக்கமுடியவில்லை. ’பிரமாதம்! எத்தனை கண்ணியமாக வாதங்களை முன்வைத்திருக்கிறார்’ என்கிறார். ’எத்தனை கவனமாக அவருடைய சொற்பொழிவுகளின் இழிசொற்கள், வன்மச்சொற்கள் வக்கிரச்சொற்கள் விலக்கப்பட்டிருக்கின்றன’ என்று சுட்டுகிறேன். சட்டென்று […]
‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள் அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாகிவிடுகிறார்கள். அவர்கள் வா என்கிறார்கள்; நாம் வருகிறோம்; போ என்கிறார்கள். போகிறோம் ‘ஆமாம்’ என்கிறார்கள் அவர்களுக்கு ‘கோரஸ்’ பாடுகிறோம். ’இல்லை’ என்கிறார்கள் அவர்கள் சொல்லை எதிரொலிக்கிறோம். அவர்கள் ‘குறைவு’ என்கிறார்கள் ‘அதிகம்’ என்ற பொருளில்; மூன்று என்கிறார்கள் நான்குக்கு. நாம் அவர்களை நம்புகிறோம் என்றும் போலவே.. […]
நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி பூர்த்திசெய்தார் கவிதையை.
அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’ வீரபராக்கிரமசாலியாக ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள் ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர். கேட்டுக் கேட்டுத் தன்னை யதுவாகவே நம்பத்தொடங்கிவிட்ட சித்திரக்குள்ளன் வேகமாய் ஓடிவந்து முன்னவரின் விசுவரூபத்தை முழங்காலில் முட்ட _ முணுக்கென்று கொசு கடித்ததாய் நினைத்து அந்த மனிதரின் கை தட்டிவிட _ ரத்தம் சொட்டத் தொடங்கியது சித்திரக்குள்ளன் மண்டையிலிருந்து. சண்டையிட்டதில் உமக்குக் கிடைத்த […]
“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா? அரைகுறை அறிவைக் கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம். ஆயிரம் சொன்னாலும் அது தோல்வியடைந்த திட்டம்தான்” ”அப்படியல்ல வாருங்கள், அதன் முக்கிய அம்சங்கள், விளைவுகளைப் பற்றி சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”அட, வெட்டு ஒன்று துண்டு இரண்டு. வீணுக்கு ஏன் வளவளாப் பேச்சு அது நாசகாரவேலைதான். நாக்குமேல பல்லப் போட்டு நீ இல்லையென்றால் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே மதிப்புரை யெழுத ? பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான மொத்தம் 500 போல் வெள்ளைத்தாள்களில் விரைவோவிரைவில் வெளியாகிவிடும் கெட்டி அட்டையிட்ட புத்தம்புதிய புத்தகமாய். விமர்சனம் செய்வதென்றால் எனக்கு ஏற்படும் பரவசம் சொல்லிமாளாது. நாட்கணக்காய் எழுதுவேன், யாரும் கேட்கா விட்டாலும். யார் சொல்லி வீசுகிறது காற்று? நேற்றும் இன்றும் நாளையும் […]
லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி அன்பும் சரி முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே! கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை எந்தக் கவிதையும் மட்டமல்ல. _ தனக்குள் சொல்லிக்கொண்டவள் வெளியே தெரியாத தன் எளிய தாய்க்கு அவளறியாதவாறு பரிசளிக்க சிறிய பொட்டலமாய் ஒரு புத்தம்புதுக் கவிதைக்குள் பத்திரமாகப் பொதிந்துகொள்கிறாள் தானாகிய கொத்துமலர்களை! • [’இப்போது’ கவிதைத்தொகுப்பிலிருந்து கவிதை எண். […]
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத் தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு _ அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான இலவசப் பயணச்சீட்டு் ஒன்று அலைபேசிவழியே நீட்டப்பட்டது. எவரிடமும் கேட்கவில்லை; எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவுமில்லை. என்று யாரிடம் சொன்னாலும் உனக்கே தெரியாமல் நீ கேட்டிருப்பாய் என்றோ உறக்கத்தில் நீ அந்தப் போட்டியில் கலந்துகொண்டிருப்பாய் என்றோ அத்தனை உறுதியாக அவர்கள் சொல்வதில் உதறலெடுத்துவிடும் சித்தங்கலங்கிவிட்டதோ என்று. கலங்கிக்குழம்பித்தெளிந்துமினுங்கி சொற்கள் சூழ்ந்துகொண்டன: […]