’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்….. அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை யவள். பார்புகழும் படைப்பாளியின் பாதியாக இருந்தது பற்றி பத்திகளோ, புத்தகங்களோ எழுதப் புகாதவள்; பக்கம் பக்கமாய் தங்கள் அந்நியோன்யத்தை கடைவிரிக்கப் பழகாதவள்; புத்தியில்லாதவளல்ல, புன்மதியற்றவள். வரித்துக்கொண்டவன் வாரிவழங்கிய அன்பை வழிய வழிய மனங்கொள்ளாமல் சேகரித்துக்கொண்டவள். […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன். தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும் செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய் கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன. எல்லாநேரமும் என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த உளவாளிக் குறுஞ்செய்திகள், கண்றாவி விளம்பரங்கள், கையறுநிலைக்குத் தள்ளும் வந்த வராத அழைப்புகள், பார்த்த மாத்திரத்திலேயே பிச்சைக்காரியாக உணரச்செய்யும் எண்கள், நினைத்த நேரமெல்லாம் நான் கேட்காமலேயே திரையரங்குகளிலோடும் புதுப்படங்களைப் பட்டியலிடும் பாக்ஸ்-ஆபீஸ் லாண்ட்லைன் எண், பாட்டுக்கேள் என்று பிடிவாதம் பிடிக்கும் எண், தொலைவின் தொலைவை எண்ணி அலைக்கழிக்கவைக்கும் அண்டார்ட்டிகா அலைபேசியெண், ஆணாயிருந்தால் பெண்வேண்டுமா […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நடுமுதுகில் நிலைகொண்டிருக்கிறது வலி. ‘இங்கே – இன்றுதான் நிஜமான நிஜம்’ என்று Thich Nhat Hanh திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பது எரிச்சலூட்டுகிறது எனது காலத்தின் நீளத்தை யாராலும் கத்தரித்துவிட முடியாது. காலத்தால்கூட. வலியை வானிலை அறிக்கையாக்கி ‘மேலோ அல்லது கீழோ நகரக்கூடும்; அதிகமாகலாம் அல்லது குறையலாம் என்று வேடிக்கையாய் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். சிரிப்பு வரவில்லை. நகைச்சுவைத்துணுக்கல்ல வலி. நிஜம். எருதின் திண்டாட்டத்தைத் தன் கொண்டாட்டமாக எண்ணுகிறதா காக்கை என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. […]
1. அமரத்துவம் வேண்டுமென்றே அழுக்குப் பிசுபிசுப்புப் படிந்த கந்தல்துணியை எடுத்து அந்த பிரம்மாண்டத்தின் மீது போர்த்துகிறார்கள். உன்னதத்திற்கே யுரிய இன்னிசை அந்த ழுக்குப் பொதிக்குள்ளிருந்து சன்னமாகக் கேட்கத் தொடங்குகிறது. கண்ணன் புல்லாங்குழலைக் கேட்டுக் கிறங்கிய கால்நடைகளாயன்புமிக அருகேகியவர்களை அடித்துத் துன்புறுத்தித் துரத்தியோடச் செய்வதாய் சொற்களைக் கற்களாக்கிய வன்முறையாளர்கள் அற்புதத்தை அற்பமாகக் கற்பிக்கும் பிரயத்தனத்தில் இனியான தலைமுறைகளை முழுக்காட்டவென்றே நாராசமாய் ஓசையிட்டவாறிருக்கும் கழிவுநீர்த்தொட்டிகளையும் கட்டிமுடித்தாயிற்று. அழுக்குப்பிசுபிசுப்பான அந்தப் பொதியிலிருந்து இப்பொழுது எந்த ஒலியும் கேட்கவில்லை என்றபோதும் பின்னொரு சமயம் […]
ஒரு பந்து போனால் இன்னொரு பந்து; ஒரு பம்பரம் போனால் இன்னோன்று. ஒரு சொப்பு போனால் இன்னொரு சொப்பு; ஒரு பொம்மை போனால் இன்னொன்று. குழந்தைகளைப்போல சில பெரியவர்களுக்கு உறவுகள்…… ஒரு கிச்சா போனால் இன்னொரு கிச்சா; ஒரு மச்சான் போனால் இன்னொரு மச்சான். மிச்ச சொச்ச உறவுகளும் கிடைக்கும் சந்தைகளும் உண்டு. நீத்தாருக்காக அழ நேரமில்லை. நினைவைத் தொழுவது நவீனத்துவமில்லை. முகநூல் பக்க ‘முக்கிய நிகழ்வுகள்’ பகுதியில் மூவேழுலகமும் காண ‘I am in a […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அதிகாரபூர்வமான அதிகாரமுள்ளவர்களின் அதிகாரக்குரலை எதிர்த்தெழும் அதிகாரபூர்வமான அதிகாரமற்றவர்களின் அதிகாரக்குரலும் அதேயளவு அதிகாரமாய் அதி காரமாய் அதி (வி)காரமா யொலித்து விதிர்த்துப்போகச் செய்கிறது. கருத்துச்சுதந்திரத்திற்குக் குரல்கொடுத்துக்கொண்டே குரல்வளை நெரிக்கக் கையுயர்த்தும் குரல்களின் நிலவறைகளில் நிரம்பிவழிகின்றன கூராயுதங்களாய் வன்மம் நிறைந்த வக்கிரம் பிடித்த வார்த்தைகள். என்றும் விநியோகமும் விற்பனையும் ஏறுமுகமாகவே. நியாயத்தராசுகளின் மொத்த விற்பனையாளர்களாய் தம்மை நியமித்துக்கொண்டிருப்பவர்களும் மறவாமல் எடைக்கற்களின் அடியில் ஒட்டிவைக்கிறார்கள் சிறியதும் பெரியதுமான புளிமொந்தைகளை. துலாக்கோலைப் பிறரறியாமல் ஒரு பக்கமாய் […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார் ஒரு விமர்சகர். ’இல்லை, மூன்றுதான்’ என்றார் இன்னொருவர். ’மும்மூன்று ஒன்பது அங்குலம்’ என்று தன் வாதத்திற்கு வாய்ப்பாட்டைக்கொண்டு வலுசேர்த்தார் இன்னொருவர். ’செவ்வாய்க்கிரகத்தில் எல்லா இருகால் முக்கால் பொய்க்கால் விலங்கினங்களுக்கும் ஒன்றரையங்குல நீளம்தான் வால் தெரியுமா’ என்றார் கரையான்சாவடி எங்கேயிருக்கிறதென்று தெரியாதவர். ’அதற்காக என் […]
குழந்தையின் ஒரு காதுக்குள் கிசுகிசுக்கப்பட்ட ரகசியத்தை அது குடுகுடுவென்று கையிலெடுத்துக்கொண்டு ஒரு குட்டிப்பந்தாக்கி தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டே போனது. ரகசியத்தின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமலுமாய் உரக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே ஓடியது. கேட்டவர்கள் கண்ணடித்துச் சிரித்தார்கள்; தலையிலடித்துக்கொண்டார்கள். நமக்கெதற்கு வம்பு என்று அலுத்துக்கொண்டபடியே அடுத்த வீட்டுக்குச் சென்று விலாவரியாகச் சொல்லிவைக்க(எதற்கும் இருக்கட்டுமே) ஆயத்தமானார்கள்….. ஒரு காதுக்குள் மட்டும் கிசுகிசுக்கப்பட்டாலும் குறுஞ்செய்தியாய் ஓராயிரம் பேருக்குத் தெரியப்படுத்தினாலும் சரிசமமாகவே சாகடிக்கப்படுகிறது ரகசியம். தெருவில் வீசியெறியப்பட்டுவிடும் அதன் புனிதம் தலையிலிருந்து […]
நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ…. பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே… காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே… வேலா வடிவேலா நீ தமிழ்க்கடவுளென்றால் விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா? போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா… நூலாய் இளைத்த கதை நொந்ததெதை என்பதை யிங்கே நந்தமிழ் தெரிந்ததாலேயே சொல்லப்போமோ சாலா என்றால் சுமாரான கெட்டவார்த்தையா இந்தியில் ஓலாப் பயணத்தில் பழுதாவது வீலா ஸ்டியரிங்கா தோலா சதையா எது பெரிதென்ற பட்டிமன்றம் நடந்திருக்கிறதா எங்கேனும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் குறைவது நூறா இருநூறா பாலாறு வழியுமென்ற […]
அகோரப்பசியெடுத்த நாய் அங்குமிங்கும் அலைந்தது இரைதேடி. பிய்ந்த ரொட்டித்துண்டு கிடைத்தாலும் போதும் பாதி தோசை கிடைத்தால் பிரமாதம். பால் பாக்கெட்டை யாரும் கைநழுவவிட வாய்ப்பில்லை. தெருவெங்கும் உறுமியபடி மோப்பம் பிடித்தவாறு சென்றுகொண்டிருந்த நாய் ஒரு குப்பைத்தொட்டிக்குள் கண்டந்துண்டமாய் வெட்டப்பட்ட பெண் இதயமொன்று அதன் இறுதி லப்-டப்பில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அருகே சென்றது ஆவலே உருவாய். ஆனால், பலவீனமாய் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த அவலத்தை ஆற்றாமையை ஆறாக் காயத்தின் வலியோசையைக் கேட்கக் கேட்க கண்கலங்கிவிட்டது அந்த நாய்க்கு. தெளிவற்று என்னென்னவோ […]