ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள், மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள் மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி மலை மாபாதகம் செய்துவிட்டதாக மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்; காலமெல்லாம் கையில் கற்களோடு சுற்றிக்கொண்டிருப்பவர்கள் பாவனைக் கண்ணீர் பெருக்கிக் கருணைக்கடலாகிவிடுகிறார்கள். கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை மேற்கோள் காட்டி கையோடு தனித்துவமான தமது வசைபாடலை ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு. ‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய் நவீன தமிழில் கருத்துரைத்து […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) அன்புத் தோழீ… (*அன்பு, தோழி என்ற சொற்களின் மெய்யர்த்தங்கள் அளவில் நீ என் விளிக்கு நியாயம் சேர்ப்பவளாயில்லாமலிருக்கலாம். இருந்தும், நாம் உழைக்கும் வர்க்கத்தவர்கள் என்ற உறவின் உரிமையில் அப்படி விளிக்கலாம்தானே….) அவனை அமரச் சொல்லேன்… (*அவன் என்பது இங்கே அவமரியாதைச் சொல்லல்ல – அன்பின் பரிவதிர்வுக் குறிப்புச்சொல்). ஒரு புத்தனைப் போன்ற சலனமற்ற முகத்துடன் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறானே…. அவனை அமரச் சொல்லேன். நாள் முழுக்க […]
உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள் ஓராயிரம் நிலாக்களா ஒரு கோடி நட்சத்திரங்களா?? கைவசமிருக்கும் தூரிகையால் உருவாக்கப்படமாட்டா ஓவியமாய் சுற்றுமுற்றும் திரிந்துகொண்டிருக்கும் சொற்களை பொதிந்துவைத்துக்கொள்கிறேன். தலை முதல் கால வரை பரவும் உறக்கத்தின் அரவணைப்புக்கு எப்போதும்போல் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஸெல்ஃபிக்கு […]
1. அல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்; தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத் தனக்குத்தானே தந்துகொண்டிருக்கிறார் அவர். சொல்லாத சேதிகளை அள்ளப்போகும் பாவனையில் அவருடைய மண்வெட்டி கண்ணுக்கெட்டாத தூரத்திலும் இன்னுமின்னும் தோண்டிக்கொண்டேயிருக்கிறது. கைக்கொரு குடையாய் நாற்புறமும் நால்வர் பிடித்துநிற்க எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் புரவலர் ஏதேனும் கருவூலப்பெட்டி தட்டுப்படுமோ என்று. அவருக்குத் தெரியாது அடியாழத்தில் ஒரு பூதம் நீட்டிப்படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறது. 2 கண்ணை மூடிக்கொண்டு கைபோன போக்கில் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”தீர்ப்பளிக்காதே, நாமெல்லோருமே பாவிகள்தாம்” _ நினைவிருக்கிறதா அந்தத் திருமறை? ஆயினும் சத்தமிட்டுக் கத்தித் தீர்க்கிறாய் சமூக சீர்கேடுகளுக்கெல்லாம் என்னை மட்டும் பொறுப்பாளியாக்கிவிடுவதை யேன் திரும்பத்திரும்பச் செய்துகொண்டிருக்கிறாய். என்னை யேன் நான் நானாக நினைக்கிறேனா? என்னை மறுத்து உன்னை வரிக்க உண்மையில்லையே உன்னிடம். குரலற்றவர்களின் குரலாக உன்னை நீயே நியமித்துக்கொள்வது உண்மையில் அவர்களை ஆளத்தானே! உன் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப வரலாறைத் திரித்தபடியே உன் கையும் வாயும்… போயும் போயும் பொய்தானா கிடைத்தது உன் பையை […]
ரிஷி 1. ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய் என்று கூவிக்கொண்டே போனார்கள். அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும் கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச் சட்டெனக் கேட்கத் தோன்றுகிறது: ”சிறிதும் தாமதியாமல் அவற்றைக் கண்காட்சிப்படுத்த பிரமாதமா யோர் காகித மலரைத் தயாரித்துத் தரலாமே கிளிஞ்சல்களைப் பொட்டலம் கட்டி யெடுத்துச் செல்லவாவது பயன்படும்”. 2. சிறிதும் மனசாட்சியின்றி மரங்களை […]
‘ரிஷி’ முழுவதும் பிடிபடாத திறந்தமுனைக் கவிதையாய் முகநூல்வெளி. முந்தாநாள்போல்தான் மெதுவாய் உள்ளே நுழைந்திருக்கிறேன். சுற்றிலுமுள்ள ஒலிகளும், வண்ணங்களும், வரிகளும், வரியிடை வரிகளுமாய்… சற்றே மூச்சுத்திணறுகிறது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் ‘நட்புக்கான கோரிக்கைகள்’ பக்கம் நகர முடியும். தவறாக நினைத்துவிடவேண்டாம். அதுசரி, நட்பென்றாலே பரஸ்பரம் தானே? இதில் என்ன தனியாய் ‘mutual friend’? – சாதா தோசை மசாலா தோசை கணக்காய்… ஏதும் புரியவில்லை. Mutual friend, actual friend ஆகிவிடமுடியுமா […]
”உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அம்மாவைப் பிடிக்குமா?” என்று வழக்கம்போல் கேட்டார்கள். ”அம்மாவை, அப்பாவை, ஆட்டுக்குட்டியை, அம்மிணிக்கொழுக்கட்டையை இன்னும் நிறைய நிறையப் பிடிக்கும்” என்று மிக உண்மையாக பதிலளித்தது குழந்தை. இன்னொரு நாள் _ “உனக்கு லட்டு அதிகம் பிடிக்குமா? ஜாங்கிரி அதிகம் பிடிக்குமா?” என்று கேட்கப்பட்டது. ”லட்டு அதிகம் பிடிக்கும், ஜாங்கிரியும் அதிகம் பிடிக்கும், பால்கோவா, பர்ஃபி, பக்கோடா, பபுள்கம், பஞ்சுமிட்டாய் எல்லாமே அதிகமதிகம் பிடிக்கும் ஆனால் மண்ணை மட்டும் […]
’ரிஷி’ முற்பகலுக்கும் பிற்பகலுக்கும் இடைவெளி முப்பது நொடிகள் மட்டுமே….. ஏன் மறந்துபோனாய் பெண்ணே! விபத்தா யொரு பிரிவில் பிறந்துவிட்டதற்காய் எம்மை யெத்தனையெத்தனை முட்களால் குத்திக் கிழித்தாய். இலக்கியவெளியில் இருக்கவே யாம் லாயக்கற்றவர்கள் என்று எப்படியெப்படியெல்லாம் எத்தித்தள்ளினாய். (அத்தனை ஆங்காரமாய் நீ மிதித்துக்கொண்டேயிருந்ததில் உன் கால்கள் சேதமடைந்துவிடுமோ என்றுகூட சமயங்களில் கவலையாக இருந்தது எனக்கு.) என்னவெல்லாம் கூர்கற்களைத் தேடித் திரட்டிக் குறிபார்த்து எம் மேல் வீசியெறிந்துக் கெக்கலித்தாய். அன்னாடங்காய்ச்சிகளாயிருந்தாலும் எம்மை ஆதிக்க ஆண்டைப் பன்னாடைகளாக்கி எப்படியெல்லாம் துன்புறுத்தினாய். […]
கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக….. தலையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும் இந்தத் திறவுகோலை. வீடே யில்லையென்றான பின்பும் இதையேன் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது என் கை? அறிவுக்கும் மனதுக்கும் இடையறாது நடந்துகொண்டிருக்கும் இந்தப் போட்டியில் வெற்றிக்கம்பத்தின் எதிர்முனை நோக்கி நான் ஓடியவாறு….. பெருவலியினூடாய் புன்னகைத்துக்கொண்டிருந்தேன். கல்தடுக்கிக் கால்கட்டைவிரலில் மின்னிய ரத்தச்சொட்டு என்னவொரு நிவாரணம் என எண்ணாதிருக்க […]