வாசிப்பின் சுயம் அவர் ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு எவ்வாறு அது இலக்கியமாகிறது என்று முத்துமுத்தாக சொத்தைப்பற்கருத்துக்களை உதிர்த்துதிர்த்துதிர்த்துதிர்த்து பத்துபக்கக் கட்டுரையாக்கினாரென்றால் இவர் கத்தித்தீர்க்கிறார் கிடைக்கும் மேடைகளிலெல்லாம் எதிர்க்கருத்துகளையொத்தகருத்துகளை அத்தகைய கருத்துகள் மொத்தம் எட்டுபத்திருக்குமளவில் புத்தம்புதிய வாசகர்களுக்கு அவர்களிருவருமே உலகம் உய்யவந்த எழுத்துவித்தகர்களாய் விடுபடா இலக்கியப் பெரும்புதிர்களாய் இத்தனையத்தனை யென்றில்லாமல் அத்தனை சத்தமாய் ஆர்ப்பரிக்கும் கடலைக் குடத்திலிட்டதாய் குத்துமதிப்பாய் ஒரு நூறு வானவிற்களை பத்திரப்படுத்திவைத்திருப்பவர்களாய் பித்தேறச்செய்கிறார்கள் நித்திரையிலும் அவர்களைப் போற்றிப் பாடிக்கொண்டேயிருக்கும் குரல்களுக்குரியவர்களுக்கு ஒருகாலை தட்டுப்படலாகும் ஆழ்கடலும் நல்முத்தும் […]
தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை ‘நாலு கண்ணா’ என்றும் ‘புட்டிக்கண்ணாடி’ என்றும் உரக்க அழைப்பவர்கள் எப்படி உற்ற நண்பர்களாக முடியும்? உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை மனிதர்களாகக் கொள்ளத் தகுமா? அடுத்தவர்களுக்கு அடைமொழியிட்டு அழைப்பத னாலேயே தன்னை அப்பழுக்கற்ற வராக்கிக்கொள்ள முடியு மென்ற அரிச்சுவடியை அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் தெரியவில்லை. அப்பட்டப் பொய்யை அடுத்தடுத்துச் சொல்வ தாலேயே அதை மெய்யாக்கிவிட முடியுமென்றும் படித்திருக் கிறார்கள். எந்தப் புத்தகத்தில் தெரியவில்லை. நம்மிடமுள்ள நூல்கள்தான் […]
எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே சொன்னாள் சிறுமி: “உண்மையாகவே என் குருவி பொம்மை பறக்கும் தெரியுமா!” இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார் என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர் இத்தனை காலமும் ‘இ’யைத்தான் சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை பத்திரமாக மறைத்துவிட்டார். அவருடைய அந்த நண்பரின் பேரன் அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக் கதை சொல்வான். கூடைகூடையாய் நட்சத்திரங்களைத் தனக்கு நிலவு கொட்டியதாக. அப்போது அந்தக் குழந்தை முகம் தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்! இருபது […]
நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம் வழக்கமாகிவிட்ட பின்னரும் _ வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும் குருவி வெடிகளைக் காணும்நேரம் குலைநடுங்கி யதிர்வதுபோல் அஞ்சி நடுங்கும் மனம் _ இன்னொரு முறை யந்தச் சொல்லைக் கேட்க நேரும் தருணத்தின் அவலமெண்ணி அல்லும் பகலும் அலைக்கழிந்துகொண்டிருக்கும். 2.சிறகு மட்டுமல்லவே பறவை! அறுந்த சிறகின் இன்மையை ஏற்க மறுத்து சில காலம் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர். ’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும் சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார் கொஞ்சம் களைப்பாற்றிக்கொள்ளட்டும்’ என்று கதவடைத்திருக்கும் கோயிலின் முன் நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டே வாஞ்சையோடுசொல்லிக்கொள்வார் சிலர். ’Collective Spirit இன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு’ என்பார் சிலர். ’விலங்குகளுக்கும் பறவைகளுக்குமான விடுமுறை’ […]
ஆதலினால்…. இக் கொள்ளைநோய்க் காலத்தில் உள்ளத்தில் நீ நிறைந்தாய் என்று சொல்லாமல் சொல்வதாய் விரியும் கவிதையைப் பார்க்க _ பேரிடர் காலத்தே மட்டும் நினைக்கப்படுவதா பெருங்காதல் என்று யாரிடம் கேட்க….. ஆறு மனமே ஆறு….. ”வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி வேகவேகமாயக் வாயைத்திறந்து கவ்வியெடுத்துக் கொள்கிறது _ விலகியே இரு தாத்தாவிடமிருந்து” என்று சொன்ன அப்பா அவருடைய அப்பாவை ஆதுரத்தோடு நெருங்கி அருகில் அமர்ந்து அந்தத் தளர்ந்த கரங்களைத் தன் கைகளுக்குள் பொதிந்துகொள்வதைப் பார்த்து அவருடைய தலைக்கு மேலாய் […]
கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும் ’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே என்று வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _ டாட்டா பிர்லாவின் கைக்கூலி என்று அடிக்கொருதரம் வசைபாடியவர்கள் _ பெண்களை மதிக்கத்தெரியாத அயோக்கியன் என்று மிதிமிதித்துக் கசையடி தந்தவர்கள்_ மக்கள் போராட்டங்கள் முழுவெற்றியடைய வொட்டாமல் உண்ணாவிரதமிருந்து குட்டிச்சுவராக்கியவர் என்று குற்றஞ்சாட்டியவர்கள் _ ராமராஜ்யத்தைப் பேசி சனாதன தர்மத்தைப் பரிந்துரைத்தவர் என்று சகட்டுமேனிக்குப் பழித்தவர்கள்_ பெற்றபிள்ளையைப் பேணாதவர் மகாத்மாவா என்று மட்டந்தட்டியவர்கள்_ எல்லோருமே இன்று கொண்டாடுகிறார்கள் காந்தியை. அவர்கள் எல்லோருக்கும் காந்தி […]
குடியுரிமை கோவில் தேவாலயம் மசூதி என்று எங்கும் காண முடியும் இவர்களை. தங்கள் மதத்தினரா என்று பார்த்து தர்மம் செய்பவர்கள் உண்டுதான். என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே இவர்களது பொது அடையாளமும் தனி அடையாளமும். இவர்கள் நம் நாட்டு மக்கள் என்பதைப் பற்றியோ இவர்களுக்குப் பேச்சுரிமை கருத்துரிமை வாக்குரிமை இல்லாதது பற்றியோ மதவாதிகளோ அரசியல்வாதிகளோ இலக்கியவாதிகளொ ‘இய’வாதிகளோ பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. ’ஒரு பிச்சைக்காரரிடம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் இருக்கும்’ என்று வீதியோரம் சுருண்டு கிடந்த ஒரு மூதாட்டிக்குப் பத்து […]
1.முட்டாள்பெட்டியின் மூளை TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும் மாமியார்களின் முறைத்த கண்கள்; முறம்போன்ற தடிமனான நகைகள் எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும் பட்டுக்குஞ்சலங்களும் கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய் அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும் கெட்டிச் சரிகைப் பட்டுப்புடவைகள் மூச்சுவிடாமல் அவர்கள் வெளித்தள்ளும் சாபங்கள் காச்சுமூச்சென்ற அவர்களின் பேச்சுக்கள் பழமொழிகள் ஃபிலாஸஃபிகள் பிக்கல்பிடுங்கல்கள் ‘பப்ளிமாஸ்’ முகங்கள் புஸுபுஸு சிகையலங்காரங்கள்; மேலும் மேலும் மேலும் மேலும் என நீளும் அவர்களின் ஆர்வக் கிசுகிசுக்கள்; அவதூறுகள் அழுகைகள்; அசிங்கம்பிடித்த சதித்திட்டங்களை சகிக்கவும் ரசிக்கவும் எதிர்பார்க்கவும் ஓ போடவும் […]
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புதுவீடு செல்கிறேன். வாடகைக்குத்தான் என்றாலும் விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்! வாடகையை மட்டும் மாதாமாதம் ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட முடியவேண்டும்! ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் வீடு மாறிச்செல்பவர்களும் ஏதோவொரு விதத்தில் மாறுகிறார்கள் போலும். அட்டைப்பெட்டிகளுக்குள் பொதியப்பட்ட இகவாழ்வை ஒரு வீட்டிலிருந்து வழியனுப்பி இன்னொரு வீட்டிற்குள் அதை மீண்டும் வெளியே எடுத்து விரிக்கும்போது காணாமல் போய்விடும் சில சீப்புகளும் புத்தகங்களும்தான் என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியவில்லை. இடம்பெயரும் […]