author

கடிதம்

This entry is part 5 of 29 in the series 12 ஜனவரி 2014

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும் வணக்கம் எல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள் சில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என் அலைபேசி எண் 9940213031 என்னுடன் பேச நினைப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் கணினியில் குழுமங்களீல், இணைய இதழ்களீல் 12 வருடங்கள் உறவு. பல குழுமங்கள் உங்களின் அன்பு எனக்கு சக்தியைக் கொடுத்து எழுத வைத்தது அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் […]

வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்

This entry is part 8 of 29 in the series 12 மே 2013

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் (சில பிரச்சனைகளால் என் தொடரின் கடைசி அத்தியாயம் எழுதி அனுப்ப முடியவில்லை. அதற்காக என் வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். குறைப்பிரசவம் நல்லதல்ல. எனவே தொடரின் கடைசிப் பகுதி இப்பொழுது அனுப்புகின்றேன். இடைவெளி அதிகமாகிவிட்டதால் இதற்குத் தலைப்பு கொஞ்சம் மாற்றியிருக்கின்றேன். தலைப்பு “ வாழ்வியல் வரலாறு – கடைசிப் பக்கம் “ இதில் வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல கடமைகளையும் ஆன்மீகச் செய்திகளையும் சில உண்மைச் சம்பவங்களூடன் எழுதி இருக்கின்றேன். இதனைப் […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49

This entry is part 9 of 29 in the series 24 மார்ச் 2013

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்     வாழ்வியல் வரலாற்றை முழுமையாக எழுதப் புகுந்தால் ஓர் ஆழ்கடலின் ஆய்வு அறிக்கையாகிவிடும். முத்துச் சிப்பிகள் என்று அள்ளி வந்தோமானால் கூட சில சிப்பிகளில் மட்டுமே முத்துக்கள் காணப் படும். மற்றவைகள் வெற்றுச் சிப்பிகளாக இருக்கும்.. சமுதாயப் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவு எழுதினேன். சாதி மதம், அரசியல், இயக்கங்கள், ஊழல், வன்முறைகள் இந்தப் பட்டியல் நீளமானது. எழுத்தால், பேச்சால் சீர்திருந்தும் நிலையைக் கடந்து […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -48

This entry is part 25 of 26 in the series 17 மார்ச் 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்  -48 சீதாலட்சுமி வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.   “சாதிகள் இல்லையடி பாப்பா _ குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” பாப்பாவிடம் பாடுகின்றான் பாரதி. பிஞ்சு மனத்தில் பதிய வைத்தால் பருவத்தில் அவனை வழி நடத்தும் என்று எண்ணியுள்ளான். பெரியவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே! சொல்லிப் பயனில்லை. அப்படியும் அவன் மனம் சமாதானமாக வில்லை. தனக்குள்ளும் முணங்குகின்றான் சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில் தாழ்வென்றும் மேலென்றும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 47

This entry is part 5 of 28 in the series 10 மார்ச் 2013

சீதாலட்சுமி நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப்படும் வரலாறு வரலாற்றின் வரலாறுக்குப் பன்முகங்கள் உண்டு. முதலில் வரலாற்றின் வரலாற்றை ஓரளவு புரிந்து கொண்டால்தான் பல குழப்பங்கள் நீங்கும். முடிந்த அளவு சுருக்கமாக, இன்றியமையாத பகுதிகளை மட்டும் சொல்ல நினைக்கின்றேன் முதலில் ஒரு வேண்டுகோள். சாதி, மதம், அரசியல் இவைகள் உணர்வுகளைத் தூண்டும் விஷயங்கள். சமுதாயத்தில் ஓர் நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையுடன் வாழ அமைதி பெற முயற்சி செய்கின்றேன். எனவே யாரும் என்னைத் தவறாக எண்ண வேண்டாம். இறைவனால் […]

வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46

This entry is part 14 of 33 in the series 3 மார்ச் 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -46 சீதாலட்சுமி எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு மனிதன் என்பவன் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் அரக்கனும் ஆகலாம். அவன் வாழ்நாளில் அவன் உலா வருவது இந்த மண்ணிலேதான். எனவே சூழ்நிலைத் தாக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது அனுபவங்களின் படிப்பினைகளைச் சிறப்பாகப் பேசுவோம். ஓர் அனுபவத்தைப் பார்க்கலாம். அவன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கின்றான். இளமைப் பருவத்தில் முதல் அடி வைத்திருக்கின்றான். காணும் இடமெல்லாம் டாஸ்மார்க் கடைகள்!ஏனித்தனைக் கூட்டம்? […]

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45

This entry is part 20 of 30 in the series 17 பிப்ரவரி 2013

வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45 சீதாலட்சுமி மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்களை ஓர் குறிக்கோளுடன் புரட்டிக் கொண்டிருந்தேன். குறியீட்டைஅணுகியவுடன் கடமையை முடித்துவிட்டோம் என்று நின்றிருக்க வேண்டும். ஆசை யாரைவிட்டது? ஒர் நெட்டைக்கனவில் மேலும் நகர்ந்தேன். காலம் என்னைப் பார்த்து சிரித்தது. என் வாழ்க்கையே ஓர் தடகளப் போட்டி.. திடீரென்றுஓர் முட்டுக்கட்டை என்னைத் தடுக்கி விழ வைத்தது. சமாளித்து எழுந்து ஓடலாம் என்று நினைத்தேன். இன்னொருதிக்கிலிருந்து வேறொரு […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 44

This entry is part 12 of 31 in the series 10 பெப்ருவரி 2013

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல   பூலோக யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார் இறைவன் தனியாக இல்லை துணைவியுடன்தான் புறப்பட்டார் புறப்படும் முன்னர் இறைவனுக்கும் இறைவிக்கும் வாக்குவாதங்கள். கணவனின் விளையாட்டுப் புத்தியை மனைவி அறிவாள். எனவே என்ன நேரிடினும் சக்தியை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் தேவியின் வேண்டுகோள். இறைவனும் சிரித்துக் கொண்டே புறப்பட்டுவிட்டார். திருவிளையாடலில் மிகச் சிறந்தவர் ஆயிற்றே. பிரபஞ்சமே அவர் விளையாட்டில் விளைந்த ஒன்றுதான். பாம்பு அணிகளை அகற்றிவிட்டு ஜடாமுடியுடன் காவியுடையில் […]

மலர்மன்னனுடன் சில நாட்கள்

This entry is part 3 of 31 in the series 10 பெப்ருவரி 2013

ஒரு நொடிப் பொழுதானாலும் சிலருடன் பழகும் பொழுது பல ஆண்டுகள் பழகிய உணர்வு ஏற்படுகின்றது. கடந்த ஒருமாதமாகத்தான் மடல் மூலம், தொலை பேசியின் மூலம் பழகினோம். இன்று அவர் பறந்து சென்று விட்டார். இந்த குறுகிய காலத்தில் எங்கள் நட்பு மனம்விட்டுப் பேசும் அளவில் வளர்ந்திருந்தது. அரசியல் உலகிலிருந்து ஆன்மீகம் வரை பேசினோம். இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தால் ஏன் பேசவில்லை என்று கேட்பார். அவர் எனக்கு எழுதிய மடல்களும் அதிகம். அவரை “சாமியாரே” என்று கூப்பிடும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 43

This entry is part 8 of 32 in the series 3 பிப்ரவரி 2013

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. நினைப்பதெல்லாம் நடப்பதில்லை நினைக்காமல் இருப்பதுமில்லை மனித மனத்தின் ஊஞ்சலாட்டம் இருப்பது ஒரு மனம். ஆனால் கேட்பது பல குரல்கள் செய் என்று சொல்லும் மனத்தை இழுத்துப் பிடித்து பின்னே இழுக்கின்றது. இன்னொரு மனம் ஆமாம் நமக்கு ஒரு மனம்தானே இருக்கின்றது ! யானையைக் கூட அடக்கி விடலாம் ஆனால் இந்த மனத்தை அடக்க நமக்கு வலிமை இல்லையே! வாழ்க்கை பிரச்சனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. எல்லாம் எழுத்தில் கொண்டு […]