மருதாணிப்பூக்கள் – சு.மு.அகமது மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில் பத்து சொட்டுக்களும் தேயிலைத்தூள் ஒரு தேக்கரண்டியும் குழைத்திருந்த மருதாணிக்குழம்பில் போட்டு வலது கையின் விரல் நுனிகளாலேயே நன்றாக பிசைந்துவிட்டு கையை கழுவிக்கொண்டு வந்த ஜஹானுக்கு விரல் நுனிகளில் மருதாணியின் நிறம் தொற்றிக்கொண்டதில் சற்று வருத்தம் தான்.அழகான ஒரு டிசைன் போட முடியாதபடி வண்ணம் அப்பிக்கொண்டிருந்தது.மருதாணி கலப்பவர்களுக்கு சற்று […]
சிறை பட்ட மேகங்கள் – சு.மு.அகமது பிணமான உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான கயிறு.கயிறு காற்றில் லேசாக அசைந்தது என் கழுத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேன் என்பதாய். உள்ளங்கைகளின் மேல் தலை வைத்து இடது காலின் மேல் வலது காலை வைத்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்த எனக்கு தலையின் பாரம் தாங்க மாட்டாது கைகள் வலிக்கத் துவங்கியது.கழுத்தும் இறுகிப்போனதாய் தெரியவே சற்று ஒருக்களித்து படுத்தேன். […]
– சு.மு.அகமது மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில் தான் சந்தித்தேன்.ஏற்கனவே பத்து பேர் நின்றிருந்த இடத்தில் இடம் தேடி எதேச்சையாக புஷ்பம்மா நின்றிருந்த இடத்தில் இடம் பிடித்து நின்றுகொண்டேன். ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு ‘ஏன் கண்ணு நெனஞ்சிட்டியா?’. ஆதுர்யமான விசாரிப்போடு பேச்சை துவக்கினார் புஷ்பம்மா.அவரை ஏறிட்டு பார்த்தேன்.சிவப்பு நிற காடா சேலை. கழுத்தில் மஞ்சள்கயிறு.நெற்றியில் குங்குமப்பொட்டு. வகிடெடுத்து வாரின தலை.’சீவி […]
சு.மு.அகமது தினம் காகிதப்பூக்களை உயிர்ப்பிக்கிறேன் மகரந்த துகள்களின் வாசத்தை சிறை பிடிக்கிறேன் ஆனால் எனக்குள் விஞ்சியிருக்கிறது தோல்வியின் எச்சங்கள் அலகுகளால் எண்ணப்படும் மிச்சங்கள் பயத்தீற்றல்கள் சாம்பலின் சாயல்கள் இனிப்பின் கசப்பறியா ஊடகங்கள் எங்கோ வேர் பதித்திருக்கிறது சோம்பலின் பிரதிகள் பதியனில்லா பொதிகள் தோல்வியின் இரணங்கள் முடிவுரைக்கு முகவுரை தேடும் முகங்களே வாசத்தை பூசுங்கள் என் காகிதப்பூக்களில் ! – சு.மு.அகமது
சு.மு.அகமது ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி நீண்டு கன்கார்டியா மேனிலைப் பள்ளியை தொட்டிருந்தது. விதவிதமான மனித வளையங்கள் கோர்க்கப்பட்டு அதனதன் வடிவத்தில் கால்சராய், கைச்சட்டை, சுடிதார், புடவை, பைஜாமா குர்த்தா, நீண்ட தாடி, தலையில் குல்லா, மொட்டைத்தலை, ஒற்றை பின்னல், இரட்டை ஜடை, பாப் எனவும் நைந்து போன ஜீன்ஸ், நாற்றமடிக்கும் டீ சர்ட் […]
’நிலம் புகும் சொற்கள்’ கவிஞர் சக்தி ஜோதியின் முதல் படைப்பு. ஒரு பயணத்தை இவ்வளவு அழகாக எல்லோராலும் சொல்லிவிட முடியாது. அய்நிலங்களிலிருந்து எழுந்து வரும் சொற்கள் என்பதாய் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினாலும்,அகநிலத்துள் புகுந்த சொற்கள் தான் கவிநிலத்தின் வரிகளாய் வெளி வந்திருக்கின்றன.வாசிப்பிற்குள் இயல்பாய் நுழைந்துவிடுபவர்களின் கடைசி இலக்கு படைப்பு என்பதாயும் கூறுகிறார்.படைப்புக்கனல் கனன்று கொண்டேயிருக்க வேண்டும்.இல்லையேல் சாம்பலாய் இயலாமையின் பரிதவிப்பு பட்டவர்த்தனமாய் வெளி வரத் துவங்கிவிடும். அடுத்து, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அன்பு […]
எண்ணிப்பார்க்கவியலாத பொழுதுகளில் உள்ளுக்குள் கரைகிறது இனம் புரியாதது சொற்களால் கலையாத கரைகளின் மீதமர்ந்து வருத்துகிறது நினைவு படாத தழும்புகளில் வலி நிரப்பி பாடாய் படுகிறது மனது சொல்வதற்கு என்ன இருக்கிறது கழுவ முடியாத கறைகள் பற்றி எனக்கென்று வாய்கும் அது நிச்சயமான ஒரு நிகழ்வு தான் கனிந்து கீழ் வீழ்ந்தாலும் முளைப்பதில்லை மனித விதை அதனால் திளைத்து மகிழ்வதில்லை மனனித்த வாழ்க்கை. – சு.மு.அகமது.
பன்னிரெண்டு சிறுகதைகளை தன்னகத்தே கொண்டு நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய’சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்’ சிறுகதை தொகுப்பு.குறிஞ்சி பூக்கும் பருவம் பன்னிரு வருடங்கள்.அதற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஆனால் படைப்புக்கள் குறிஞ்சியின் தன்மையை பெற்றுள்ளனவா என்றால்,அபூர்வமாய் சில படைப்புக்கள் நம் மனதை ஆக்கிரமித்து நம்முள் பல கசிவுகளை உண்டாக்கி செல்லும்.அப்படியான கசிவு,மன அதிர்வு ஆகியவை அழகிய பெரியவனின் ‘தீட்டு’ என்ற குறுநாவல் தொகுப்பை வாசித்த போது ஏற்பட்டது.முதன் முதலாக அப்படியான ஒரு’உளநெருடலா’ன படைப்பின் […]
தனிமைப்படுத்தப்படுகிறவர்களின் அனுபவப்பிரதிநிதியாக பிரியவொண்ணா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கவிஞர் யாழன் ஆதியின் நான்காவது கவிதைத்தொகுப்பு’போதலின் தனிமை’ கருப்புப்பிரதிகள் வெளியீடாக தோழர் நீலகண்டனின் அறிமுகத்துடன் துவங்குகிறது. துவக்கமே பறவையென இறக்கையை விரித்தெழுகிற அதிகாரவர்க்க சூரியனையும் எழுச்சியெனும் நிறம் பூசிக்கொள்ளும் உழைக்கும் வர்க்க வானத்தால் பதற்றமுற்று எஞ்சியுள்ள நிறத்தை தின்று பசியாற எத்தனிக்கும் அதன் முயற்சியையும் ஆழமாய் பதிவு செய்கிறார்.வலிக்காத வார்த்தைகளை தர முடியாத அவலத்தையும் கனறாத கங்குகளின் மீது நின்று எதிர்காலத்தை முன்னெடுத்துச்செல்லாத தடைக்கற்களை என் செய்யவென்று ஆதங்கப்படுகிறார்.அறைக்கூவலாய் […]
இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு மட்டுமே தனது இருப்பை உணர்த்திவிட்டு மறைவது போன்றது தான் எனது தெறிப்பும் இருத்தலும்.தாமரை இலை மீது உருண்டு திரண்ட துளிகளாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் எனது விழைவு கூட என்னை உங்களிலிருந்து தனித்துக்காட்டுவதாய் படலாம்.ஆனால் […]