என்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன் பொருட்டே ஏற்று கொள்கிறது புறமுகம். புன்னகையின் சிதறல் வெளியே செல்லாமல் இருக்குமாறு கவனமாக்குகிறது. அவையும் மீறிய சிதறிய துளி வெள்ளமென பாய்கிறது எந்நிலை உடையவர்கள் பிரதியை போல பொய்மை கொண்டு மேலும் மேலும் பொழிவை கூட்டுகின்றனர். -வளத்தூர் .தி.ராஜேஷ் .
இப்பொழுதைய இந்த தனிமை நிமடங்களை எச்சரிக்கை மிகுந்த தருணமாக மாற்றியமைக்கிறது காலம் . தனித்திருப்பது ஒன்றும் ஆபாயகரமனது அல்ல கால சிந்தனை முறையை அதனதன் நிறைவை நிகழ செய்யும் ஒன்றினை எப்பொழுதும் செய்ய விட்டதில்லை காலம் . சுயங்கள் பின்னப்பட்டிருக்கும் முடிச்சுகளை தனிமையின் ஏதோ ஒரு நொடிகளும் அதன் காலமும் விடுவிக்க காத்திருக்கிறது . காலத்தின் இயக்கம் நடைபெறாத ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறது வெற்றிடத்தின் விசை பரவல் . அதன் நொடிகளின் […]
ஊடலின் தொடக்கம் இனிதே ஆரம்பமானது உன் சொல்லாலும் என் செயலாலும் . மனதின் கனமேற்றும் நிகழ்வுகள் எல்லையற்று நீள்கிறது . என் கண்களின் சாட்சியாகி நிற்கிறது உன் சொற்கள் . நீர்மம் குமிழாக உருவெடுக்க விசையின் பரவல் முந்தி சென்று சொல்லி விடுகின்றன அதிர்வலையின் செய்திகளை . உருமாற்றங்களின் உருவகம் விலகல் தீர்மானத்தில் பழித்து கொண்டிருக்கிறது . -வளத்தூர் .தி .ராஜேஷ் .
எதற்கென்றும் நீயும் சரிபார்த்துக்கொள் தன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த உனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதா? என்று . உங்களின் நிர்பந்தங்களை காட்டிலும் வழக்கம் போல மற்றவர்களை பின்பற்றுதல் தொன்மை தொட்டு வளர்த்து விடுகின்றன பல ஒளி ஆண்டுகளின் கனவு ஒன்று . அதிலும் அவர்கள் கனவில் வாழாமல் என் கனவில் வாழ்வதென்பது அருவருப்பானது,அவமானமானது அப்படி மற்றவர்களின் பிம்பமாகவே இருக்க உனக்கும் தொன்மையான வாழ்வின் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றதா? தன் இயல்பை தானே […]
இதுவரையிலும் உனக்கு சொல்லப்படாத வார்தையை என் மனதில் தேடிகொண்டிருக்கிறேன் அவை உனக்கு பல ரகசியங்களை சொல்ல கூடும் சற்று சந்தேகி . சில பொய்மையும் அதன் கண்ணீரும் வடிந்தோடி கொண்டிருக்கும் அதில் சற்று மூழ்கி எழுந்து விடு . அவைகளை ஒரு சொல்லாகவே நீ எதிர்கொள்ளவில்லை என்பதை சற்று நிம்மதி அளிக்கிறது . வாழ்வியலின் அடிப்படை பதிவிறக்கம் போல உனக்கு சொல்லப்பட்டதை தகர்க்க செய்யும் வார்த்தையாய் அவைகளை மேலும் நம்பிக்கையாக்குகிறாய் . […]
ஒரு அதிர்வு உங்களுக்கு சொல்லப்படுகிறது . மிகவும் அருகில் இருப்பதாக மீண்டும் சொல்லப்படுகிறது. நீங்கள் அதை இன்னும் உணரவில்லை . சொல்லிய விதம் தவறாக இருக்கலாம் இல்லையெனில் அது அவ்வளவு முக்கியமில்லை என கருதுகிறிர்கள். மீண்டும் எச்சரிக்கையாக சொல்லப்படுகிறது அதிர்வின் தாக்கம் உங்களை ஆட்கொள்ள துடிக்கிறதை உணருகிறிர்கள். இப்பபொழுது என்ன செய்ய வேண்டுமென உங்களுக்கு போதிக்கப்பட்டது அதை எதிர் கொள்ளவே ஆயுத்தமாகுகிறாய்.. அதிர்வலை ஏன் என்னை தேர்வு செய்தது என்று இப்பொழுது குழப்பமில்லை . அதிர்வின் மற்றொரு […]