0 1.தொழில் போட்டியால் மோதலில் ஆரம்பிக்கும் வக்கீல் ஜோடி காதலில் சிக்கும் கதை 2.இரு இதயங்களை காதலால் இணைய வைக்கும் இந்தியன் பீனல் கோட்! 3.இரு துருவங்கள் காதல் வயப்பட்டு ஒரு துருவமாகும் படம்! பல்பொருள் அங்காடியில் மெலினாவை பார்க்கிறான் கார்த்திக். மெல்ல காதல் அவன் இதயத்தில் எட்டிப் பார்க்கும்போது, அவனுக்குப் பிடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்பட குறுந்தகடு அவளுக்கும் பிடிக்கிறது. ஆனால், அதன் உள்ளே ஒரு சிக்கல் இருப்பது அறியாமல், இருவரும் அந்த தகடுகளை வாங்குகிறார்கள். […]
[குறிப்பு: இது தமிழிசை பற்றிய விரிவான கட்டுரை அல்ல. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் தமிழிசையை ஒரு நிரந்தர நிகழ்ச்சியாக வழங்க முடிவு செய்துள்ளது. மே 2, 2015 சனியன்று தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், பார்வையாளர்களுக்குச் சுருக்கமாக தமிழிசையை அறிமுகப்படுத்தி சில நிமிடங்கள் மட்டும் நான் பேசியதன் எழுத்து வடிவம் இது. நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தவும், ஒருங்கிணைக்கவும், தொகுத்து வழங்கவும் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகள், […]
யாமினி போன்ற முன் திட்டமிடாத, இயல்பாகவே வெடித்து சிதறும் வெடித்துச் சிதறும் சிருஷ்டி திறன் உள்ளவரால், நிகழ்ச்சியின் போதே தேவைக்குத் தக்கபடி பல்வேறு அபிநயங்களை முன் முயற்சியின்றி உருவாக்கி, ஒவ்வொரு அபிநயத்துக்கும் பலவித பாவங்களை கொடுக்க முடியும். திட்டமிடப்படாமல் அவருடைய கற்பனை ஊற்றிலிருந்து வெளிப்படுபவை இவை. பலநேரங்களில் ஜதிகளின் அமைப்பைச் சிக்கலானதாக (complexity) மாற்றுவார். மற்ற நர்த்தகிகள் ஜதி அமைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றை மாற்றாமல் மூன்று கதிகளில் ஆடுகையில், யாமினிக்குத் தன் கலைத்திறன் மேலுள்ள நம்பிக்கை […]
சளைக்காமல் நாடகம் எழுதுவதிலும், அதை மேடையேற்றுவதிலும் விவேக் ஷங்கரின் பிரயத்தனா குழு ஒரு முன்னுதாரணம். இப்போதுதான் “நதிமூலம்” பார்த்த மாதிரி இருக்கிறது. உடனே இன்னொரு புதிய நாடகம். இம்முறை நதிமூலம் இல்லை! நாசவேலைகளின் மூலம், பவுத்திரம் எல்லாமும்! ஹாக்கர்ஸ் எனப்படும், கணிப்பொறி வலைப்பதிவுகளில், கன்னம் வைப்பவர்களின் கதை. அதன் மூலம் சமூக விரோதிகள் தண்டிக்கப்படுவது மெசேஜ்! இன்செப்ஷன் என்று நீங்கள் கத்துவது தெரிகிறது. ஆனால் தமிழ் நாடக மேடைக்கு இந்தக் கரு ஒரு எக்ஸப்ஷன்! ஒரே […]
கோடை நாடக விழாவில் அரங்கேறிய நாடகம். இம்முறை காமெடி களம். நவீன தொழில் நுட்பத்தை கையில் எடுத்து சாடியிருக்கிறார் ஆசிரியர் நாணு. வழக்கம்போல நாடகத்தை தாங்கி நிற்பவர் வெட்டரன் காத்தாடி தான். இனி அவரை ‘விட்’ டரன் என அழைக்கலாம். சகஜ வார்த்தைகளே அவர் வாயிலிருந்து புறப்படும்போது ஹாஸ்ய லேகியம் ஆகி விடுகின்றன. நவீன தொழில் நுட்பம் அறியாத அப்பா சிவராமன், அவரை விட ஐ க்யூ குறைவான அவரது மனைவி லலிதா. மென்பொருளில் புகுந்து […]
புனைப்பெயரில் கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்” சொன்னவர், சுஹாசனி. நடிகை, இயக்குனர், காமிராஉமன், பிலிம் இன்ஸ்ட்டியூட் அட்மிஷன் இதெல்லாம் அடைய காரணமாக இருந்த அடையாளமான கமல் அண்ணன் பெண், சாருஹாசன் மகள் மற்றும் இன்றைய இண்டநேஷனல் அடையாளம் ஆன, மணிரத்னம் பெண்டாட்டி. சொன்ன இடம், அவரது கணவரும், தமிழ் சினிமாவின் GOD FATHER no..இல்லை “நாயகன்” என அவர் தம் குழுவால் சொல்லப்படும் […]
குச்சிபுடி நடனத்தில் யாமினி கற்றுத்தேர்ந்திருந்தது குறுகிய, மரபுக்குட்பட்ட பாமா கலாபம், கிருஷ்ண சப்தம், க்ஷேத்ரக்ஞ பதங்கள் மேலும் குச்சிப்புடி நிகழ்ச்சியில் தவிர்க்கமுடியாத தரங்கம் போன்றவைதான்., அவரது பரதநாட்டியப் பயிற்சியில் அவர் கற்றுத் தேர்ந்திருந்தது போல் பலதரப்பட்டதும், வளமானதுமாய் அவரது குச்சிபுடி பாடாந்திரம் இருக்கவில்லை. வேறெந்த கலைஞரின் நடனக்கலைத் தேர்ச்சியும், பாலசரஸ்வதியினுடையது கூட, யாமினியின் பாடாந்திரம் பலவகைப்பட்டதும், வளமுடையதாகவும் இருந்ததில்லை. பாலசரஸ்வதியின் பாடாந்திரத்துக்கு எண்ணிக்கையில் ஈடு இணை கிடையாதுதான். ஆனால் அதன் எண்ணிக்கைப் பெருக்கம் முழுவதுமே இரட்டை […]
சில சமயம் குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. பெரிய படங்களை எடுப்பவர்களுக்கு பாடமாகவும் அமைகின்றன. ‘மட்டில்டா’ தந்த இன்ப அதிர்ச்சியில் யூ ட்யூபில் நான் கண்டெடுத்த பொக்கிஷம் தான் தலைப்பில் உள்ள படம். மேரி கேட் ஓல்ஸன், ஆஷ்லி ஓல்ஸன் என்கிற இரட்டையர் சகோதரிகள் பிரதான பாத்திரம் ஏற்று இந்தப் படத்தைத் தங்கள் சின்னத் தோள்களில் தாங்கி இருக்கிறார்கள். அம்மா ரோண்டா தாம்ஸனாக சிந்தியா கியரி ஒரு விவாகரத்தான இளம் தாயைக் கண்முன்னே கொண்டு வருகிறார். […]
யாமினி தன் நடன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய ஆளுமையின் ஒரு அம்சமாக விருந்தது. அவரது மெல்லிய மென்மையான தேகம் அவர் இஷ்டத்துக்கு சிறுத்தையென பாயும், தன் பலத்தைக் காட்ட விரும்பினால். தன் சலனத்தில் ஒரு அழகைக் காட்ட விரும்பினால், அந்தப் பாய்ச்சல் மானைப் […]
– கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை! சித்தார்த் திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆச்சர்யம் புதுமுகம் தீபா சன்னதி. அழகாகவும் இருக்கிறார். அசத்தலாகவும் நடிக்கிறார். அவர் சமந்தா ஜாடையாக இருப்பதில் ஏதும் உள்குத்து இல்லை என நம்புவோம். சிம்புவுக்குப் பிறகு, எடுப்புப் பல்லோடு வலம் வருகிறார் சித்தார்த். ஒரு சென்டிமெண்டாக இந்தப் படம் வெற்றி பெறும். உடல் மொழி, நடை, வசன உச்சரிப்பு எனப் பிரமாதப்படுத்தி இருக்கிறார் சித்து. […]