நாடக விமர்சனம் – தெனாலிராகவன்

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  நகைச்சுவை வரலாற்றில், உடல் மொழி, வசனம், சம்பவம் என பல கூறுகள் உண்டு. அதின் எல்லாக் கூறுகளையும் அலசி, ஒரு நாடகமாக வந்திருக்கிறது சிருஷ்டி நாடகக் குழுவின் புதிய நாடகம் “ தெனாலி ராகவன்” மூத்த மேடைக் கலைஞர் கரூர் ரங்கராஜனைத் தவிர மேடையில் எல்லோருமே புதுமுகங்கள். நாடக இயக்குனர் பரவலாக அறியப்பட்ட கிரேசி மோகன் குழுவினரின் ‘அப்பா’ ரமேஷ். கதை வசனம் எழுதிய சிருஷ்டி பாஸ்கர் மற்றும் நிர்வாகத்தை கவனிக்கும் பிரியா வாசுதேவனின் தலைமையில் […]

திரைவிமர்சனம் – பப்பாளி

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

    ஏழையின்ஏற்றத்தைக், கல்விக்கண்கொண்டுபார்த்திருக்கும்படம். சம்பவவறட்சியாலும், அதிகநீளத்தாலும், துவண்டுபோய்விட்டது. சரண்யாவும்இளவரசும்வித்தியாசநடிப்பால், ஏதோகொஞ்சம்காப்பாற்றுகிறார்கள். படத்திற்கும்பழத்திற்கும்சம்பந்தமேயில்லை. மூளையக்கசக்கி, ஏதேனும்இருக்கிறதாஎன்றுஆராய்ந்தால், ஒப்பனைகலைந்தகதைநாயகன்செந்திலின்முகம்ஞாபகம்வருகிறது. மஞ்சள்பழத்தில்பச்சைகீற்றுகள்போல, சிலகோணங்களில்செந்திலின்முகம், சிவப்பில்கரியகோடுகளுடன்காட்சியளிக்கிறது. நாயகிஇஷாரா, குறைந்தபட்ஜெட்படங்களுக்குகிடைக்கும்நடிகை! அவரிடம்அதிகம்எதிர்பார்க்கமுடியாது. கொடுத்தவேலையைகெடுக்காமல்செய்ததற்குஅவருக்குபாராட்டுக்கள். காமெடிக்காகசேர்க்கப்பட்டஜெகன், இதுஒருதிரைப்படம்என்றுஉணரவேயில்லை. காட்சியில்அவர்முகம்இல்லாதபோதும், பேசிக்கொண்டேயிருக்கிறார். இம்சை! சிங்கம்புலியும், தான்ஜெகனுக்குசளைத்தவரில்லைஎன்று, மேலும்வெறுப்பேற்றுகிறார். சரண்யாபொன்வண்ணனுக்குஇன்னொருஅம்மாவேடம். கொஞ்சம்சுதந்திரமனப்போக்குஉள்ள, காதலைஎதிர்க்காதஅம்மாபாத்திரத்தில், அவர்மிளிர்கிறார். அதேபோல்இளவரசு, செந்திலின்அப்பாவாக, ஒருதள்ளுவண்டிசாப்பாட்டுகடைக்காரரை, கண்முன்கொண்டுவருகிறார். விருதுநகர்வட்டாரமொழியில் “இஞ்சரு” என்றுஅவர்சொல்வதுதனிஅழகு. பலகாட்சிகளில், இளவரசும், சரண்யாவும், தனித்தனியாகஸ்கோர்செய்தாலும், க்ளைமேக்ஸ்காட்சியில், வசனமே பேசாமல், வெட்கிதலைகுனியும்இளவரசு, மௌனப்புரட்சிசெய்திருக்கிறார்! பலே! நாயகியின்அப்பாவாகவரும்நரேன்கச்சிதம். விஜய்எபினேசரின்இசை, மலிவுவிலைஉணவகம். ரகத்திற்குஒன்றாகபோட்டுகடையைபரப்பியிருக்கிறார். “காதல்புட்டுக்கிச்சு” ஒருடாஸ்மாக்குத்துபாடல். […]

நான் தான் பாலா ( திரை விமர்சனம்)

This entry is part 18 of 26 in the series 13 ஜூலை 2014

    இயக்கம்: கண்ணன். ஓளிப்பதிவு : அழகிய மணவாளன். இசை: வெங்கட் கிருஷி. பாடல்கள்: அமரர் வாலி, நா.முத்துகுமார், இளையகம்பன். கலை: விஜயகுமார். நடிப்பு: விவேக், வெங்கட்ராஜ், தென்னவன், ஸ்வேதா, சுஜாதா, செல் முருகன், மயில்சாமி. நேரம்: 133 நிமிடங்கள். ____________                           ____________________________ அழுத்தமான கதை ஒன்று, சரியான திரைக்கதை, பாத்திரப்படைப்புஇல்லாத கோளாறால், அந்தரத்தில் தொங்குகிறது. அதை இன்னமும் இறுக்கி, இறுதி ஊர்வலத்திற்கு அனுப்புகிறது, புதுமுக நடிகர்கள் மற்றும் இயக்குனரின் ஆசுவாச முயற்சி. விவேக்கின் கதை […]

முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)

This entry is part 15 of 26 in the series 13 ஜூலை 2014

  இயக்கம்: ராம்குமார். இசை: சீயான் ரோல்டன். ஒளிப்பதிவு: பி.வொ.சங்கர். எடிட்டிங்: லியோ ஜான் பால். நடிப்பு: விஷ்ணு விஷால், ஆனந்தராஜ், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ். நேரம்: 148 நிமிடங்கள்.   அழுத்தமில்லாத கதையை, சிரிப்பூக்களால் நிரப்பி, புன்னகைக் கதம்பமாக ஆக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமாருக்கு வாழ்த்துக்கள். இரண்டரை மணிநேரம், கதையை இழுத்து ரசிகனின் பொறுமையைச் சோதித்த குற்றத்திற்காக, திரைக்கதை தேர்வில் பெயில். இசைஞானியும் இசைப்புயலும் சேர்ந்த கலவையாக முத்திரை பதித்திருக்கும் இசைத் தென்றல் சீயான் […]

திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )

This entry is part 15 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  இரண்டு வருடங்கள், அஞ்ஞாத வாசம் புரிந்தாலும், தனது இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை, வைகைப்புயல் வடிவேலு அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’ எல்லா வயதினரும் வடிவேலு ரசிகர்கள் தான் என்பதைக், குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அரங்கில் எழுப்பிய சிரிப்பொலி சுட்டிக் காட்டுகிறது. வடிவேலு தன் பிராண்ட் காமெடியை மாற்றாமல், அப்படியே வைத்திருப்பது ஆறுதலான விசயம். அவரது உடல் மொழியும், அங்க சேஷ்டைகளும் அக்மார்க் ரகம். சபாஷ்! எங்கிருந்தய்யா பிடித்திருக்கிறார் அந்த கதை நாயகியை.. உச்ச […]

திரை விமர்சனம் – மான் கராத்தே

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

    கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே “ சிவகார்த்திகேயன் அவசரப்பட்டிருக்க வேண்டாம். நான்கைந்து படங்களிலேயே சூப்பர் ஸ்டார் ஆகும் அவரது கனவை, அவரது  நல விரும்பிகள் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கலாம்.. அப்படி செய்யாததால் மீசையில் ஓட்டாத மண்ணாகப் போயிருக்கிறது இந்தப் படம். ஏ.ஆர். முருகதாஸின் கதை வித்தியாசமானது. படத்தின் ஆரம்ப […]

திரை விமர்சனம் விரட்டு

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

    முழுக்க முழுக்க தாய்லாந்தில்,, ஓடும் ரயிலில், எடுக்கப்பட்ட தமிழ்படம். ஒரு நுனி சீட்டு திரில்லராக வந்திருக்க வேண்டியது.. திரைக்கதை எனும் சிக்னல் கோளாறால் கொஞ்சம் நொண்டுகிறது. தாய்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளையும், வானுயர பாரம்பரிய கட்டிடங்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது பிரசாத்தின் கேமரா. ஒரு திரில்லருக்கு வேண்டிய தடதடக்கும் இசையை தந்திருக்கிறார் தரன் குமார். பாடல்களும் பரவாயில்லை ரகம்.  ஆனால் அதிக திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, பட்த்தை காலை வாரி விட்டு விட்டது. ஆனாலும் […]

உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா

This entry is part 2 of 23 in the series 23 மார்ச் 2014

                                                       ” தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் ”   18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில்   ( அன்ன அரபியா – இஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய் )  ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இது.  திருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும்  திரைப்பட சம்பந்தமான பல புத்தக […]

சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

    இதுவரை ஊழல் எதிர்ப்பாக வந்த படங்களின் கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். கொஞ்சம் முருகதாஸின் ரமணாவை எடுத்துக் கொண்டு வசனங்களில் சில சித்து வேலைகளைச் செய்து ஓரளவு பார்க்க கூடிய படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் உண்டு. அரவிந்த் சிவசாமி ( ஜெயம் ரவி ) கல்லூரி  படிப்பு வரை, வெளியுலகமே தெரியாமல், காந்திய வழியில் வளர்ந்த இளைஞன். வேலை அவனை வெளியில் தூக்கிப் போடுகிறது. நேர்மை, நாணயம், கட்டுப்பாடு, கடமை என்பதெல்லாம் வெறும் […]

என்னை ஆட்கொண்ட இசையும், நானும்

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

அரவக்கோன் சிறுவயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த நான் அதைக் கற்கத் தேர்ந்தெடுக்காதது எப்படி என்று பிறரால் வினவப்படும்போது தக்க பதில் தெரியாமல் தவித்ததுண்டு. இளமையில் எப்போதும் கிட்டும் பொருள்கொண்டு விரல்களால் தாளங்களை தோன்றிய விதமாய் தட்டிக்கொண்டிருப்பது எனக்கு உற்சாகமான பொழுதுபோக்கு. வீட்டில் பெரியவர்களுடன் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவேன். மாலையில் ஒரு குழுவாகக் கிளம்பி மயிலாப்பூர், லஸ் போன்ற இடங்களில் அவ்வப்போது நிகழும் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று இரவில் நடந்தே திரும்புவது என்பது […]