இருபது வருடங்களாகப் பிரிந்து கிடக்கும் பெற்றோரைச், சேர்த்து வைக்கும் மகனின் முயற்சியும், அதற்கு உதவும் அவன் காதலியும் தான் கதை. கே. பாலச்சந்தர் தொடங்கி, விசு, மவுலி, வெங்கட், வியட்நாம் வீடு சுந்தரம், வேதம் புதிது கண்ணன் என்று பல ஜாம்பவான்கள், உறவு சிக்கல்களை நாடகமாக்கி, துவைத்து காயப் போட்ட பின், அதையே கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சந்திரமோகன். முன்னவர்களின் நாடகங்கள், அழுத்தமான காட்சி அமைப்புகளினாலும், ஷார்ப் வசனங்களாலும், நினைவில் அழியா இடத்தைப் பெற்றன. கூடவே நாகேஷ், […]
(பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. இப்பவள விழாவைக் கொண்டாடும் வகையில் பேசாமொழி இணைய இதழ் வெளியிட்ட மலருக்கு எழுதிய கட்டுரை..) ஆங்கிலத்தில் motion picture, film, cinema என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுவதை தமிழில் திரைப்படம், சினிமா, சலனப்படம் என்று பல பெயர்களில் குறிப்பிடுவது வழக்கமாகியுள்ளது. நாம் பேசும் இந்தப் புதிய 20- நூற்றாண்டு கலைக்கு, புதிதாகத் தோன்றிய தொழில் நுட்பத்திலிருந்து பிறந்த ஒரு கலைக்கு, திரும்பவும் தொழில் நுட்பமும் கலையாகப் […]
இரு வேறு மொழிகள். இரண்டும் திரைப்படங்கள். கதை கரு ஆவிகள் இருக்கிறதா இல்லையா என்பது. எதேட்சையாக நான் அடுத்த அடுத்த நாளில் தமிழில் ‘பிசா’வும் ஹிந்தி மொழியில் ‘தலாஷ் 2’டும் பார்க்க நேர்ந்தது. அதன் தாக்கம் தான் இந்தச் சிறு கட்டுரை. உலகிலே எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. சிலவற்றை நம்ப முடியும். அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடியும். சிலவற்றை நம்பவே முடியாது. அது எப்படி நடந்திருக்கும், ஏன் நடந்தது, எதற்காக நடந்தது என்று அறிவுப்பூர்வமாக […]
அமெரிக்கக் கலாச்சாரத்தில், அமெரிக்காவில் வளரும், பிள்ளைகளின் மொழியிலிருந்து, அன்னியப்படும் தமிழைப் பற்றிய, ஒரு உணர்வுப் பூர்வமான குறும்படம். கிருஷ்ணமூர்த்தி குமாரமங்கலம் ராமசாமி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் சுவாமிநாதன் வீட்டிற்கு, வரும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது படம். கிராமத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்த ஒரு தென்னிந்தியனின் மன உணர்வோடு இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் கலாச்சாரத்தோடு ஒப்ப மறுக்கும் காட்சிகள் மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தேக ஆரோக்க்¢யம் என, எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் அமெர்¢க்கர்கள், குவளையில்லாத “ ஸ்பவுட்” […]
பொம்மரிலு பாஸ்கரால் இயக்கப்பட்டு, வெற்றியடைந்த ‘ஆரஞ்ச்’, மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. வாழ்க்கை முழுதும் காதல் இருக்கும் என்று நம்பும் பெண்ணும், காதல் கொஞ்ச நாட்கள் தான் இருக்கும். பிறகு, சொல்லப்படும் பொய்களே அதன் ஆயுளை நீட்டிக்கும் என்று உணரும் ஆணும், ஆஸ்திரேலிய பின்னணியில் நடத்தும் ‘நீயாநானா’ பார்த்தவுடனே காதலிப்பதும், பொய் சொல்ல வேண்டி வந்தால், அதை முறித்துப் போடுவதுமான கொள்கை கொண்ட ராம் ( ராம் சரண் ), ஜானுவை ( ஜெனிலியா டிசோசா ) […]
BEN BRANTLEY இப்போதெல்லாம், நாடகங்களுக்கு சென்றபோது மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடைய எதிர்வினைகளை நீங்களே கேள்வி கேள்வி கேட்டிருப்பதும், மறு சிந்தனை செய்திருப்பதும் அதிகம் இருக்காது. சுயபரிசோதனை என்னும் கலை, இப்போதெல்லாம் பழகிப்போய், அதிர்ச்சி கூட ஏற்படுத்துவதில்லை. ஆனால், பரிசோதனை நாடகங்களின் ராடார் விழாவின் கீழ் திறக்கப்பட்டுள்ள “கணேஷ் vs மூன்றாம் பேரரசு” (Ganesh Versus the Third Reich – இதில் மூன்றாம் பேரரசு என்பது ஹிட்லரின் அரசாட்சியை குறிக்கிறது) என்ற குறிப்பிடத்தகுந்த நாடகம், அதில் நடப்பதையெல்லாம் […]
தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், […]
விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை மேலும் ஆராயலாம். கோவை குண்டு வெடிப்பிற்காக(1998) கைது செய்யப்பட ஒரு தீவிரவாதி, அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி(2002) தான் என்று காலத்திற்கு பிந்தைய ஒரு சம்பவத்தை கூறுகிறாராம்! இது படத்தில் உள்ள ஒட்டையாம். இப்படி ஒரு கண்மூடித் தனமாக கருத்தை எப்படி வெட்கமே இல்லாமல் வெளியே சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை! இதை சொல்லும் தீவிரவாதி அப்துல்லாவிடம் ‘நீ ஏன் கோவையில் குண்டு வைத்தாய்?’ என்று கேட்கப் படவில்லை. அவன், கோவையில் குண்டு […]
மா.பாலசுப்பிரமணியன் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அம்ஷன் குமாரின் `சினிமா ரசனை` நூலின் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு விழா சென்னையில் 29-12-2012 அன்று புக் பாயிண்ட் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மூத்த திரைப்பட இயக்குனர் பாலு மகேந்திரா தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்தவர்களை படப்பெட்டி இதழின் ஆசிரியர் குழு சார்பாக மா.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நூலை இயக்குனர்கள் மகேந்திராவும் வசந்தும் இணைந்து வெளியிட முதல் பிரதிகளை இயக்குனர் பாலாஜி சக்திவேல் , கலை இலக்கிய விமர்சகர் […]
பத்து நிமிடங்களில் ஒரு திரில்லரைச் சொல்ல முடியும் என்று நிருபித்திருக்கிறார் அனில். மூன்றே பாத்திரங்கள். இரண்டு ஆண், ஒரு பெண். இடையில் நுழையும் காதல். அதனால் ஏற்படும் மரணங்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் ரியாவுக்கு ஒரு செல்பேசி அழைப்பு. “என் பி கம்பென்¢யில் உன் ரிசூயுமைப் பார்த்தேன். உன்னை தேர்ந்தெடுத்து விட்டார்கள். உடனே வேலையில் சேர்ந்து விடு “ “ மை காட்.. தாங்க்யூ.. எங்கே வர வேண்டும் ?” “ இந்திரா நகர் எக்ஸ்டென்சனில் பூலுவப்பட்டி […]