வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

  வாஸந்தியின் நாவல்,  “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும்  மேல்,  நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம்  சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் […]

இலக்கிய நிகழ்வு சுஜாதா விருது விழா

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

  சிறகு இரவிச்சந்திரன்   தேர்தல்சுரம்கொஞ்சம்குறைந்ததால், தன்னை  ஆசுவாசப்படுத்திக்கொண்டு,மீண்டும்இலக்கியம்பக்கம்திரும்பிஇருக்கிறார்உயிர்மைபத்திரிக்கையின்ஆசிரியர்மனுஷ்யபுத்திரன். தனதுஆதர்சஎழுத்தாளர்சுஜாதாவின்பிறந்தநாளானமே 3ம்தேதிசென்னையில்ஐந்தாவதுஆண்டாகதொடர்ந்து,ஆறுபிரிவுகளில்விருதுவழங்கும்விழாவினைநடத்தினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, சிற்றிதழ், இணையம் என சுஜாதா ஆர்வம் கொண்டு பங்காற்றிய அத்துணை பிரிவுகளிலும் ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் சுஜாதாவின் மனைவி திருமதி சுஜாதாவால் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா சாலையில் உள்ள குளிரூட்டப்பட்ட புக் பாயிண்ட் சிற்றரங்கு, ஆறுமணிக்கெல்லாம் பாதி நிறைந்து விட்டது. வழக்கம்போல் மனுஷ்யபுத்திரன் மேடைக்கு முன்னால், தன் தோழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். வரவேண்டிய பிரபலங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, […]

திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இயக்கம்: ஏ.ராமகிருஷ்ணன் இசை: கண்ணன் ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம் பாடல்கள் : அண்ணாமலை   136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது. கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம். மீராஜாஸ்மின்  சாயலில்இருக்கும்ஆத்மியா, நடிப்பில்சக்கைபோடுபோடுகிறார். காதலும்குரூரமும்நொடிக்கொருதரம்மாறும்அவரதுமுகபாவங்கள்பளிச். தோழியாகவரும்புதுமுகம்காருண்யாராம்நல்லதேர்வு. நாயகனின்நண்பன்புள்ளியாகவரும்சென்ராயன், நல்லநகைவெடிகளைகோர்த்திருக்கிறார். பலே. இமான்அண்ணாச்சியும், லொள்ளுசபாசுவாமிநாதனும்அவருக்குசரியானபக்கவாத்தியங்கள். காவல்நிலையகாட்சிகள்காமெடிதர்பார். வேலைவெட்டிஇல்லாமல்ரோட்டில்சுற்றிதிரியும்ராமகிருஷ்ணனும், சென்ராயனும்சில்லறைதிருடர்கள். அடித்தபணத்தைஒரேஇரவில்காலிபண்ணிவிட்டுபோலீசிலும்மாட்டிக்கொள்ளும்அல்லக்கைகள். ராமகிருஷ்ணனைதுரத்திதுரத்திக்காதலிக்கிறாள்பணக்காரப்பெண்ணானதிவ்யா ( ஆத்மியா ) ஆனால்அவளதுதுரத்தலுக்குப்பின்னால்ஒருகாதல்இருக்கிறது. காதலனுடன்ஓடநினைக்கும்அவளதுதிட்டத்தை, திருடன்ராம்கெடுத்துவிடுகிறாள். அவன்செய்யும்கலாட்டாவால், வீடேவிழித்துக்கொள்கிறது. திவ்யாவின்காதல்க்ளோஸ். அவசரமாகவெளியேறும்காதலனும்விபத்துக்குள்ளாகி, மனநிலைமருத்துவமனையில்.. தன்காதலைக்கெடுத்து, காதலனைநோயாளிஆக்கியராமைபழிவாங்ககாதலிப்பதுபோல்நடிக்கிறாள்திவ்யா. காதல்வயப்படும்அவனை, போலீசில்மாட்டவைத்துதுன்புறுத்துகிறாள்.  ஆனால்காவல்அதிகாரிஜெயப்பிரகாஷின்மகளைக்கற்பழித்துகொன்றவர்களில், முக்கியமானவன்திவ்யாவின்காதலன்தான்என்கிறஉண்மைதெரியவரும்போது, ராமகிருஷ்ணனிடம்திவ்யாமன்னிப்புகேட்பதோடுபடம்முடிகிறது. பெண்களைக்குறித்தவிமர்சனவசனங்களுக்குஇளைஞர்கள்மத்தியில்  எகவரவேற்பு. […]

கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

சுப்ரபாரதிமணியன் ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து இயங்கும் சமூக ஆய்வுத்துறையின் அனுபவங்களைக் கொண்ட முறைப்படுத்தலில் இவை அலசல்கள், உரையாடல்கள் , எதிர்வினைகள் என்று முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓர் ஆவணப்படத்தயாரிப்பு சார்ந்த அனுபவ விசயங்கள் அப்படம் தயாரிப்பில் சாத்தியமாகாத போது நாவலின் வெளிப்பாடு என்ற […]

‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

‘அசோகனின் வைத்தியசாலை’ நொயல் நடேசனின் புதிய நாவல் பற்றிய ஒரு பார்வை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். ‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல்,அவுஸ்திரேலியாவில்,மிருகவைத்தியராகவிருக்கும்,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு,இதுவரை ஒரு சிலர் முகவுரை,கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளி என்ற விதத்தில்,இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும,இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று […]

யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

11.05.2014 அன்று ஆம்பூர் கலை பண்பாட்டு இயக்கம் சார்பாக நிழல் வெளி அரங்கில் கவிஞர் யாழன் ஆதியின் கவிதை தொகுப்பு ‘யாருமற்ற சொல்’ நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் நூல் குறித்தான எனது அறிமுக உரை. ————————————————————————————— யாருமற்ற சொல் – கவிஞர் யாழன் ஆதி சாதியத்தீ விட்டுச்சென்ற மிச்சங்கள் சாம்பலாய் நினைவுகளை விட்டகலாது குவிந்து கிடக்கிற தர்மபுரி மாவட்டம் நத்தம்,கொண்டம்பட்டி,அண்ணாநகர் குழந்தைகள் தொலைத்தது வீடுகளையும் புத்தகங்களையும் பொம்மைகளையும் மட்டுமல்ல.தங்களது குழந்தமையை இழந்து ‘மிரட்சி’யின் பிடியில் […]

கம்மங்கதிரின் வாசத்தோடு – குமாரகேசனின் ” வண்டிப்பாதை ” நாவல்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால் கொங்கு வேம்பாக தூரம் போகும் நான் கொங்கு நாட்டு வாழ்க்கை எனும் விதத்தில் நாவல் குமாரகேசனை கவனமாய் படிக்க வேண்டியிருந்தது. நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே […]

திரை ஓசை வாயை மூடி பேசவும்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

சிறகு இரவிச்சந்திரன் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இயக்கிய ‘ வாயை மூடி பேசவும்’ அதிக கீறல்கள் இல்லாமல் தப்பித்திருப்பதற்கு பாராட்டுக்கள். மலையாளப்படங்களின் பரிச்சயம் இல்லாத தமிழ் ரசிகனுக்கு, துல்கரின் நீள் சதுர முகமும், கோணல் சிரிப்பும் கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் படலாம். ஆனால் அட்சர சுத்தமாக ( மலையாள வாடை இல்லாமல் […]

ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  பாவண்ணன்   1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக  நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார்.  அவர் […]

உஷாதீபனின் 13-வது சிறுகதைத் தொகுப்பு “நான் அதுவல்ல…!” – நூல் மதிப்புரை

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை.                                                                                          ஒரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு […]