திரை விமர்சனம் நீ எங்கே என் அன்பே

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  சிறகு இரவிச்சந்திரன்   மகாபாரதத்தின் அர்ஜுனனை பெண்ணாக மாற்றி, தேரோட்டும் கண்ணனை, காவல் அதிகாரியாகக் காண்பித்து, குருஷேத்திர போரை கணவனை மீட்கும் போராட்டமாக அமைத்து விட்டால் ‘ நீ எங்கே என் அன்பே ‘ என்கிற பழைய கள் புதிய மொந்தையில்.. இந்தியில் ஹிட்டடித்த ‘ கஹானி’ கதையை, தெலுங்குக்கு மாற்றி, தமிழிலும் வெளியிட்டு, அதில் அனாவசிய மாற்றங்கள் செய்து, கொட்டாவி விட வைத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா. அதிக பில்ட் அப்புடன் வரும்  நயன்தாரா, […]

திரைவிமர்சனம் என்னமோநடக்குது

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

  சிறகுஇரவிச்சந்திரன் ஒருநல்லதிரில்லராகவந்திருக்கவேண்டியகதை, தேவையற்றதிரைக்கதைபின்னல்களால், சராசரியானபடமாகமாறியிருக்கிறது. இயக்குனர்ராஜபாண்டியின்கைநழுவிப்போன ‘ என்னமோநடக்குது ‘ நம்பிக்கைதுரோகத்தால்பகையாகிப்போனஇரண்டுகூட்டாளிகள். இடையில்காணாமல்போகும்இருபதுகோடிரூபாய்பணம். சிலந்திவலையில்சிக்கிக்கொண்டபூச்சியாக, அந்தக்களவிலமாட்டிக்கொள்ளும்அப்பாவிஇளைஞன். அவனைக்காதலிக்கும்இளம்பெண். அவளதுபடிப்பிற்கானபணத்தேவை. இந்தஇடியாப்பசிக்கலை, மேலும்சின்னாபின்னமாக்கும்இயக்குனரின்திரைக்கதை. படம்முடியும்போதுரசிகன்மனதில்எழும்குரல் ‘ அப்பாடா!’ போஸ்டர்ஒட்டும்விஜய் ( வசந்த்விஜய் ) அவன்தாய்மரகதத்துடன் ( சரண்யாபொன்வண்ணன்) சேரியில்வாழ்கிறான். விடிகாலையில்நகரில்போஸ்டர்ஒட்டிவிட்டு, கிடைக்கிறகாசில்முழுபோதையுடனும்மட்டன்பிரியாணியுடனும்அவன்வீடுவருவதுவாடிக்கை. ஒருசேரிச்சண்டையில்மதுவுடன் (  மஹிமா ) அவன் ‘ மோதல் ‘ ஆரம்பிக்கிறது. வழக்கமானஉரசல்பின்ஒட்டல்காட்சிகளுக்குப் ;பிறகு, மதுவின்மேல்நாட்டுபடிப்புக்காககடன்வாங்கப்பட்டஐந்துலட்சம்பணம், திருப்பமுடியாமல்நெருக்கடியாக, அதைஈடுசெய்யும்முயற்சியில்தாதாபர்மாவுடன் ( ரகுமான் ) சேர்கிறான்விஜய். ஆனால்பர்மாவின்பணம்இருபதுகோடியைவிஜய்எடுத்துக்கொண்டுபோகும்போது, அதுபார்த்திபனின் ( பிரபு ) ஆட்களால்களவாடப்படுகிறது. பர்மாவின்ஆட்களால்மதுகடத்தப்பட, […]

குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் நூல்:

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

கோவிந்த் கருப் மலருக்கு மலர் வந்துமர்ந்து, அம்மலரின் தேனை உறிஞ்சிச் சென்று வளமான எதிர்காலத்திற்கான சேமிப்பாய் சேர்த்து பின்னொரு நாள் மனிதனிடம் தேனை முழுதும் இழக்கும் தேனீ வகையறா இல்லை…. மலரெனினும் மலமெனினும் இலக்கேதும் அன்றி அமர்ந்து செல்லும் , உலகம் விலக்கும், ஈ யும் அல்ல… தேனீ, ஈ இரண்டையும் நாம் அருகே சென்று முத்தமிட்டதில்லை… ஒன்று கொட்டும் , இன்னொன்று வியாதி தரும்… ஆனால், நான் இன்னொரு வகையறா…. – பூப்பூவாய் தேடிச் சென்று […]

திரை ஓசை டமால் டுமீல்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

சிறகு இரவிச்சந்திரன்   வசதியும் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட கணநொடியில், சின்ன ஒழுக்க மீறல், ஒரு இளைஞனுக்கு விளைவிக்கும் சங்கடங்களை, ஓரளவு சுவாரஸ்யமான படமாக இயக்கியிருக்கும் புதிய இயக்குனர்  ஸ்ரி பாராட்டுக்குரியவர். ஒரு திரில்லருக்குத் தேவையான நறுக் எடிட்டிங் ( பரமேஷ் கிருஷ்ணா ), துல்லிய ஒளிப்பதிவு ( எட்வின் சகாய் ), தடதடக்கும் பின்னணி இசை ( தமன் ), துருத்திக் கொண்டு தெரியாத இயல்பான செட்டிங்ஸ் ( ஆறுச்சாமி ), 120 நிமிடங்களில் படத்தை நகர்த்தும் […]

திண்ணையின் இலக்கியத் தடம் -32

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

அரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -32 சத்யானந்தன் நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு அஞ்சலி இயக்குனர் வான் கோ- நிறைவேற்றப் பட்ட ஃபத்வா- ஆசாரகீனன்- வான் கோ மொரோக்கோவிலிருந்து நெதர்லாந்துக்குக் குடியேறிய இஸ்லாமிய தீவிரவாதியால் கொல்லப் பட்டார். படைப்பு மக்கள் தெய்வங்களின் கதைகள்- 8- அ.கா.பெருமாள்- வெங்கலராசன் கதை படைப்பு […]

புள்ளின்வாய்கீண்டான்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

வளவ. துரையன் புள்ளின்வாய்கீண்டானைப்பொல்லாஅரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக்கீர்த்திமைபாடிப்போய் பிள்ளைகளெல்லாரும்பாவைக்களம்புக்கார் வெள்ளிஎழுந்துவியாழமுறங்கிற்று புள்ளுஞ்சிலம்பினகாண்போதரிக்கண்ணினாய் குள்ளக்குளிரக்குடைந்துநீராடாதே பள்ளிக்கிடத்தியோபாவாய்நீநன்னாளால் கள்ளந்தவிர்ந்துகலந்தேலோரெம்பாவாய். இஃதுஆண்டாள்நாச்சியார்அருளிச்செய்ததிருப்பாவையின்பதின்மூன்றாம்பாசுரம். இப்பாசுரத்தில்போதரிக்கண்ணினாய்’ என்றுகூப்பிடுவதிலிருந்துதன்கண்ணழகைக்கொண்டுகர்வம்கொண்டும்கிருஷ்ணன்தான்நம்மைத்தேடிவரவேண்டுமேதவிரநான்அவனைத்தேடிச்செல்லவேண்டியதில்லைஎன்றும்உள்ளேகிடப்பவளைஎழுப்புகிறார்கள். கடந்தபதின்மூன்றாம்பாசுரத்தில்  ’மனத்துக்கினியான்என்றுஇராமன்பெருமைபாடினீர்களே’என்றுஅவள்கேட்கிறாள். உடனேஅவர்கள்முன்பு’இராமனையும்சொன்னோம்; கண்ணனையும்சொன்னோம்இப்போதுஇருவரையும்சேர்த்துப்பாடுகிறோம்’என்கிறார்கள். மேலும்கண்ணனும்இராமனும்ஒன்றுதானே? யசோதைகண்ணனைஅழைக்கையில்இராமனைக்கூப்பிடுவதுபோல்; ”வருகவருகவருகவிங்கேவாமனநம்பீ வருகவிங்கேகரியகுழல்செயவாய்முகத்தென் காகுத்தநம்பீவருக’              என்றுதானேஅழைக்கிறாள். ஆயர்சிறுமிகள்  தங்கள்சிற்றிலைக்கண்ணன்சிதைக்கவருகையில், “சீதைவாயமுதம்உண்டாய்எங்கள்சிற்றில்சிதையேல்”  என்றுதானேஇராமன் பெயர்சொல்லிவேண்டுகிறார்கள். பொய்கையில்வஸ்திராபகரணம்செய்தபோதுகோபியர்கள் “இரக்கமேன்ஒன்றும்இலாதாய் இலங்கைஅழித்தபிரானே’  என்றுதானேமுறையிடுகிறார்கள். எனவேநாம்இருவரையும்இணைத்துப்பாடுவோம்எனஎண்ணுகிறார்கள். அதனால்தங்கள்குலதெய்வமானகண்ணனைமுதலில் ‘புள்ளின்வாய்கீண்டான்’ என்கிறார்கள். இங்குகொக்குவடிவில்வந்தஅசுரனின்கதைபேசப்படுகிறது. கம்சனால்ஏவப்பட்டபகன்எனும்அசுரன்கொக்கின்வடிவம்எடுத்துக்கண்ணனைவிழுங்கவந்தான். கண்ணன்அதன்வாயைக்கிழித்துஅவனைமாய்த்தான்.  பெரியாழ்வாரும்இதை, ‘பள்ளத்தில்மேயும்பறவையுருக் கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’ என்று அருளிச் செய்வார். பொதுக்கோ […]

க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

க.பஞ்சாங்கம், புதுச்சேரி. விமர்சனத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது; இலக்கிய விமர்சனம் ஒரு கல்வித்துறையாக முன்னேறுவதற்காக இலக்கியத்தைத் தியாகம் செய்து விட முடியாது. விமர்சகன், பிரதிக்குள் நுழைந்து வாசகரைத் தரிசிக்க விடாமல் நிற்கும் நந்தியாக விடக் கூடாது. படைப்பாளியை நோக்க விமர்சகன் என்பவன் இரண்டாம் தரமானவனே என்றெல்லாம் விமர்சன வேலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையே பேசிக் கொண்டு, ஆனால் தொடர்ந்து தெளிவான ரசனை அனுபவம் கொண்ட ஒரு விமர்சகராகவும் இயங்கியவர் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். ஏறத்தாழ அவருடைய விமர்சனக் கட்டுரைகள் […]

இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

  நகரத்தாரின் இலக்கிய ஆர்வமும், ஆன்மீக ஈடுபாடும், வரலாற்று உண்மைகளில் ஒன்று. தொன்று தொட்டு இலக்கியம் வளர்த்த செட்டிநாட்டு அரசர்களின் கருணையில், இந்த நூற்றாண்டின் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது இலக்கிய சிந்தனை அமைப்பு. லட்சுமணன் வழிகாட்டலில், மாதந்தோறும் ஆழ்வார்பேட்டையில், ஒரு  சிறிய அரங்கில், கடைசி சனிக்கிழமை அன்று கூடும் இலக்கிய ஆர்வலர்கள் கூட்டம். தொடக்க காலத்தில், இங்கு வருகை தராத இலக்கிய பிரபலங்களே இல்லை எனலாம். ஆனால் அப்போது அவர்கள் பிரபலங்கள் இல்லை என்பது தான் நினைவில் […]

ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்

This entry is part 2 of 25 in the series 20 ஏப்ரல் 2014

பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி   [மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6/4/2014இல் குவால லும்பூரில் நடத்திய கருத்தரங்கில், இணைப் பேராசிரியர் டாக்டர் வே.சபாபதி (இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்) படைத்த கட்டுரையின் சுருக்கம்] .   முன்னுரை   ஆளப்பிறந்த மருதுமைந்தன் நாவலை எழுதியவர் மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் அமரர் ப.சந்திரகாந்தம்.  இந்நூல் ஒரு வரலாற்று நாவல்.  பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் […]

பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை

This entry is part 22 of 25 in the series 20 ஏப்ரல் 2014

வில்லவன் கோதை அறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை  அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில்  இரவு பகலாக உழைத்திருக்கிறோம். இருந்தபோதும் எங்களில் பெரும்பாலோர்  இந்த  ஏற்காட்டை அப்போதெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதற்கான  அவகாசமோ அதைப்பற்றிய விருப்பமோ அன்றைக்கு எங்களுக்கு இருந்ததில்லை.   சேலம் ரயில்நிலையத்தின் பரபரப்பான முதல் நடைமேடையில்  சற்றும் எதிர்பாராத ஒரு அன்பான வரவேற்பு எங்களுக்கு கிடைத்தது. வாரியப்பணிகளில் எங்களுக்கு இளையவரான   சேலம் முத்துகுமார் எங்கள் வருகையை எப்படியோ  அறிந்து  மிடுக்கான உடையில்  […]