ஆகஸ்ட் 15

This entry is part 9 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

  ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தி னாலும், அது நம் மனித துயரைத் துடைக்க […]

அம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘

This entry is part 2 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

சிறகு இரவிச்சந்திரன் முகநூலில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார் தமிழ் ஸ்டூடியோ அருண். வழக்கமாக அவர் நடத்தும் நிகழ்வுகளுக்கு இப்போதெல்லாம் என்னால் போக முடிவதில்லை. ஒன்று எழும்பூரில் நடத்துவார். இல்லை பெரியார் திடலில் நடத்துவார். இருசக்கர வாகனத்தை, அதிக தூரம் ஓட்டும் வயதை, நான் கடந்து விட்டதால், இப்போதெல்லாம் பேருந்துதான். ஆனால், அதில் பயணப்படும் போது கிடைக்கும் அனுபவ அவஸ்தை, என் போன்ற மூத்த ‘குடி’மகன்களுக்கு சொல்லி மாளாது. இம்முறையும் அசிரத்தையாகத்தான், அருணின் தகவலை ஆராய்ந்தேன். அட! மீண்டும் […]

இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்

This entry is part 23 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன்.  குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். கவிதை அன்றிலிருந்து அவரது பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அந்தக் கவிதை, பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் சக பயணிகள் அனைவரையும் கவர்ந்த, […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’

This entry is part 9 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

    எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணங்களும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும் முந்திய தடங்களைக் காட்டும் சங்கிலித்தொடர் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும்.. தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும், வந்தபின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழலுக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது உருவாக்கிக்கொண்டே போகிறது. […]

விக்ரமாதித்யன் கவிதைகள் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை முன் வைத்து..

This entry is part 22 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

-ஸ்ரீரங்கம் சௌரிராஜன்   ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை விக்ரமாதித்யன் தந்துள்ளார். இதில் ‘கவி மனம்’ என்ற தலைப்பில் கே.ராஜேஷ்வர் அணிந்துரை தந்துள்ளார். கவிஞனைப் பற்றித் தத்துவப் பின்னணியில் மிக அழகாக எழுதியுள்ளார்.     கரடி சைக்கிள் விடும்போது     நாம்     வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா?     என்ற கேள்வி எவ்வளவு நம்பிக்கை தருகிறது! அணிந்துரையின் முடிவில், உரைநடையில் கவித்துவம் சுனாமி வேகத்தில் பாய்ந்துள்ளது. தத்துவ விசாரம் உச்சம் பெறுகிறது! ‘வார்த்தை’ என்பது பலமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’

This entry is part 15 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

கடினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம். நாவல் படிக்கிறவர்கள் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிபவர்கள் நாவல் படிப்பதாகத் தெரியவில்லை. பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை. படிப்பவர்கள் அதைக் கேலி […]

அசல் துக்ளக் இதுதானோ?

This entry is part 14 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

சிவகுமார். ”சோ” வென்று கேலியுடனும் குதூகலத்துடனும், நடப்பில் உள்ள ஆட்சி பற்றிய எள்ளலும், நையாண்டியும் சேர்த்துக் கொடுத்த, சோவின் “முகமது-பின்-துக்ளக்” ஒரு விதம். தி மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வடிவமைத்திருந்த “துக்ளக்” இன்னொரு விதம். இரண்டுமே 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவனின் சாகசக் கதையேதான். இவன் 26 ஆண்டுகள் ஆட்சியில் அம்ர்ந்திருந்தான். மேலே சொன்ன இரண்டாவது படைப்பின் முடிவில், அந்த மன்னன் மீது ஒரு பரிதாபமே உண்டாகின்றது. பத்ம பூஷண் (நாடகாசிரியர்) கிரீஷ் கார்னாடை நாம் நிறைய தமிழ்படங்களில் […]

நீங்காத நினைவுகள் 13

This entry is part 10 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

“தாமரை மணாளன்” எனும் புனைபெயரில் எழுதிக்கொண்டிருந்த ஓர் அருமையான எழுத்தாளர் இருந்தார். அவரைப் பற்றி இந்த்த தலைமுறையினரில் எத்தனை பேருக்க்குத் தெரியும்? தெரியவில்லை. (படிப்பது குறைந்துகொண்டு வருவதாய்ச் சொல்லப்படும் இந்நாளில் தற்போதைய எழுத்தாளர்களைப் பற்றியே அநேகருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். அப்படி இருக்க, சிலஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்ட தாமரை மணாளனைப் பற்றி அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறதாம்?) அற்புதமான அந்த எழுத்தாளர் பற்றி மற்ற எழுத்தாளர்களே பேசாத நிலையில் பிறரைப் பற்றி என்ன சொல்ல! 1968 இன் இறுதி […]

மாலதி மைத்ரி கவிதைகள் – சங்கராபரணி தொகுப்பை முன்வைத்து…

This entry is part 25 of 30 in the series 28 ஜூலை 2013

  ஸ்ரீரங்கம் சௌரிராஜன்                 புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரியின்(1968) முதல் கவிதைத் தொகுப்பு ‘சங்கராபரணி’ இதில் 50 கவிதைகள் உள்ளன. புதிய சிந்தனைகள் வழி அழகான படிமங்கள் உருவாக்குதல், மொழியை லாவகமாகக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கவை. எனினும் இருண்மையும் அமைந்துள்ளது. கருப்பொருள் தேர்வில் வித்தியாசம் காணப்படுகிறது.   ‘தெய்வ உடல்’ வித்தியாசமான– நான் அறிந்தவரை எந்தப் பெண் கவிஞரும் கையாளாத கருப்பொருள்.– பூப்பெய்திய ஒரு பெண் தனியே படுத்துறங்கும் முதல்நாள் அனுபவம் இதில் […]

இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்

This entry is part 24 of 30 in the series 28 ஜூலை 2013

இராஜா வரதராஜா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் – 613 005. நாம் வாழும் இவ்யுகமே ஒரு விளம்பர யுகமாகும். எங்கு நோக்கினாலும் கேட்டாலும் விளம்பரங்களைத் தான் காண முடிகின்றது. தனி மனிதன் ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரச் சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பது மறுக்க – மறைக்க முடியாத உண்மையாகும். இதழ்களில் விளம்பரங்கள்: விளம்பரங்கள் இல்லையென்றால் இதழ்களை நடத்த முடியாத சூழ்நிலையைக் காலந்தோறும் இதழ்கள் பல நின்று போனதை வைத்துத் […]