நிலவொளியில் தன்மீது சித்திரங்களை எழுதிப் பார்க்கும் கவிதை

This entry is part 12 of 27 in the series 23 டிசம்பர் 2012

  தாளாச் சுமையில் தடுமாறும் என்பேனா முனை முழுங்கிக் கிடக்க என்னைத் தூரநின்று வேடிக்கை பார்க்கின்றன யார்யாரோ எழுதிச் செல்லும் கவிதைகள் கவி ந.நாகராஜனின் இந்த வரிகளில் உண்மையில்லை என்பதை அவரது கவிதைகளே நமக்கு உணர்த்திச் செல்கின்றன. அவர் எழுதிய கவிதைகள் அவரிடமே வேடிக்கை காட்டுகின்றன,தூர நின்று கவனித்துக் கொண்டிருந்த வாசகன் மிகுந்த நெருக்கத்தோடு அக்கவிதைகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்ள முயல்கிறான். நீண்டதொரு மக்கள் சார்பு இலக்கியப்பாரம்பர்யத்திலிருந்தும்,கலை இலக்கியப் பெருமனற் பண்பாட்டுக் களத்தை உருவாக்கிய பேராசான் பிறந்த […]

நெத்திலி மீன்களும் சுறாக்களும்

This entry is part 9 of 27 in the series 23 டிசம்பர் 2012

படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது, குழு அரசியலை முன் வைப்பது, தன் படைப்புக்ளுக்கான மார்க்கெட்டை  நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,  அதிர்ச்சி மதிப்பீடுகளின் மூலம் தன் படைப்புகளுக்கான நிலையை முன் நிறுத்துவது என்று குறுகி போய்விட்டான்.  ஆனால் படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  சக எழுத்தாளர்களின் படைப்புகளை ரசிப்பதை எடுத்துரைப்பது,  தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு அவர்களின்  படைப்புச் சூழலை முன் வைப்பது, தான் சார்ந்த  அரசியலை முன் வைப்பது, தன் படைப்புகளுக்கான சூழல்  முயற்சிகளை […]

எழுத்துலக வேந்தர் இளம்பாரதி

This entry is part 8 of 27 in the series 23 டிசம்பர் 2012

சந்திப்பு:ஜெயஸ்ரீ ஷங்கர் எழுத்தாளர் பற்றிய விபரம்: [Raaja Rudra is the pen name of Prof. Rudra.Tulasidas (1933- ****). A polyglot, he translates into Tamil and English from various Indian languages. He has several published volumes of translations. Recipient of the Sahithya Akademi Award for translating Telugu Poems into Tamil. He is also called as ILambharathi, a well […]

சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

This entry is part 7 of 27 in the series 23 டிசம்பர் 2012

மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம் நூற்றாண்டு சாந்தலிங்க சுவாமிகள் யாரா யிருந்தால் என்ன? அவரைப் பற்றி எழுதியுள்ள ஆர். பங்காருசாமி என்பவருக்கு அந்த ஸ்வாமிகள் முக்கியமானவராகத் தெரிந்திருக்கிறார். தெரியாதவரைத் தெரிய வைப்பதும் ஒரு தொண்டு தானே. தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு […]

திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 3 of 27 in the series 23 டிசம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்கு திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களை சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், […]

மொழிவது சுகம் டிசம்பர் -15-2012 -பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

This entry is part 16 of 31 in the series 16 டிசம்பர் 2012

1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு பிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு […]

சுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’

This entry is part 24 of 31 in the series 16 டிசம்பர் 2012

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் மலிவுப் பதிப்பாக ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்’ வாங்கினேன். ஆழ்வார் பாடல்களின் கவிநயத்தை பலரது எடுத்துக்காட்டுகளில் ரசித்து, முழுதும் படிக்க விரும்பி வாங்கிய நூலை இன்னும் படித்தபாடில்லை. முறையான அறிமுகமும், வழிகாட்டுதலும் இருந்தால் ரசித்து அனுபவிக்கலாமே என்ற ஏக்கம் இருந்தது. சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜாதாவின் ‘ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தபோது அந்த ஏக்கம் தீர்ந்தது. சுஜாதா தன் சிறுகதைகள், நாவல்களால் மட்டுமல்லாமல் திருக்குறள் புதியஉரை, […]

கனவுகண்டேன் மனோன்மணியே…

This entry is part 19 of 31 in the series 16 டிசம்பர் 2012

  குணங்குடியாரின் பாடல்களில் அலைக்கழிப்பின் துயரம் தொடர்ந்து துரத்திக் கொண்டே வருகிறது. இறைத்தேடலை இதற்கான உபாயமாக காணவும் இது விருப்புறுகிறது. கீர்த்தனை பாடலொன்று நாயனைத்தேடி  நாயனே நாயனே நாயனே என்றும், மாயனே மாயனே மாயனே என்றும், தூயனே தூயனே தூயனே என்றும், நேயனே நேயனே நேயனே என்றும் கத்திக் கத்திக் தொண்டை கட்டிச் செத்தேனே என தொண்டைகட்டி செத்த வரலாற்றை தவிப்பைச் சொல்கிறது. அகத்தீசன் சதகத்தில் காகமாய் நின்று கதறிக்கதறி அழும் என்னை கையணைத்து அருள்புரியச் கோரும்குரல் […]

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

This entry is part 8 of 31 in the series 16 டிசம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார். மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக […]

மாறும் வாழ்க்கை – செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது சிங்கம்

This entry is part 4 of 31 in the series 16 டிசம்பர் 2012

கலாப்ரியாவின் சிறப்பான முன்னுரையோடு செல்வராஜ் ஜெகதீசனின் நான்காவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. நான்காவது சிங்கம் என்னும் தலைப்பின் வசீகரம், அசோக ஸ்தூபியின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் சிங்கத்தைப்பற்றிய கற்பனையைத் தூண்டுகிறது. கவிதையைக்கூட நான்காவது சிங்கத்தைப் பார்க்கமுடியாத ஒரு ஸ்தூபி என்று சொல்லலாம். அந்த எண்ணத்துக்கு வலிமை சேர்ப்பதுபோன்ற கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எழுதி எழுதி தமக்குரிய ஒரு கவிதைமொழியை ஜெகதீசன் கண்டடைந்துள்ளார் என்று சொல்லலாம். பல தளங்களைநோக்கி விரிவடையும் தன்மை கொண்ட ஒரு கவிதை முகம் […]