குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் […]
எஸ் ஜெயலஷ்மி 48. ஆலம் அமர் கண்டத்து அரன் ——-ஆலகால விஷத்தைத் தன் கழுத்திலே கொண்ட சிவன் தேவர்களும் அசுரர்களும் கூடி திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப் பட்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாமல் தேவர்கள் முறையிட்டபோது சிவன் அந்த விஷத்தை விழுங்கினார்.இதைக் கண்ட உமாதேவியார் தடுக்க அவ்விஷம் சிவனின் கழுத்திலேயே தங்கி விட்டது. சிவன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார். ஆலம் அமர் கண்டத்து அரன், ஆலமர […]
பி.கே. சிவகுமார் நமது அமெரிக்கக் குழந்தைகள் (மூன்று பகுதிகள்) – 2022ல் எழுதியது அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை – 2022ல் எழுதியது ஓர் அமெரிக்கக் கனவு – அக்டோபர் 26, 2023ல் எழுதியது மேற்கண்ட ஜெயமோகன் கட்டுரைகள் ஜெயமோகன்.இன் என்கிற அவர் இணையதளத்தில் கிடைக்கின்றன. அக்கட்டுரைகளை முன்வைத்து என் சில சிந்தனைகள்.. **** ஜெயகாந்தன் 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்தபோது அவரிடம் அறிவுரை கேட்டார்கள். அமெரிக்காவுக்கு அறிவுரை தர வரவில்லை என்ற ஜெயகாந்தன், இங்கிருக்கிற தமிழர்கள் பிற […]
குரு அரவிந்தன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அழைப்பின் பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரொறன்ரோவிற்குச் சென்ற வாரம் வருகை தந்திருந்தார். சென்ற சனிக்கிழமை 21-10-2023 கனடா இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில், மார்க்கம் நகரசபை மண்டபத்தில் ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் அவர் இலக்கிய ஆர்வலர்களுக்கு உரையாற்றினார். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, உரையைக் கேட்கும் ஆர்வத்தில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். […]
இந்து மதத்தின் இரு கண்களாக விளங்குவது 1)சைவம் 2) வைணவம். சைவ சமயத்தைத் தேவாரம் பாடிய மூவ ரோடு மணிவாசகரும் வைணவத்தைப் பன்னிரு ஆழ்வார்களும் போற்றிப் புகழ்ந்து வளர்த்தார்கள். இறைவனிடம் (திருமால்) ஆழங்கால் பட்டவர்கள் ஆழ்வார்கள் ஆனார்கள். தங்கள் பாசுரங் களில் திருமாலையும் அவன் எடுத்த பத்து அவதாரங்களையும், சிறப்பாக ராம, கிருஷ்ண, வாமன, நரசிம்ம அவதாரங்களையும் பாடிப் பரவினார்கள்.ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்கள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்யப்பிரபந்தம் என வழங்கப் பெறு கிறது. […]
கோ. மன்றவாணன் ஒவ்வொரு கதையும் நம்மைத் தூங்க விடாது. (சி. ஞானபாரதியின் “சந்திரமுகி” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) —கோ. மன்றவாணன்— “ஒவ்வொரு புத்தகமும் ஒரு முள்ளம் பன்றி; மூளைக்குள் போனதும் சிலிர்த்துக் கொண்டுவிடும்” என்ற கார்க்கியின் வரியில் இருந்து தொடங்குகிறது இந்தப் புத்தகத்தின் முன்னுரை. சி. ஞானபாரதி எழுதி உள்ள சந்திரமுகி சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க யாருடைய மூளையும் சிலிர்த்துக் கொள்ளும். இதை இலக்கிய சாட்சிப் பெட்டியில் ஏறி உரக்கச் சொல்லுவேன். இருபது, நாற்பது, ஐம்பது […]
சுலோச்சனா அருண் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 2023 தேசிய புத்தகவிரும்பிகள் தினத்தை ((National Book Lover’s Day)முன்னிட்டுக் கனடாவில் உள்ள ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ சர்வதேச ரீதியாகப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகம் வாசிக்கும் தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பங்குபற்றிய அதன் அங்கத்தவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு, இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற இடங்களில் உள்ள வாசகர் வட்டத்தினரிடம் இந்த வாசிப்பு நிகழ்வு பரீட்சார்த்தமாக […]
குரு அரவிந்தன் கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார். நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது […]
சி. ஜெயபாரதன், கனடா கலில் கிப்ரான் நூல் தொகுப்பு மேரியின் மேப்பிள் சிரப்பு காப்பக மகளிர் அணைப்பு முதியோர் விழைவது, இதழ் முத்தம் அல்ல முதியோர்க்கு தேவை , உடல் முயக்கம் அல்ல. தாம்பத்திய ஆத்ம உறவு ! பூமியில் மூப்புற்றோர் பூரணம் எய்திட தாம்பத்ய சேர்க்கை அளி. ******************** அன்றொரு நாள் காலை 6:30 மணிக்கு மருந்து வில்லைகள் தர ஆஷா அறைக்கு வந்தாள். முதியோர் தனிமையில் தவித்துள்ளது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பணிப் பெண்டிரும் இராப் […]