நிகழ்வு

வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க நிறத்தில் மின்னும் ஒரு மிடறு நீர்…

ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை

  ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காத‌லைப்ப‌ற்றி உருகி உருகிச்சொல்ல‌ காளிதாசனைத் தான் வாட‌கைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிட‌க்கிற‌து பாலிஷ் போட‌ வேண்டும் என்றான். க‌டித‌ம் எழுதினால் ஆபாச‌ம் என்பார்க‌ளே. அத‌னால்…

தூரிகை

  விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும். நாணம் கலைத்த‌ கடலெனும் கன்னி முத்தம்…

கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)

உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும் அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும். ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும் தருணமதில் கடலன்னையவள் கரைசேர்க்கும் மணற்குவியலதையும் சேர்த்தே சிதைக்கும் உம்மோடு…

தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலில் எனக்கு வேதனை தவிர வேறில்லை ஏது மில்லாக் காதல் எதற்கு ? உன் இதயத்தை அவளுக் களித்து அவளது இதயத்தை நீ பறிக்கப் போவது எத்தகை அறிவீனம்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்

+++++++++++++++ காதல் உபதேசம் +++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை…

பிறந்தாள் ஒரு பெண்

வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த கும்பல் விலக்கிப் பேறு பார்க்கச்சென்ற மாது நிசி கழிந்து முகம் தொங்கி திரும்பி வரக் கண்டு கூட்டத்தில் நிசப்தம்.…

சின்ன மகள் கேள்விகள்

இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம் போகணும் தூங்கு’ என்பேன் ’ குருவிகள்…

கையோடு களிமண்..!

பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்....! -------------------------------------- களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு....! --------------------------------------- தோண்டத் தோண்ட தீரவேயில்லை.... களிமண்..! ---------------------------------------- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்...! ------------------------------------------ களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான் .. பிரம்மன்..! -------------------------------------------- சுட்டதில் எந்தப்…

கவிதை

ஆயிரம் அர்த்தம் தனிமையை அருந்தும் போது மனம் மனிதர்களைத் தேடுகிறது வாடிய பூக்களைக் கண்டு மொட்டுக்கள் சிரித்தன பழுத்த இலை மரத்தினிடையேயான பிணைப்பை முறித்துக் கொண்டது கடல் மானுட இனத்திற்கு முடிவுரை எழுதப் பார்க்கின்றது ஓர் மழை நாளில் தான் என்…