சங்கத்தில் பாடாத கவிதை

This entry is part 32 of 42 in the series 1 ஜனவரி 2012

  எழுதிக்கொண்டிருந்த கவிதையை தென்றல் அடித்து கலைத்துக்கொண்டிருந்தது   எழுதி முடித்த சொற்களின் மேல் பல இடங்களில் அது தன் புள்ளிகளை கோலங்களை இட்டுச்சென்றது   சில வரிகளில் சந்திகளில் ஒற்று மிகுந்து அவற்றை வலுவாக்கியது   சில வரிகளில் ஒற்றுகளை சேதப்படுத்தி சொற்களைத் தனிமையில் நிற்கச்செய்தது.   இப்படி எல்லாம் செய்த தென்றல் பாதியிலேயே விட்டுச்சென்றுவிட்டது   கவிதையை முடித்து வைக்க இன்னொரு தென்றலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் யாரேனும் அதைக்கண்டால் கொஞ்சம் என்னிடம் அனுப்பி வையுங்கள். […]

கவிப்பொழுதின் அந்திமக்காலம்…

This entry is part 31 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு பறவையின் கடைசி சிறகு   இலை உதிர்த்த மரம் சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு மணி அற்றுப்போன கால் கொலுசு எதுவாகவும் இருக்கக்கூடும்   விடியல் என்பது குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும் தளிர் இலை தாங்கிய புது மரமாயும் படபடக்கும் புது பணத்தாளாயும் சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும் பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும் சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம்   இருக்கைகள் காலியாவதில்லை அவை மதிப்பு கூட்டுபவை என்றும் கூடுபவை வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை   […]

தென்றலின் போர்க்கொடி…

This entry is part 24 of 42 in the series 1 ஜனவரி 2012

பொற்கொடியாய்… நினைவில் நின்ற தென்றல்… இன்று….தானே.…புயலாய் மாறி…. உயர்த்தியது  போர்க்கொடி…! உன் ஆனந்தத் தாண்டவத்தில்….! உன்னோடு சேர்ந்து உன்னை எதிர்த்து… தலைவிரித்தாடி… கைமுறித்தது…தென்னை… முக்கி முனகி ஆடும்போதே… ஒடிந்து விழுந்தது முருங்கை… சளைக்காமல் ஆடியும்… முடிவில் பல கிளைகளைத் தவறவிட்டது அரசு..! தண்டோடு மடங்கியது வாழைக் கூட்டம்… தோற்று… வேரோடு படுத்தது வேம்பு…! வீதியெங்கும் மரங்களின் மறியல் போராட்டம்…! சூறைக் காற்றின் அகோர சுவடுகள்…! நகர்வலம் வந்து.. கடல்கடந்தது… தானே… தென்றல்….!! அல்ல…. அல்ல..புயல்…! ஆடிக் களைத்து வலியில் அழுதன மரங்கள்..! மரணத்தின் பிடிக்குள்… […]

நிழல் வலி

This entry is part 19 of 42 in the series 1 ஜனவரி 2012

சாமிசுரேஸ் என்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது ஊமையாய் முறிந்து போன புற்களை மெல்லத் தடவி வார்த்தேன் பதுங்கித்திரிந்த மரங்களுக்கு இறகுகள் பொருத்தினேன் என் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன் கண்கள் விரியத்தொடங்கின ——– இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை யாரிடம் கேட்பது வாழ்வின் சுவடுகளில்லை ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த பிரளயம் அரங்கேறி முடிந்து மௌனமும் கதறலுமே எதிரொலியானது உயிர் மட்டும் துடித்து எரிகிறது மயான தேசத்தின் துர்நாற்றம் தீர இன்னும் எத்தனை ஆண்டுகள் […]

ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்

This entry is part 18 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒரு நூற்றாண்டு தன் கடனை கழித்து விட்டிருந்தது காலச் சக்கரத்தில் ஒரு பல் புதியதாய் முளைத்திருந்தது நூற்றாண்டுச் சாயமாய் அநேக தேசியச் சின்னங்கள் தோறும் சிகப்புத் திட்டுக்கள் தெறித்திருந்தன ஜன ரஞ்சகத்தின் நிகராய் கடவுள்களும் பெருத்திருந்தார்கள் கழிந்த யுகத்தின் சில காவியுடைகள் கண்ணாடிப் பெட்டகங்களில் பத்திரமாயின எப்படி நேசிப்பதென்றும் எங்ஙனம் சுவாசிப்பதென்றும் கட்டணமேற்றுக் கற்பித்தன கலாசாலைகள் இன்னமும் இவ்வுயிர் தாங்கி நிற்கும் இப்பூத உடலிற்கான வாழ்வாதாரங்கள் அமெரிக்க ஏகாபத்தியங்களென்றும் சுவாச நாளங்களுக்கான கருப் பொருட்கள் யூரோவும் டாலருமென […]

“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்

This entry is part 16 of 42 in the series 1 ஜனவரி 2012

ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு …………. ………. … சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் “கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. “அணிலாடு முன்றிலார்” எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது…. திடீரென்று அந்த எழுத்தாணி அதே சில பல ஆயிரம் ஆண்டுகளை விழுங்கியபின் கோடம்பாக்கத்தில் “கொல வெறியார்” ஆகி பாடல் எழுதினால்…………. சிநேகனுக்குள்ளிருந்து எத்தனை எத்தனை தனுஷ்கள் கருவுயிர்த்தனர்? இதோ கேளுங்கள்…… கீது கீது பேஜாரா கீதும்மே ! கசாப்புக்காரன் […]

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…

This entry is part 9 of 42 in the series 1 ஜனவரி 2012

சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் இப் பாதையொரு முடிவிலி இரு மருங்குப் புதர்களிலிருந்தும் வெளிப்பட்டிருக்கும் புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய் புதையுண்ட மனித உயிர்கள் காலக் கண்ணாடியை விட்டும் இரசம் உருள்கிறது அதில் தென்பட்ட விம்பங்கள்தான் புதையுண்டு போயினவோ வேர்களில் சிக்கியிருக்கும் உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும் உறிஞ்செடுத்த விருட்சங்கள் எவ்விசை கேட்டு வளரும் விதியெழுதும் பேனா எக் கணத்தில் முறிந்திடுமோ […]

இருத்தலுக்கான கனவுகள்…

This entry is part 7 of 42 in the series 1 ஜனவரி 2012

இழந்தது என்னவென்று தெரியவில்லைதான் ஆனாலும்… எதையோ இழந்ததான வலியில் உயிர் துவண்டு கசிகிறது. வாழ்தல் பற்றிய கனவுகளின் விலையாய் எதனை இழந்திருக்கக்கூடும் நான்? தெரியவில்லை. என் உள்ளார்ந்த விம்மலின் சத்தம் உன் ஆழ்ந்த மௌனத்துள் அமிழ்ந்துதான் போயிற்று! இருள்களின் எல்லை தாண்டிய பயணம் பற்றிய என்னுடைய கனவுகள் நடுவானிலேயே தம் சிறகுகளை இழந்துவிட்டனவா, என்ன! எழுந்து தொடரும் பெருமூச்சுக்களின் நீளத்தை நீ என்றேனும் அளந்து பார்த்திருக்கிறாயா, நண்பனே? உனக்கான வாழ்க்கையில் எனக்கான மணித்துளிகள்… அந்தோ! உன் வேலைப் […]

ஓர் பிறப்பும் இறப்பும் ….

This entry is part 5 of 42 in the series 1 ஜனவரி 2012

  எங்காகிலும் தட்டுபடுகிறதோ அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ? நீள் கோடுகளும் அங்காங்கே புள்ளிகளுமாய்.. அழகின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்த பிம்பமென தாவி தாவிப் பறக்கும் அது …?   மனம் கவர்ந்திழுத்த அதன் நினைவுகளில் அழுகிப்போன இதயங்களின் சுவடுகள் ஏதும் பதிப்பிக்க அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …   மெல்லிய இறக்கைகள் விரித்து பறக்கும் அவைகளில் கனந்து போன துன்பங்கள் கரைந்து போக … மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும் கரைக்க […]

இருட்டறை

This entry is part 2 of 42 in the series 1 ஜனவரி 2012

ஒளி அமிழ்ந்த ஓர் இரவு, நிலவு ஒரு நாள் தற்செயல் விடுப்பில்.. வானுலக தினசரியில் அறிவிப்பொன்று கொடுக்கலாம் விண்மீன்களைக் காணவில்லையென்று! கண்டுகொள்ளப்படாதிருக்க கறுப்புச்சாயம் பூசிக்கொண்ட மேகங்களை வெட்ட ஒரு மின்னலாவது வந்திருக்கலாம்! யாருமிலா எனதறையின் உட்சுவர்களும் இருளை உமிழ்ந்து கொண்டிருக்க, ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுக்கிறேன்.. என் தீப்பெட்டிக்குள் இருப்பதென்னவோ இரண்டு எரிந்து போன தீக்குச்சிகள் மட்டும்!