மீண்ட சொர்க்கம்

இத்தனை தூரம் கவிதையற்று வந்தவன் மனதில் தீக்குச்சி உரசிய சிரிப்பில் நீ விதைத்த வார்த்தைகள் வனவாச காலத்து முடிவைச் சொன்னது. கழைக்கூத்தாடியின் கவனமாய்ப் பின்னிய வார்த்தைகள் கொண்டு எழுதாமலேயே போன அந்தப் பத்தாண்டுகளின் சூன்யம் ஞாபகத் துளைகளில் வழிகிறது. காலத்தின் மிரட்டல்…

ஆலமும் போதிக்கும்….!

போகும் வழியில் புரிந்து போனது.. சமுதாயம்..ஜனநாயகம்.. சமத்துவம்..கற்றுத்தந்தது.. வழியிலொரு ஆலமரம்..! சுமை தாங்கும் நிம்மதியில் தான்.. எத்தனை விழுதுத்தூண்கள்..! மரத்தின் விழுதுகளா...? அத்தனையும் மதவிழுதுகள்... தாங்குகிறது இந்தியா..! நடுப்பரப்பை பிடிக்கவென்றே... பறவையாய் விரித்தது கிளைகள்.. அத்தனையும் சாதிக்கிளைகள்... விழுதுகளை தாங்குமா....கிளைகள்..? மரத்தின்…

கவிதை

எச்சத்தாற்காணப்படும் உட்கார உறங்க களிக்க இசை பாட கூடு கட்ட முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உணவுகொடுத்து பசியாற்றிய மரம், விழுங்கிய பழத்தின் விதையை பிறிதொரு இடத்தில் எச்சம் வழி ஊன்றச்செய்த பறவை. ---------------- உருப்படியான கவிதை சலவைக்குச்சென்று திரும்பிய துணிகளில் போடாத…

எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)

  சு.சமுத்திரம் =========== எழுத்து நிறைய கடல் உண்டு. ஒரு துடுப்பு தேடும் துடிப்பு உண்டு. பி.எஸ் ராமையா ================ ம‌ணிக்கொடியை கொடி அசைத்து ஓட்டியவர் இவ‌ரே. சாவி ==== மாற்றிப்ப‌டியுங்க‌ள். அமெரிக்காவுக்கு "விசா" இவ‌ர‌து "வாஷிங்க்ட‌னில் திரும‌ண‌ம்" ம‌ணிய‌ன் ‍========…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்…

அப்பாவின் சட்டை

ஒரு மழை நாளின் மதிய வேளையில் தொலைந்து போன பொருளை பரணில் தேடிய போது கிடைத்து தொலைத்தது தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன அப்பாவின் கிழிந்து போன சட்டை   அ.லெட்சுமணன்

பேரதிசயம்

அந்திவரை வெயில் அழகும்.. பிந்திவரும் இருள் அழகும்.. வானுடுத்த உடுவழகும்.. பானுவிடும் கணையழகும்.. மண்ணுலகில் இல்லையெனில் - மாந்தர் நிலை என்னவாகும்..? “காற்று” வீச மறந்தால்.. ப+மி சுற்றமறுத்தால்.. மேகம் அசையாது போனால்.. தேகமும் உள்ளமும் என்னவாகும்! புவி ஆகர்சம் இல்லையென்றால்..…

தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?

தாகூரின் கீதப் பாமாலை - 1 எங்கு போய் மறைந்தாள் ? மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார் வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல்…

இவள் பாரதி கவிதைகள்

நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில் ஆட்டம் முடியுமுன்…

ஐங்குறுப் பாக்கள்

அரசுப் பாடம் காற்று மிரட்ட காலத்தின் சமச்சீர் பக்கங்களை அழுதுகொண்டே நடுங்கியபடி படிக்குது மெழுகுவர்த்தி ஐந்தாம் படை கடலின் ரகஸ்யங்களை கடத்திக் கரைசேர்க்குது அலைகள் தவணை முறையில். காற்றின் உபயம் மூச்சு முட்டி மூங்கிலில் வழிகிறது இசை குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சியில்…