கிருமி நுழைந்து விட்டது

This entry is part 19 of 41 in the series 13 நவம்பர் 2011

காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது! மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன்! அதிர்ச்சியும்.. நிசப்தமும் நிலவிய தருணம் உள் நுழைந்தோம்.. நண்பர்கள் புடை சூழ! வேண்டாம்.. தொட்டு விடாதீர்கள். பல ராசிகளுக்கு அடித்து விடும். சில ராசிகளுக்கு ஒடிந்து விடும். – முஹல்லத் தலைவர் கூற்று! மினுங்கும் தகடுகளை கையிலெடுத்துக் கூறினேன்.. ராசியே இல்லாதவனுக்கு என்ன தான் நிகழுமென! நீ அறிந்திராய்.. உண்மையாய் உணர்வினிலே […]

கவிதை

This entry is part 22 of 41 in the series 13 நவம்பர் 2011

பூபாளம்   சிறகை கொடுத்த கடவுள் பறக்கவும் கற்றுத் தருவாரா அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது எனக்கு எப்படி பசியெடுக்கும் தனிமையில் அலைகளைப் பார்த்தபடி கடற்கரையில் நின்றிருக்கின்றாயா கூண்டுப் பறவைக்கு விடுதலை அளித்தபோது ஏற்பட்ட நிறைவை எப்போதாவது அனுபவித்திருக்கின்றாயா தாயின் கரங்களுக்கு அப்புறம் தென்றல் வருடிக் கொடுப்பது தானே மனதுக்கு இதமளிக்கின்றது தோல்வியின் மூலம் கற்கும் பாடங்களை எளிதில் மறந்துவிட முடியுமா சிகரத்தை அடைந்ததும் மனதில் வெற்றிடம் ஏற்படுவதில்லையா காயம்பட்ட இதயங்களுக்கு வார்த்தைகள் தானே ஒத்தடம் கொடுக்கின்றன […]

கவிதை

This entry is part 24 of 41 in the series 13 நவம்பர் 2011

1.நாள் தோறும் அண்மிக்கின்றேன்… இரக்கமுள்ள மனசே! உன் இருதயத்தில் விழுந்தேன் இறகில்லாமல் பறக்க வைத்தாயே… கருணையின் கடல் நீ என்று தெரிந்த பின்னால் தான் என் வாழ்வெனும் படகில் மிதந்து வந்தேன் உனக்குள்… ஆயினும் தோழி எனக்குமட்டும் உன் அன்பினில் ஒரு துளி தரமறுத்தாய்..! சிலருக்கு கடல் நீ, எனக்கொரு துளியாய் சுருங்கி விட்டாய்! வாழ்வது சில நாள் அதற்குள்ளே பாசத்தைப் புரிவது சிலர் தான்..! நீ தூரத்திலே ஒரு புள்ளியாய் போனாய், என் வானத்திலே நீ […]

கிணற்று நிலா

This entry is part 8 of 41 in the series 13 நவம்பர் 2011

குமரி எஸ். நீலகண்டன் கிணற்றுக்குள் விழுந்து விட்டது நிலா. வாளியை இறக்கி நிலாவைத் தூக்க முயல்கையில் வாளித் தண்ணீரில் வரும் நிலா மீண்டும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது. அசையும் கயிறுக்கு அஞ்சி ஆழ் கிணற்றினுள்ளேயே துள்ளி விழுகிறது என்றான் நண்பன். இல்லை.. வாளி சிறிய குளமென்று வர மறுத்து பிடிவாதமாய் அதைவிடப் பெரிய குளமென மீண்டும் கிணற்றிலேயே விழுந்து விடுகிறது என்றேன் நான். குமரி எஸ். நீலகண்டன் பழைய எண்-204, புதிய எண் – 432. D7, பார்சன் […]

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்

This entry is part 18 of 41 in the series 13 நவம்பர் 2011

  வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் கிருமிகளென   வார்தெடுத்த சர்பமொன்று சாத்தானின் நிழலென ஊடுருவி மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும் எரிமலையின் பொருமலாய்   அந்தி சாய்கிற நேரத்தில் எரியும் சிவந்த தழலோடு வாய் பிளந்து அபகரிக்கும் பொசுங்கும் நினைவு -சாம்பலை   பொழுது புலராத முன்பனிக்காலத்து மழுங்கின படலங்களினூடே பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள் விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும் […]

அமீதாம்மாள்

This entry is part 25 of 41 in the series 13 நவம்பர் 2011

வெள்ளம் குருவிக் கூட்டோடு சாய்ந்தது மரம் என்ன ஆனதோ? நேற்றுப் பொரித்த குஞ்சுகள்   வெள்ளத்தோடு நகர்கிறது கூரை சில தட்டான் பூச்சிகளுடன்   சங்குச் சக்கரமாய்ப் பாம்பு அந்த ஒற்றைச் சுவரில் சில நொடிகளில் மரணிக்கப் போகிறது அதோ அந்த சுவர்ப் பல்லி   வாக்காளர் அட்டை ரேசன் அட்டை வேலை தேடும் சான்றிதழ்கள் பத்திரங்கள் பள்ளிப் புத்தகங்கள் அத்தனையும் ஊறுகின்றன புண்ணாக்காய்   இனி கோழிகூடக் கொத்தாது இருக்கும் அரிசியை   இலவசங்களெல்லாம் பயணிக்கின்றன […]

தீர்க்கப் படாத சமன்பாடுகள்…

மேலும் பூரணப்படுத்தப்படாத பக்கங்கள் இருக்கட்டும் – இன்னும் தீர்க்கப்படாத சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கு… நீருக்குள் பிடித்த நிலா கையில் இருந்து எவ்வளவு தூரம்..? நீங்காத நினைவுகள் இதயத்திலே எந்த பாகம்..? தொலைந்து போன கால வெள்ளம் எந்தக் கடலில் சங்கமிக்கும்? தொல்லை கொடுக்கும் சுவாச காற்று வளியில் என்ன சதவீதம்..? ஒரு துளிக்கண்ணீர் விழுந்துடைந்தால் இதயத்தில் எத்தனை சுமை நீங்கும்..? ஓருயிர் செற்று மடிகையிலே எத்தனை கண்ணீர் துளி சேரும்..? தீர்வு கிடைக்கும் வரை அப்படியே இருக்கட்டும் அவை […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -4)

This entry is part 36 of 41 in the series 13 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “பொறுமையுடன் விரைந்து செல். வாய்ப்புக்கள் வாசலுக்கு வரும் போது சோம்பிக் கிடக்காதே. அவ்வழியில் சென்றால் உன் தவறுகள் தவிர்க்கப் படும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலரின் முதல் நோக்கு இதய நிலத்தில் இறைவன் மானிடத் துக்கு விதைத்த வித்து போன்றது ! காதலர் முதல் முத்தம் வாழ்வு மரக்கிளை முனை யிலே முளைத்த முதல் பூ […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)

This entry is part 38 of 41 in the series 13 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இம்மாதிரி தான் இளங் காளை ஒருவன் தேடி வருகிறான் ஒரு குரு நாதரை நோக்கி ! அது போன்று தான் சேய் ஒன்றும் தாய் முலையில் வாய் வைக்கப் போகும் தன் ரகசியத் தாகம் அறியாது ஆயினும் தலை தானாகத் திரும்பிக் கொண்டு ! மனித இனம் படிப் படியாய் வழி வழியாய் புலம் பெயர்ந்து அறிவு ஞானம் வளர்ச்சி அடைந்து வருகுது […]

நம்பிக்கை

This entry is part 51 of 53 in the series 6 நவம்பர் 2011

ப.பார்த்தசாரதி. துரு பிடித்த ஜாமெட்ரி பாக்ஸ் ஒன்றை பல்லால் கடித்து திறந்த குழந்தை தினமும் அரிசி போட்டாள் என்றாவது ஒரு நாள் மயிலிறகிலிருந்து மயில் வருமென நம்பிக்கையில்.