காமம்

எப்பொழுதாவது என்னில் உறைந்த சில பொழுதுகளை பாசியென அடர்ந்திருகி விட்ட சில நியாபகங்களை சாத்தானாய் மெல்ல என் உடல் பற்றி வெளியேற அவள் தம் பிழிகளின் வியே தூபம் காட்டிக் கொண்டிருப்பாள் நிசி நேர ஓர் புகை மூட்ட கனவைப் போன்றும்…

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…

சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம் சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து பாரம் சுமக்கும் உடல் அறியும் பருமன் குறைக்கும் ரகசியங்களை மெலிந்த தேகத்தோடு இருந்தவன் உரையாடிக் கொண்டிருந்தான்…

சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்

காவல் இல்லாத தோட்டங்களை சுதந்திரமாக மேய்கின்றன கட்டாக்காலிகள் கொண்டாட்டமும், களிப்புமாய் அவைகள் காணிக்காரனின் சுதந்திரமோ கம்பிகளுக்குப் பின்னால் கிழக்குச் சமவெளிகள் திகட்டிவிட்டதால் வடக்கில் வாய் நீள்கிறது கடைவாயூறும் கட்டாக்காலிகளைக் கட்டி வைக்கவோ கல்லால் அடிக்கவோ விடாமல் காவல் காக்கிறது இறையான்மை ஊரான்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ பிறர் பின்னால் சென்று +++++++++++++++++++ கூக்குரல் மெதுவாய் நிற்கிறது ஓநாய் வருகுது ஓடுகிறோம் வெவ்வேறு திசைகளில் கிடைத்துள்ள ஆதாயங் களை நினைத்துக் கொண்டு ! ஆனால்…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர்…

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

'ஓ பரமபிதாவே' துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று ஆச்சியின் அழுகை ஓலம் ஆஸ்பத்திரி வளாகத்தை அதிரச் செய்திருக்கக் கூடும் சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை கண்டிக்கு அனுப்பியிருந்தது…

என் மனைவியின் தாய்க்கு

சு.மு.அகமது   முடிவின் ஆரம்பம் அழுகுரல் விசும்பலுடன் ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும் மரணம் என்ற சொல்லுக்கு அருகிலான பயணமும் நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும் சுருங்கின வயிறின் முடிச்சுக்களாய் உயிர்ப்பின் முகவரி தொலைத்து தொலைப்பில் உழலும் அறிமுகம் தேசாந்திரியின் அழுக்குப்பையில்…

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை

  மாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன்.   அழுக்கடைந்த குடிப்பக மூலையில் ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில் கோணலாய் நிற்கும் மேசையில் காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.   முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல்…

ஐம்புல‌ன் அட‌க்க‌ம்

ஐம்புலனை அடக்கிச் செறித்த அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சோம்பலைத் தின்று கனவு முளைத்தது. பெருமான் பெருமாள் முல்லா இயேசு புத்த‌ன் வந்து அமர்ந்தனர் என் ஞான முற்ற‌த்திற்கு. அவ‌ர்க‌ளுக்கான‌ தேநீர் த‌யாரிப்பின் மும்முர‌த்தில் தொலைவில் இருந்த‌ க‌ண்ணாடி போதித‌ர்ம‌னை உள்வாங்கியிருந்த‌து. தேநீர்…

எல்லாம் தெரிந்தவர்கள்

அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டிருந்தது அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள் இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும் கீழாடையாய் மீண்டும் ஏற்றி அந்நிகழ்வுகளை பத்திரப்படுத்தினார்கள் மாந்தர்கள் வல இட உள் வெளி புறமெல்லாம் உறுப்புகள் நீண்ட ஆக்டோபஷாய் அதற்கு உருவமிடத்…